22 May 2013

தீவிரவாதிகள் கைது என்ற பெயரில் அப்பாவிகளை கைது செய்த காவல்துறையின் தில்லுமுல்லுகள் அம்பலம் !!!!

தீவிரவாதிகள் கைது என்ற பெயரில் அப்பாவிகளை கைது செய்த காவல்துறையின் தில்லுமுல்லுகள் அம்பலம் !!!!

தீவிரவாதிகள் என்ற பெயரில் அப்பாவி இசுலாமியர்களை காவல் துறை கைது செய்ததன் ஆதாரங்களை ஆஷிஷ் கேதான் என்ற பிரபல இணைய தள ஊடகவியலாளர் தனது இணைய தளத்தில் வெளியிட்டு உள்ளார்.

மும்பை தொடர் வண்டி குண்டு வெடிப்பு,
புனே ஜெர்மன் பேக்கரி குண்டு வெடிப்பு,
மாலேகாவ் குண்டு வெடிப்பு போன்ற நிகழ்வுகளில் இசுலாமியர்கள் நிரபராதிகள் என்று தெரிந்து இருந்தும் அவர்களை தீவிரவாதிகளாக முத்திரை குத்தி கைது செய்த காவல் துறையின் ரகசிய அறிக்கைகளை www.gulail.com என்ற இனைய தளம் வெளியிட்டுள்ளது.

குஜராத்தில் இசுலாமியர்களுக்கு எதிரான இனகலவரத்தில் பி.ஜே.பி முன்னாள் அமைச்சர் மாயா கொட்னானியின் பங்கினை வெளிக்கொண்டு வந்த ஆஷிஷ் கேத்னான் என்ற இணைய தள ஊடகவியலாளரே இத்தகவலையும் தனது இணைய தளத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

தற்போது வெளியாகி இருக்கும் இந்த ரகசிய அறிக்கைகளை ஆதாரமாக கொண்டு அவ்வழக்குகளை விசாரித்த காவல் துறை அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆஷிஷ் கேதான் மும்பை நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்துள்ளார்.

இந்த ரகசிய அறிக்கைகளை சுட்டி காட்டி மனித உரிமை கமிசனுக்கும் புகார் ஒன்றினையும் அனுப்பி வைத்துள்ளார்.

ஜெர்மன் பேக்கரி குண்டு வெடிப்பு வழக்கில் மஹாஸ்டிரா ஏ.டி.எஸ்யால் கைது செய்யப்பட்ட பட்கல் பகுதியை சேர்ந்த அப்துல் சமத்,ஹிமாயத் பேக்,
பெங்களூர் குண்டு வெடிப்பில் கைதுசெய்யப்பட்ட கதீல் சித்தீக்கி ஆகியோர்களின் வழக்கு அறிக்கைகளில் காவல் துறை செய்த தில்லுமுல்லைகள் அம்பலமாகியுள்ளது.
வழக்குகளில் காவல் துறை பதிவு செய்த விபரங்கள்,நேரம், நாள், போன்றவைகளில் பொருத்தமற்ற தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் நடைபெற்ற பயங்கரவாத நிகழ்வுகளை நிகழ்த்தியவர் என்று காவல் துறையால் கூறப்படும் பட்கல் சகோதரர்களை குற்றங்களோடு தொடர்பு படுத்தும் நோக்கத்தில் நிகழ்வு நடந்த இடம் நாள்,நேரம் ஆகியவைகள் திருத்தப்பட்டு இருக்கின்றன.

பிரதிகளிடமிருந்து வெடி பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன என்பனவற்றிலும் மர்மங்கள் உண்டு.இவை அனைத்தும் காவல் துறை மனப்பூர்வம் செய்த தில்லுமுல்லுகளாகும்.தவறான தகவல்களை முக்கிய தகவல்களாக மாற்றி எடுத்து நீதிமன்றங்களை ஏமாற்றிய காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று ஆஷிஷ் கேதான் தெரிவித்து உள்ளார்.

http://www.madhyamam.com/news/226684/130521

http://www.hindustantimes.com/India-news/NewDelhi/Deep-anti-Muslim-bias-in-anti-terror-operations-claims-website/Article1-1063116.aspx

http://gulail.com/index.html

(ஆஷிஷ் கேதானின் இணைய தளத்தில் இருந்து ரகசிய அறிக்கைகள் நீக்கப்பட்டுள்ளன.)

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home