11 June 2013

நாய் எப்படி மோப்பம் பிடிக்கிறது?


நாய் எப்படி மோப்பம் பிடிக்கிறது?


உலகம் முழுவதும், பிலட்த்ஹௌந்து எனப்படும் நாய்தான் துப்பறிவதற்கு அதிகம் பயன்படுகிறது. காணாமல் போன குழந்தைகளைப் பிடிப்பதற்கு பேர் போனது. பொதுவாக நாய்கள் மனிதனைவிட 50 மடங்கு மோப்ப சக்தி மிக்கது என்றாலும், பிலடுவிடம் ஏராளமான மோப்ப செல்கள் உள்ளன. மனிதனிடம் 10/ச.செ.மீ. பிலடுக்கு 170/ச.செ.மீ. பரப்பில் மோப்ப செல்கள் உள்ளன. 

நீங்கள் அடுப்பங்கரையில் நுழையும்போது கறிவாசனை வந்தால் அது கொஞ்ச நேரத்தில் நமக்குத் தெரியாமல் போய் விடுகிறது. ஆனால் மோப்ப நாய்க்கு அப்படி இல்லை. எப்படி இவை மோப்பம் பிடிக்கின்றன தெரியுமா..? நம் உடலிலிருந்து விழுந்த செல்களின் மூலம்தான்...!

உங்கள் உடலிலிருந்து தினமும் சுமார் 5,00,0000,00000000 செல்கள் ஏராளமான வியர்வையுடன் கொட்டுகின்றன. ஆனால் வியர்வை/தோலுக்கு அவ்வளவு வாசனை கிடையாது. வாசனையை தானம் செய்பவை செல்களில் படிந்துள்ள பாக்டிரியாக்கள்தான். 1.௧.செ.மீ பரப்பிலுள்ள தோலில் 100௦௦ முதல் 10௦,000௦௦௦ பாக்டிரியாக்கள் உள்ளன. இவைதான் உங்களுக்கான தனி மணத்தை உருவாக்குபவை. உங்களின் வாசனை, உங்கள் கைரேகை போல்தான். இதுவும் தனித்துவம் மிக்கது.

அஷ்ரஃப் 


0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home