முக்கிய அறிவிப்பு ....! எதிசலாத் (ETISALAT) வழங்கும் ( இந்தியாவிற்கான )ரீசார்ஜ்....!!
எதிசலாத் (ETISALAT) வழங்கும்
( இந்தியாவிற்கான )ரீசார்ஜ்....!!
இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலுமுள்ள 170 செல்பேசி நிறுவனங்களின் சந்தாதாரர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் எடிசலாத் (ETISALAT) சந்தாதாரர்கள் ரீசார்ஜ் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் இந்தியாவிலிருப்பவர்களின் செல்பேசிக்கு துபாயிலி( அமீரகத்தில் )ருந்த படியே ரீசார்ஜ் செய்யமுடியும்.
இந்தச் சேவையைச் செயல்படுத்த எடிசலாத் செல்பேசி உபயோகிப்பாளர் குறைந்தபட்சம் ஆறு திர்ஹம்ஸ் இருப்பில் (CREDIT) வைத்திருக்க வேண்டும். இதன்மூலம் கீழ்கண்ட அளவிலான தொகையை இந்தியாவிலிருக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்களது மொபைலுக்கு ரீசார்ஜ் செய்ய முடியும். குறைந்த பட்சம் ரூ.50 முதல் அதிகபட்சம் ரூ.500 வரை ரீசார்ஜ் செய்யலாம்.
1.INR.50 = AED.5.80
2.INR.100 = AED.11.50
3.INR.200 = AED.22.60
4.INR.300 = AED.33.70
5.INR.500 = AED.55.80
எதிசலாத் மொபைலிருந்து ரீசார்ஜ் செய்யவேண்டிய வெளிநாட்டு மொபைல் எண்ணை 1700 என்ற எண்ணுக்கு SMS அனுப்ப வேண்டும். உடனே, எதிசலாத்திலிருந்து மேற்கண்ட தொகைகளுக்கான தெரிவுகள் பதிலாக வரும். அதில் தேவைப்படும் தொகைக்கான தெரிவு எண்ணை (உ-ம்.ரூ.50 ரீசார்ஜ்செய்ய 1ஐ தெரிவு செய்யவும்) பதிலாக அனுப்ப வேண்டும். உடனடியாக உங்கள் எதிசலாத் கணக்கிலிருந்து நீங்கள் தெரிவு செய்யும் தொகைக்கு ஏற்ப மேற்கண்டபடி ஒப்புதல் கேட்கும். மீண்டும் 1 ஐ அழுத்தி ஒப்புதல் செய்த உடன் நீங்கள் ரீசார்ஜ் செய்ய விரும்பிய வெளிநாட்டு செல்பேசியில் மேற்கண்ட தொகை ரீசார்ஜ் செய்யப்பட்டு, அதன்விபரங்கள் இருவரது மொபைலுக்கு குறுஞ்செய்தியாக தெரிவிக்கப்படும்.
http://www.etisalat.ae/en/index.jsp
நன்றி : சகோ .முஹம்மத் இஸ்மாயில்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home