ஓட்டுப்போட பணம் வாங்கும் வாக்காளர்களுக்கு ஒரு ஆண்டு ஜெயில்
்டு ஜெயில் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.”என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற டிசம்பர் மாதம் 4–ந் தேதி நடக்கிறது. தேர்தல் தொடர்பாக அதிகாரிகள், அரசியல் கட்சியினரை சந்தித்து ஆலோசனை நடத்துவதற்காக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் இன்று சேலம் வந்தார்.சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மகரபூஷணம் மற்றும் அதிகாரிகள், அரசியல் கட்சி நிர்வாகிகளை சந்தித்த பின்னர், பிற்பகலில் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது,”ஏற்காடு இடைத்தேர்தலுக்காக 290 வாக்குச்சாவடிகள் 120 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. 2 ஆயிரம் அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுகிறார்கள். இன்றைக்கு நடந்த அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் நடைமுறைகள் குறித்து பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டன. தேர்தல் நடத்தை விதிகள் ஏற்காடு தொகுதிக்கு மட்டுமே பொருந்தும். ஒரு சில விதிமுறைகள் மட்டுமே மாவட்ட முழுவதும் பொருந்தும்.
அரசின் புதிய திட்டங்கள், இலவச பொருட்களை ஏற்காடு தொகுதித்தவிர மற்ற இடங்களில் செயல்படுத்த தடையில்லை. ஏற்காடு தொகுதியில் சுவர் விளம்பரங்களை அரசியல் கட்சியினர் சம்பந்தப்பட்ட கட்டிடத்தின் உரிமையாளர் அனுமதி பெற்று செய்திட வேண்டும். அதே வேளையில் தார்சாலையில் விளம்பரம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் தொடர்பான விதிமீறல்கள், முறைகேடுகள் தொடர்பாக புகார் தெரிவிக்க 24 மணிநேரமும் செயல்படும் வகையில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் பட்டுவாடா செய்தல், பரிசு பொருட்கள் வழங்குவது குறித்தும் பொதுமக்கள் புகார் கொடுக்கலாம். பொதுமக்கள் தங்கள் புகார் தொடர்பாக அழைக்க கட்டணமில்லாத தொலைபேசி எண் 1800 425 7050–ல் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் இந்த தேர்தலின் போது 49–ஓ படிவம் வழங்கப்படமாட்டாது. அதேவேளையில் வாக்களிக்க விரும்பாதவர்களுக்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் கடைசி வேட்பாளரின் பெயருக்கு அடுத்தபடியாக ஒரு புதிய பட்டன் அமைக்கப்படும். வாக்களிக்க விரும்பாதவர்கள் அந்த பட்டனை அழுத்தலாம்.
அத்துடன் தேர்தலின்போது குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என பணம் கொடுப்பதும், அதை வாக்காளர்கள் வாங்குவதும் குற்றம். இடைத்தேர்தலில் புதிய முறை அமல்படுத்தப்படுகிறது. அதாவது, குறிப்பிட்ட கட்சிக்காக ஓட்டுப்போட வாக்காளர்கள் யாரேனும் பணம் வாங்கினால், அவர்கள் கைது செய்யப்படுவதுடன் ஒரு ஆண்டு ஜெயில் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.
குறிப்பாக் ஏற்காடு தொகுதி மக்களுக்கு தேர்தல் விதிகளை மீறி, வேறு தொகுதியில் வைத்து பரிசு பொருட்கள், நலத்திட்ட உதவிகள் வழங்கினால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். பிற தொகுதியில் வைத்து ஏற்காடு தொகுதி மக்களுக்குத்தான் அவை வழங்கப்படுகிறதா? என்பது உறுதி செய்யப்பட்டால் பரிசு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home