22 December 2013

க.அன்பழகன், 92 ,. கலைஞர் 91, நாகூர் ஹனீபா 90 .



பேராசிரியர் க.அன்பழகன், 92 வயதை அடைந்திருக்கிறார். கலைஞர் 91, நாகூர் ஹனீபா 90 என, நட்பின் இலக்கணமாய் விளங்கும் இந்தப் பெரியவர்கள் நீடூழி வாழ வேண்டும். பெரியாரின் தொண்டராய், பேரறிஞர் அண்ணாவின் தம்பியாய், திராவிட இயக்கச் சிந்தனையாளராய் களமாடி வரலாறு படைத்த பேராசிரியர்.அன்பழகன் போன்றவர்கள் இருக்கும் தி.மு.க.வில், பாசிசத்துக்கு கொடி பிடிக்கும் ஜெ.அன்பழகன் போன்றவர்கள் இருப்பது அவலம். பெரியார் என்றால் யார்?, அண்ணா என்றால் யார்?, திராவிடம் என்றால் என்ன?, ஆர்.எஸ்.எஸ் என்பது என்ன? பா.ஜ.க என்பது என்ன? மோடி என்றால் யார்? முஸ்லிம்கள் என்றால் யார்? என்பன பற்றியெல்லாம் ஜெ.அன்பழகனுக்கு யாரேனும் கொஞ்சம் வகுப்பெடுத்தால் நன்று. பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்த பெரியார் திடலுக்கு கலைஞர் செல்லும் போதெல்லாம் உடன் செல்கிறார் ஜெ.அன்பழகன். அப்படியே அங்குள்ள நூலகத்துக்கும் அவர் சென்றிருந்தால், பாசிச மோகம் அவருக்கு வந்திருக்காது. ஜெ.அன்பழகன் போட்டியிட்டு வென்றிருப்பது திருவல்லிக்கேணி தொகுதியிலிருந்து. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள அத்தொகுதியிலிருந்து சட்டப்பேரவைக்கு சென்ற அவர், 'முஸ்லிம்கள் எதிர்ப்பார்கள் என்பதற்காக நாம் பா.ஜ.க.வை புறந்தள்ள வேண்டியதில்லை' என்று தி.மு.க தலைமையை வலியுறுத்தியுள்ளார். அரசியல்வாதிகள் என்றால் வாக்கு வங்கிக்கு அஞ்சுவார்கள் என்றே அறிந்திருக்கிறோம். ஆனால், இங்கே ஜெ.அன்பழகன் முஸ்லிம் வாங்கு வங்கியை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டிய தருணம் இது.
-அஷ்ரப்

No comments:

Post a Comment