4 April 2013

மஞ்சள் காமாலை - அறிகுறி & சிகிச்சை முறைகள்

மஞ்சள் காமாலை - அறிகுறி & சிகிச்சை முறைகள்






மஞ்சள் காமாலை என்பது ஒரு நோயே அல்ல. நோயின் அறிகுறி மட்டுமே. மஞ்சள் காமாலையை தொடக்க நிலையிலேயே கண்டுபிடித்து உரிய சிகிச்சை எடுத்துக்கொண்டால் குணமடைந்துவிடலாம். வயதான சிவப்பு அணுக்கள் மண்ணீரலில் (Spleen)அழிக்கப்படும்போது பிலிரூபின் (Spleen) என்ற நிறப்பொருள் உடலில் உற்பத்தி ஆகிறது. ரத்தத்தின் வழியே பிலிரூபின், பித்தநீர் மூலமாக மலம், சிறுநீர் வழியில் வெளியேறுகிறது. கல்லீரல் பாதிக்கப்பட்டாலோ, பித்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டாலோ கழிவுப்பொருளான பிலிரூபின் உடலிலேயே தங்கிவிடுகிறது. இதனால்தான் உடலில் மஞ்சள் நிறம் ஏற்படுகிறது. மது அருந்துதலாலும், ஹெபடைட்டிஸ் கிருமிகள் கல்லீரலைத் தாக்குவதாலும் கூட மஞ்சள் காமாலை ஏற்படுகிறது.

அறிகுறி

ஒருவருக்கு `மஞ்சள் காமாலை' என்றால் வாந்தி, குமட்டல், பசியின்மை, உடல் சோர்வு, வயிற்றின் வலதுபக்க மேல்பாகத்தில் வலி, மூட்டுவலி, வயிறுவீக்கம், காய்ச்சல், ரத்தக்கசிவு என ஒன்பது விதமான அறிகுறிகள் காணப்படும்.

கண்ணின் வெள்ளைப்படலத்திலும், நாக்கின் அடிப்பகுதியிலும் மஞ்சளாக இருக்கும். உடலும் மெலிந்து காணப்படும்.

மஞ்சள் காமாலை என்பது அடைப்புக் காமாலை என்றும், அடைப்பில்லா காமாலை என்றும் இருவகைப்படும். அடைப்புக் காமாலையில் கணைய கோளாறு, பித்தக்குழாய் கற்கள், பித்தக்குழாய் புற்றுநோய் என்ற மூன்று உட்பிரிவும், அடைப்பில்லா காமாலையில் வைரஸ் கிருமிகள் (A,B,C,D,G,E) மதுபானம் பேக்டீரியாக்கள் (டைபாய்டு காய்ச்சல்), மலேரியா என்ற ஒட்டுண்ணிகள், சில்லறை மருந்துகள், மதுபானம் அருந்துவதால் ஏற்படுகிறது.

கொழுப்புச் சத்துள்ள உணவை நாம் உட்கொள்ளும்போது அதை ஜீரணிப்பதற்காக கல்லீரல் பித்தநீரை சுரக்கிறது. இந்த நீர் பித்தபைக்கு குழாய் மூலம் வருகிறது. இந்த பித்தக்குழாயில் கல் மற்றும் கேன்சர் (Cancer) கட்டிகளாய் அடைப்பு ஏற்படலாம். அப்படி அடைப்பு ஏற்பட்டால் பித்தநீர் கல்லீரலிலேயே தேங்கி ரத்தத்தில் கலந்துவிடுகிறது. இதனால் மஞ்சள் காமாலை ஏற்படுகிறது. இது அடைப்பு காமாலை எனப்படுகிறது.

கல்லீரலை தாக்கும் A,B,C,D,E,G என்ற பலவகையான வைரஸ்களாலும் மஞ்சள் காமாலை ஏற்படலாம். மலேரியா காய்ச்சல், டைபாய்டு காய்ச்சல் வந்தாலும் கல்லீரல் பாதிக்கப்பட்டு மஞ்சள் காமாலை வரலாம். மதுபானங்கள் அருந்துவதன் மூலமாகவும் மஞ்சள் காமாலை நேரிடலாம்.

சிகிச்சை முறைகள்

அடைப்புக் காமாலை, அடைப்பில்லா காமாலை ஆகிய இரண்டுக்கும் சிகிச்சை முறைகள் வேறுபடும். வயிற்றின் மேல்பாகத்தில் அதிக வலி, விஷக்காய்ச்சல் ஆகியன அடைப்பு காமாலைக்கான அறிகுறியாகும். ரத்தப்பரிசோதனை மற்றும் ஸ்கேன் மூலமாக இரண்டு காமாலைகளையும் வேறுபடுத்த முடியும். பொதுவாக மக்கள் பிலிரூபினின் அளவை மட்டும் ரத்தத்தில் பார்த்தால் போதுமானது என்று எண்ணுகிறார்கள். இது தவறானது. பிலிரூபின் அளவு மட்டுமின்றி கல்லீரலின் வேலை செய்யும் திறனையும் அறிய வேண்டும். இதற்கு Liver Function Test Gßà என்று அழைக்கப்படும் புரத அளவு, நொதிகளின் அளவு போன்ற மற்ற ரத்தப் பரிசோதனைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் மூலமாக பித்தக்குழாயில் உள்ள கற்கள், கட்டிகள் போன்றவற்றை துல்லியமாக கண்டறிந்து சிகிச்சையளிக்க முடியும். எந்தவகை மஞ்சள் காமாலை என்பதை அறியாமல் கீழாநெல்லி போன்ற மருந்துகளை சுயமாகச் சாப்பிட்டுவிட்டு நோய் முற்றிய நிலையில் மருத்துவமனைக்கு வருவதால்தான் சிகிச்சை பலனில்லாமல் போகிறது.

எண்டோஸ்கோப்பி மூலமாகவோ அல்லது அறுவை சிகிச்சை மூலமாகவோ அடைப்புக் காமாலையை குணப்படுத்த வாய்ப்பிருக்கிறது. பித்தக்குழாய் கற்களால் ஏற்படும் காமாலையை சரிசெய்ய முன்பு அறுவை சிகிச்சை தேவைப்பட்டது. ஆனால் இன்றைய அதிநவீன விஞ்ஞான வளர்ச்சியில் எண்டோஸ்கோப்பி மூலம் ERCP என்ற அதிநவீன சிகிச்சை முறையால் கல்லை ஆபரேஷன் செய்யாமலேயே வெளியே எடுத்துவிடலாம்.

புற்றுநோயினால் பித்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டால் `ஸ்டென்ட்' எனும் செயற்கை குழாயை எண்டோஸ்கோப்பி மூலம் பித்தக்குழாயின் உள்ளே பொருத்தி குழாய் சுருக்கத்தை நீக்கி மஞ்சள் காமாலையை குறைக்கலாம்.

சிகிச்சை முறைகள்

கல்லீரல் சுருக்க நோயினால் (CIRRHOSIS) உணவுக்குழாயில் உள்ள ரத்தக்குழாய்களில் ரத்தக்கசிவு ஏற்பட்டு, ஆபத்தான நிலை உருவாகலாம். சில ஆண்டுகளுக்கு முன்பு ரத்தவாந்திக்கு வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து சிகிச்சை அளிக்க வேண்டியதிருந்தது. இதனால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புகளும் மிகுதியாக இருந்தன. ஆனால் தற்போதைய மருத்துவ வளர்ச்சியினால் எண்டோஸ்கோப்பி மூலம் ரத்த வாந்தியை தடுக்க பேண்டிங் (Banding), (Sclero theoraphy),க்ளு இன்ஜெக்ஷன் (Glue injection) போன்ற நவீன சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. ஆஸ்பிரின் போன்ற தலைவலி மாத்திரைகளை அடிக்கடி உட்கொள்வதாலும் ரத்தவாந்தி ஏற்படலாம். அவற்றையும் எண்டோஸ்கோப்பி மூலம் குணப்படுத்த முடியும்.

எப்படி பரவுகிறது?

வைரஸ் A மற்றும் E கிருமிகளால் ஏற்படும் மஞ்சள் காமாலை, அசுத்தமான நீரையும், ஈ மொய்த்த தின்பண்டங்களை (facco-oral Route) உட்கொள்வதால் பரவுகிறது. சாக்கடை நீர் கலந்த குடிநீர் மற்றும் அசுத்தமான நீரை குடிப்பவர்களுக்கும் இந்த ஆபத்து ஏற்படும்.

வைரஸ் B,C,D மற்றும் `G' வகை கிருமிகள் ஒரு நபரிடமிருந்து மற்றொருவருக்கு எப்படி பரவுகிறது என்பதை பார்ப்போம்.

1.
பலமுறை, பலருக்கு பயன்படுத்திய ஊசியை உபயோகப்படுத்தும் போது, 2. நோயால் பாதிக்கப்பட்ட ரத்தம் கொண்ட தாயிடமிருந்து குழந்தைக்கும், நோயால் பாதிக்கப்பட்டவரின் ரத்தம் கொண்டவருடன் உடலுறவு கொள்பவருக்கும், போதை ஊசி போட்டுக்கொள்பவர்களுக்கு மேற்கண்ட விபரீதங்கள் நேரிடலாம். இதில் `B' வைரஸ் மிகவும் அபாயகரமானது. ஹெபடைட்டிஸ் `B' ஒரு உயிர்க்கொல்லியாகும். இது கல்லீரல் சுருக்க நோய்களின் அறிகுறிகளை ஏற்படுத்தும். இந்நோய் முற்றினால் பசியின்மை, கால்வீக்கம், வயிறு வீக்கம் போன்றவையும் ஏற்படும். முற்றிய நிலையில் ரத்தவாந்தி, புற்றுநோயும் வரும்.

தடுப்பு நடவடிக்கை

மஞ்சள் காமாலை உள்ளவர்களுக்கு உணவுக் கட்டுப்பாடு அவசியமான ஒன்று. ஆனால் எந்தவகையான மஞ்சள் காமாலை ஏற்பட்டுள்ளது? கல்லீரல் வியாதி எந்த நிலையில் இருக்கிறது? என்பதை அறிந்த பின்னரே தகுந்த உணவு முறையை பின்பற்ற வேண்டும்.

ஹெபடைட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மாவுச்சத்துக்கள் அதிகமாக உள்ள பொருட்களையும், புரதச்சத்து மற்றும் கொழுப்புச்சத்து குறைந்த உணவையும் உட்கொள்ளுங்கள். மாமிச உணவு வகைகளை முற்றிலும் தவிர்ப்பது மிகவும் நல்லது. உப்பு, காரம் வகைகளை அளவோடு சேர்த்துக்கொள்ளுங்கள். பச்சைக்காய்கறிகள் மற்றும் கீரைகளை அதிகமாக சாப்பிடலாம். ஹெபடைட்டிஸ் A மற்றும் B-+Vயை தடுப்பூசி மூலம் விரட்டியடிக்கலாம். `B' _க்கு தடுப்பு ஊசி போடுவதன் மூலம் `D' வைரஸ$ம் நம்மை அண்டாது. ஆனால் C மற்றும் E-fj தடுப்பு ஊசியே கிடையாது.

`B'
வைரஸ் தாக்கியிருந்தால் ஒன்றுமுதல் 6 மாதங்கள் வரை மூன்று ஊசி போட்டுக்கொள்ள வேண்டும்.

`A'
வைரஸ் என்றால் 6 மாதங்கள் என்ற முறையில் ஊசிப் போட்டுக்கொள்ள வேண்டும்.

உரிய இடைவெளியில் தடுப்பூசி போடவில்லை என்றால் உரிய பயன் கிடைக்காது.

ரத்தம் மூலம் பரவும் வைரஸ்கள் `B' மற்றும் `C'. எனவே ரத்தம் செலுத்தும்போது இக்கிருமிகள் இல்லை என்பதை உறுதி செய்து கொள்வது முக்கியமானதாகும்.

வருமுன் காப்போம்

மஞ்சள் காமாலையை அறவே தடுப்பது அவசியமானதாகும். அதற்கு நன்கு காய்ச்சி, வடிகட்டிய நீரை பருகுங்கள். வெளியூர் மற்றும் உள்ளூர் பயணங்களிலும் காய்ச்சிய நீரையே பருகுங்கள். வீதியோரங்களில் விற்கும் கண்ட தின்பண்டங்களையும், ஈமொய்க்கும் பண்டங்களையும் கண்டு விலகி ஓடுங்கள். நகங்களை, கைகளை நன்கு சுத்தமாக வைத்திருங்கள். மலம் கழிந்த பின்னர் கைகளை நன்றாக சுத்தம் செய்யுங்கள். பச்சைக்காய்கறிகளை `Salad' முறையில் உட்கொள்வது இன்றைய பேஷனாக உள்ளது. அந்த காய்கறிகள் நன்கு சுத்தப்படுத்தப்பட்டுள்ளதா? என்பதையும் அறிந்துகொள்வது நல்லது. மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றுங்கள். மஞ்சள் காமாலை நோய் உங்களை கண்டு விலகி ஓடலாம்.


அஷ்ரஃப்






0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home