26 March 2013

# படித்ததில் பிடித்தது #

# படித்ததில் பிடித்தது #



- திமிர் -

காக்கை என்னும் பறவை எவ்வளவு புத்திசாலி என்பதைக் கவனித்து இருக்கிறீர்களா? வீட்டில் அழகுக்காக வளர்க்கப் படும் அநேகப் பறவைகளைக் காட்டிலும் பல மடங்கு சாதுர்யமும் தைரியமும் உடையது காக்கை. 

மனிதனின் கட்டுக்கு அடங்காத ஒரு மாதிரி திமிரான பார்வை. சொந்தமோ நட்போ இறந்து விட்டால் கூடி அழுவதில் தொடங்கி கூட்டமாகச் சேர்ந்து கழுகுகளையே வேட்டையாடி விரட்டும் இந்தப் பறவைகள் மனிதனுக்கு எந்த விதத்திலும் குறைந்தவை அல்ல. 

கரிய நிறமும் மனிதனால் தாள முடியாத குரலும் கொண்ட இந்தப் பறவை ஏனோ கவிதைகளிலோ பாடல்களிலோ பெரிதும் கொண்டாடப் படவில்லை. சொல்லப் போனால் புத்திசாலித்தனமும் சுதந்திர மனப்பான்மையும் எப்போதும் மனிதனால் ரசிக்கப் பட்டதில்லை. நமக்குத் தேவையெல்லாம் சொன்னதையே திரும்பச் சொல்லும் நிறமான அழகான பறவைகளும் சுயமாய் சிந்திக்கத் தெரியாத அடிபணியும் உயிரினங்களுமே. இதனால்தான் காகத்தை நம் முன்னோர் என்று கூறி நம்முடன் சேர்த்துக் கொள்ள முயல்கிறோம் என்று நினைக்கிறேன்.

சந்தேகம் இருந்தால் ஒரு காக்கையை உயிருடன் பிடித்து எங்காவது அடைத்து வைக்க முயற்சி செய்து பாருங்கள். அது தனியாள் இல்லை, அதன் பின்னால் உண்மையான ஒரு பாசக்காரக் கூட்டம் இருக்கிறது. 

-
ஷான் via page கனவு தேசம்-
அஷ்ரஃப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home