இஸ்லாம் என்றால் என்ன?
இஸ்லாம் என்றால் என்ன?
சிலர் கருதுவது போன்று இஸ்லாம் சுமார் 14 நூற்றாண்டுகளுக்கு
முன் முஹம்மத் என்பவரால் தோற்றுவிக்கப் பட்ட வெற்று மதம் அன்று. மாற்றமாக மனித
குலத்தைப் படைத்த கடவுளினால் அவர்களின் வாழ்வு சீர்பெற அவர்கள் படைக்கப் பட்ட நாள்
முதல் கொடுக்கப் பட்ட முழுமையான வாழ்வு நெறியே இஸ்லாம். இஸ்லாம் என்ற அரபு
வார்த்தை, பணிவு, கட்டுப்படல், வழிப்படல் என்ற அர்த்தத்தோடு,
சாந்தி சமாதானம் என்ற கருத்தையும் பொதிந்துள்ளது. எனவே எவர் இறைவனின் கட்டளைகளுக்கு முழுமையாக
கட்டுப் பட்டு நடக்கின்றாரோ,
அவர் ஈருலகிலும் நிம்மதியையும், சாந்தத்தையும் அடைவார். ஒருவன் முஸ்லிமாக கருதப் படுவதற்கு, முஸ்லிம் பெற்றோருக்குப் பிறந்து இருக்க வேண்டும் அல்லது
முஸ்லிம் மத்தியில் அறிமுகமான பெயர் வைத்திருக்க வேண்டும் என்ற எந்தவிதமான நிபந்தனைகளும்
இல்லை.
முஸ்லிம் என்றால் தன்னைப் படைத்த கடவுளுக்கு வழிப்படுபவன் என்பதே அர்த்தம். எனவே ஒருவன் தன்னைப் படைத்த இறைவனுக்கு முழுமையாகக் கட்டுப்பட்டு, அவன் தனது செய்தியை கூறுவதற்காக அனுப்பிய தூதர்களையும், அவர்களில் இறுதியாக அனுப்பப்பட்ட முஹம்மத் (அவர்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தி உண்டாகட்டும்) அவர்களையும் ஏற்றுக் கொண்டு அவர்களின் போதனைகளை தன் வாழ்வில் எடுத்து நடந்தால் போதும் அவன் முஸ்லிமாக மாறிவிடுவான்.

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home