10 March 2013

உங்கள் செல்போன் ஒரிஜினல்தானா

உங்கள் செல்போன் ஒரிஜினல்தானா..! கண்டுபிடிப்பது எப்படி..?




நீங்கள் அதிகம் விலைக்கொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் செல்போன்கள் அனைத்தும் ஒரிஜினல்தானா என்பதை சோதித்துப் பார்ப்பது தற்போது கட்டாயமாகும்.

சில ஆயிரம் ரூபாய் முதல் பல ஆயிரம் ரூபாய்வரை கொடுத்து ஒரு புதிய மாடல் செல்போனை வாங்கும்போது, அதனுடைய உண்மைத்தன்மையை அறிய வேண்டும் அல்லா..?

உண்மையான நிறுவனத் தயாரிப்பாக இருக்க வேண்டும் இல்லையா? உண்மையான நிறுவனத்தைப் போன்றே தற்போது போலியான தயாரிப்புகள் தற்போது விலைக்கு வந்து அசல் எது? போலி எது என்று கண்டுபிடிக்க முடியாதவாறு எந்த வித்தியாசமும் இல்லாமல் காணப்படும்.

இவ்வாறான போலி தயாரிப்பு மொபைல்களைக் கண்டறிய கீழ்க்கண்ட வழிமுறைகள் உங்களுக்கு உதவும்.

முதலில் நீங்கள் உங்கள் மொபைல் போன் ஒரிஜினல்தானா என்பதைக் கண்டறிய International Mobile Equipment Identification எனப்படும் IMEI எண்ணை அறிந்துகொள்ள வேண்டும்.

உங்கள் மொபைலில் IMEI எண்ணைக் கண்டுபிடிப்பது எப்படி..?

சாதாரண செயல்பாட்டின் மூலம் IMEI எண்ணைக் கண்டறிய முடியும். உங்கள் மொபைலில் *#06# என தட்டச்சிடுங்கள்...உடனே உங்கள் மொபைல் போனிற்கான IMEI எண் காட்டபடும். அந்த IMEI எண்ணை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

அந்த IMEI ண்ணை ஒரு SMS ஆக தட்டச்சிட்டு 53235 என்ற எண்ணிற்கு SMS செய்துவிடுங்கள். இப்பொழுது உங்கள் பதில் SMS ஆக Success என்ற செய்தி வந்திருக்கும். அப்படி வரவில்லையென்றால் உங்கள் மொபைல் போலியானது என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம்.

IMEI
எண்ணானது பதினைந்து இலக்க எண்ணாக இருக்கும்...

உங்களுடைய மொபைல் தயாரிப்புக்குரிய நாடுகளையும், தரத்தையும் இந்த IMEI எண்களை வைத்துக் கண்டறிய முடியும்.

அதாவது நீங்கள் குறித்துவைத்த IMEI எண்ணில் 7, 8 வது இலக்க எண்கள்

1. 0,2
அல்லது 2,0 என இருப்பின் ஐக்கிய அரபு எமிரேட்சில் அசெம்பிள் செய்யப்பட்டதாக இருக்கும். இதனுடைய தரம் குறைந்ததாக இருக்கும்.

2. 0,8
அல்லது 8,0 என இருபின் ஜெர்மனி நாட்டு தயாரிப்பாகவும், தரமானதாகவும் இருக்கும்.

3. 0,1
அல்லது 1,0 என இருப்பின் அது பின்லாந்து நாட்டுத் தயாரிப்பாகவும் தரமிக்கதாகவும் இருக்கும்.

4. 1,3
என இருப்பின் Azerbaijan நாட்டு அசெம்பிள் தயாரிப்பாகவும், தரம் குறைந்தும், உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியதாகவும் இருக்கும்.

இந்த முறையில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் இணையத்தின் மூலமும் நீங்கள் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home