10 March 2013

செல்போனை சார்ஜ் செய்ய இணைப்பு தேவையில்லை...புதிய தொழில்நுட்பம்...

செல்போனை சார்ஜ் செய்ய இணைப்பு தேவையில்லை...புதிய தொழில்நுட்பம்...



தொழில்நுட்பங்கள் ஆயிரமாயிரம் நாள்தோறும் புதிதாக தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டுக்கொண்டே உள்ளதை நீங்களே அறிவீர்கள். இப்பொழுது செல்போன் துறையில் புதிய முயற்சி எட்டிப்பார்த்துள்ளது. அதாவது இனிமேல் நம்முடைய செல்போனை சார்ஜ் செய்வதற்கு பழைய சார்ஜர்களோ, அதற்காகப் பெரிய அளவில் ஒயர்களோ தேவையில்லை.

இணைப்பே எதுவுமில்லாமல் செல்போனை சார்ஜ் செய்யலாமென்கிறது இந்த புதிய நுட்பம். வியக்கவைப்பதாக இருக்கிறதல்லவா ? உண்மைதான்.

மின்சார சிக்கல்களை தீர்க்க இம்மாதிரி சாதனங்கள் பயன்படுத்தலாமே!
இந்த தொழில்நுட்பத்தை ஏற்கெனவே நோக்கியா தனது லுமியா போன்களில் அறிமுகப்படுத்திவிட்ட நிலையில், வேறெந்த நிறுவனங்கள் இதை பின்பற்றுமென தெரியவேண்டாமா ?

HTC,
சாம்சங், எல்ஜி, நோக்கியா மற்றும் சோனி ஆகிய நிறுவனங்களும் இந்த புதிய முறையை அறிமுகப்படுத்தவுள்ளது. இது தொடர்பான விரிவான தகவல்கள் கீழே!

Qi
டெக்னாலஜி :

Qi
டெக்னாலஜி இதைத்தான் வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பம் எனவும் கூறுகிறார்கள். இதை உருவாக்கியது WPC என்ற Wireless Power Consortium. 2008லேயே தொடங்கப்பட்ட இது, தற்பொழுதுதான் பிரபலமடைந்துள்ளது. Wi-Fi முறையில் தகவல்களை அனுப்புவதைப்போன்றதே என்றாலும் இதில் 40 மிமீ தொலைவு அதாவது 1.6 அங்குலங்கள் மட்டுமே அனுப்ப முடியும். வரும் காலங்களில் தூரம் அதிகப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறதாம்.

தொழில்நுட்பம் :

ஸ்மார்ட்போன்களை மட்டுமே தற்சமயம் இம்முறை மூலம் சார்ஜ் செய்யமுடியும் என இந்நிறுவனத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறையில் சார்ஜ் செய்வதன் அடிப்படை 2 காயில்கள். ஒன்று டிரான்ஸ்மீட்டார் மற்றது ரிசீவர். மற்றம் செய்யப்பட்ட மிசாரம் இந்த டிரான்ஸ்மீட்டார் பகுதிக்கு அனுப்பபடுகிறது. அங்கே காந்த சக்தியாக மாற்றப்படும் மின்சக்தியானது ரிசீவர் என்ற அமைப்பின் மூலமாக மீண்டும் மின்சக்தியாகவே மாற்றப்பட்டு செல்போன் பேட்டரிக்கு செல்கிறது.

சாதனங்கள் :

இணைப்பில்லாமல் சார்ஜ் செய்வதென்றால் சும்மாவா ? அதற்காகத்தான் இந்த உதிரி சாதனங்களும் தரப்பட்டுள்ளது. செல்போன் தவிர, கொடுக்கப்பட்டிருக்கும் இரு சாதனங்களே மின்சக்தியை மற்ற சக்தியாக மாற்றி போனுக்கு எளிதாக அனுப்புகிறது.

செல்போனை சார்ஜ் செய்ய இணைப்பு தேவையில்லை :

படத்தில் பார்ப்பதைப்போன்ற கூடுதல் சாதனமானது மொபைல் நிறுவனத்தாலே வழங்கப்படும். இதன் மேல் உங்களுடைய மொபைல் போனை சும்மா வைத்தாலே போதும். போனானது தானாகவே சார்ஜ் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

செல்போனை சார்ஜ் செய்ய : 

இப்படித்தான் இணைப்பில்லாமல் செல்போனுக்கு மின்சார சக்தியானது விரைவில் செலுத்தப்படுகிறது.

மேலும் இம்முறைமூலமாக சார்ஜ் செய்தால் விரைவில் தீர்ந்துவிடாதாம். மொபைல் போனுக்கும் எந்த பாதிப்பும் வருவதற்கு வாய்ப்பே இல்லை என்கிறது சம்பத்தப்பட்ட மொபைல் நிறுவனம்.

எதிர்காலத்தில் இதற்கான தூர அளவுகள் அதிகரிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோக்கியா நிறுவனத்தால் ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நோக்கியா லுமியா வரிசை போன்களான 920 மற்றும் 820யில் இது உள்ளது.

தற்பொழுது அதிக விலையுடைய போன்களில் மட்டுமே அறிமுகப்படுத்தியது நோக்கியா. மற்ற நிறுவனங்கள் விரைவில் இம்முறைகொண்ட போன்களை வெளியிடுமெனத்தெரிகிறது.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home