"தீவிரவாதத்தை போதிக்கின்றதா இஸ்லாம்?"
"தீவிரவாதத்தை போதிக்கின்றதா இஸ்லாம்?" -- Part 5
முதல்
பாகம் --- கீழை கொடுக்க பட்ட லிங்க் பாருங்கள்
http://www.facebook.com/photo.php?fbid=604070609623098&set=a.596887783674714.1073741827.596860850344074&type=1&theater
இரண்டாம் பாகம் தொடர்ச்சி லிங்க் இதோ
http://www.facebook.com/photo.php?fbid=604073902956102&set=a.596887783674714.1073741827.596860850344074&type=1&theater
தொடர்ச்சி
மூன்றாம்
பாகம் லிங்க் இதோ
http://www.facebook.com/photo.php?fbid=604078479622311&set=a.596887783674714.1073741827.596860850344074&type=1&theater
நான்காம் பாகம் இதோ லிங்க்
http://www.facebook.com/photo.php?fbid=604081849621974&set=a.596887783674714.1073741827.596860850344074&type=1&theater
தொடர்ச்சி
அந்த இறைத் தூதரின் சமுதாயத்தவர்
எதிரிகளின் சொல்லொனாத் துன்பத்திற்கு உள்ளாக்கப்பட்டு ஊரை விட்டும்
விரட்டப்பட்டிருந்தனர். ஊரை விட்டு விரட்டப்பட்டிருந்தாலும் அந்த இறைத் தூதரின்
தலைமையில் அவர்கள் எதிரிகளை எதிர்த்துப் போரிடவில்லை.
இந்த நேரத்தில் அவரது சமுதாயத்தவர்கள்
எதிரிகளை எதிர்த்துப் போரிடுவதற்கு தங்களுக்கு ஒரு மன்னரை நியமிக்குமாறு அந்த
நபியிடம் வேண்டினார்கள். இந்த வேண்டுகோளுக்குப் பிறகு இறைவன் தாலூத் என்பரை
மன்னராக நியமித்து அவர்கள் மீது போர் செய்வதைக் கடமையாக்கினான் என்பது இவ்வசனங்கள்
கூறும் வரலாறு.
படை திரட்டி யுத்தம் செய்வதென்றால்
அதற்கு ஒரு ஆட்சியும்,
ஆட்சியாளரும் இருப்பது அவசியம் என்பது
இதில் பெறப்படும் முதலாவது சட்டம். ஏனெனில் அந்தச் சமுதாயம் மிகப் பெரும் அடக்கு
முறைக்கு உள்ளாக்கப்பட்டு இருந்தும், போர்
செய்வதற்கான எல்லா நியாயங்களும் இருந்தும் அவர்கள் போர் செய்யவில்லை.
அவர்களுக்குத் தலைமை தாங்கிய இறைத் தூதரும் போர் செய்யவில்லை. மாறாக ஒரு மன்னரை
நியமிக்குமாறு வேண்டி இறைவன் மன்னரை நியமித்த பிறகு தான் அவர்கள்
போரிட்டுள்ளார்கள்.
உங்களால் இயன்ற அளவு பலத்தையும், போர்க் குதிரைகளையும் அவர்களுக்கு எதிராகத் தயாரித்துக்
கொள்ளுங்கள்! அதன் மூலம் அல்லாஹ்வின் எதிரிகளையும், உங்களின் எதிரிகளையும், அவர்கள்
அல்லாத மற்றவர்களையும் நீங்கள் அச்சமடையச் செய்யலாம். அவர்களை நீங்கள் அறிய
மாட்டீர்கள்! அல்லாஹ்வே அவர்களை அறிவான். அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் எதைச்
செலவிட்டாலும் அது உங்களுக்கு முழுமையாக வழங்கப்படும். நீங்கள் அநீதி இழைக்கப்பட
மாட்டீர்கள். (திருக்குர்ஆன் 8:60)
இவ்வசனத்தில் பலவிதமான போர்த்
தளவாடங்களைத் தயார் படுத்திக் கொள்ளுமாறு கட்டளை பிறப்பிக்கப்படுகிறது. ஒரு
நாட்டுக்குள் பலவீனமாகவும்,
சிறுபான்மையாகவும் உள்ள தனி நபரோ, குழுக்களோ இப்படி திரட்டிக் கொள்வது சாத்தியமாகாது. இது
அரசாங்கத்தினால் மட்டுமே சாத்தியமாகக் கூடியதாகும்.
இஸ்லாமிய அரசு அமைந்து போர் செய்ய
வேண்டிய காரணங்கள் அனைத்தும் இருந்து போர் செய்வதற்கான படை பலம் இல்லாவிட்டால்
அப்போது இஸ்லாமிய அரசின் மீது கூட போர் செய்வது கடமையாகாது. எதிரிகளின் படை
பலத்தில் பத்தில் ஒரு பங்கு தான் போதுமான படை பலமாக முன்னர்
அறிவிக்கப்பட்டிருந்தது.
நபியே! (முஹம்மதே!) நம்பிக்கை
கொண்டோருக்கு போர் செய்ய ஆர்வமூட்டுவீராக! உங்களில் சகித்துக் கொள்கிற இருபது பேர்
இருந்தால் இரு நூறு பேரை அவர்கள் வெல்வார்கள். உங்களில் நூறு பேர் இருந்தால் (ஏக
இறைவனை) மறுப்போரில் ஆயிரம் பேரை வெல்வார்கள். அவர்கள் புரிந்து கொள்ளாத கூட்டமாக
இருப்பதே இதற்குக் காரணம். (திருக்குர்ஆன் 8:65)
பின்னர் மக்களிடம் காணப்பட்ட
பலவீனத்தைக் கருத்தில் கொண்டு எதிரியின் படை பலத்தில் பாதி படை பலமாவது இருந்தால்
தான் இஸ்லாமிய அரசின் மீது போர் கடமையாகும். அதைவிடக் குறைவாக இருந்தால் போர்
செய்யாமல் அடங்கிப் போக வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இதுதான் குர்ஆனுடைய
கட்டளை.
இப்போது அல்லாஹ் உங்களுக்கு எளிதாக்கி
விட்டான். உங்களிடம் பலவீனம் இருப்பதை அவன் அறிவான். எனவே உங்களில் சகிப்புத்
தன்மையுடைய நூறு பேர் இருந்தால் இருநூறு பேரை அவர்கள் வெல்வார்கள். உங்களில்
ஆயிரம் பேர் இருந்தால் அல்லாஹ்வின் விருப்பப்படி இரண்டாயிரம் பேரை வெல்வார்கள்.
அல்லாஹ் சகிப்புத் தன்மையுடையோருடன் இருக்கிறான். (திருக்குர்ஆன் 8:66)
எதிரி நாட்டின் படை பலத்தில் பாதிக்கும்
குறைவாக இருந்தால் இஸ்லாமிய அரசாங்கம் கூடபோரிடக் கூடாது என்றால் நாட்டில்
சிறுபான்மையாக வாழும் மக்கள் மீது போர் எவ்வாறு கடமையாகும்?
இதனால் மிகப் பெரிய இழப்புகள் தான்
சமுதாயத்திற்கு ஏற்படும் என்பதால் தான் போரைக் கடமையாக்காமல் பொறுமையை இறைவன்
கடமையாக்கினான்.
அந்த இறைத் தூதரின் சமுதாயத்தவர் எதிரிகளின் சொல்லொனாத் துன்பத்திற்கு உள்ளாக்கப்பட்டு ஊரை விட்டும் விரட்டப்பட்டிருந்தனர். ஊரை விட்டு விரட்டப்பட்டிருந்தாலும் அந்த இறைத் தூதரின் தலைமையில் அவர்கள் எதிரிகளை எதிர்த்துப் போரிடவில்லை.
இந்த நேரத்தில் அவரது சமுதாயத்தவர்கள் எதிரிகளை எதிர்த்துப் போரிடுவதற்கு தங்களுக்கு ஒரு மன்னரை நியமிக்குமாறு அந்த நபியிடம் வேண்டினார்கள். இந்த வேண்டுகோளுக்குப் பிறகு இறைவன் தாலூத் என்பரை மன்னராக நியமித்து அவர்கள் மீது போர் செய்வதைக் கடமையாக்கினான் என்பது இவ்வசனங்கள் கூறும் வரலாறு.
படை திரட்டி யுத்தம் செய்வதென்றால் அதற்கு ஒரு ஆட்சியும், ஆட்சியாளரும் இருப்பது அவசியம் என்பது இதில் பெறப்படும் முதலாவது சட்டம். ஏனெனில் அந்தச் சமுதாயம் மிகப் பெரும் அடக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்டு இருந்தும், போர் செய்வதற்கான எல்லா நியாயங்களும் இருந்தும் அவர்கள் போர் செய்யவில்லை. அவர்களுக்குத் தலைமை தாங்கிய இறைத் தூதரும் போர் செய்யவில்லை. மாறாக ஒரு மன்னரை நியமிக்குமாறு வேண்டி இறைவன் மன்னரை நியமித்த பிறகு தான் அவர்கள் போரிட்டுள்ளார்கள்.
உங்களால் இயன்ற அளவு பலத்தையும், போர்க் குதிரைகளையும் அவர்களுக்கு எதிராகத் தயாரித்துக் கொள்ளுங்கள்! அதன் மூலம் அல்லாஹ்வின் எதிரிகளையும், உங்களின் எதிரிகளையும், அவர்கள் அல்லாத மற்றவர்களையும் நீங்கள் அச்சமடையச் செய்யலாம். அவர்களை நீங்கள் அறிய மாட்டீர்கள்! அல்லாஹ்வே அவர்களை அறிவான். அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அது உங்களுக்கு முழுமையாக வழங்கப்படும். நீங்கள் அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள். (திருக்குர்ஆன் 8:60)
இவ்வசனத்தில் பலவிதமான போர்த் தளவாடங்களைத் தயார் படுத்திக் கொள்ளுமாறு கட்டளை பிறப்பிக்கப்படுகிறது. ஒரு நாட்டுக்குள் பலவீனமாகவும், சிறுபான்மையாகவும் உள்ள தனி நபரோ, குழுக்களோ இப்படி திரட்டிக் கொள்வது சாத்தியமாகாது. இது அரசாங்கத்தினால் மட்டுமே சாத்தியமாகக் கூடியதாகும்.
இஸ்லாமிய அரசு அமைந்து போர் செய்ய வேண்டிய காரணங்கள் அனைத்தும் இருந்து போர் செய்வதற்கான படை பலம் இல்லாவிட்டால் அப்போது இஸ்லாமிய அரசின் மீது கூட போர் செய்வது கடமையாகாது. எதிரிகளின் படை பலத்தில் பத்தில் ஒரு பங்கு தான் போதுமான படை பலமாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
நபியே! (முஹம்மதே!) நம்பிக்கை கொண்டோருக்கு போர் செய்ய ஆர்வமூட்டுவீராக! உங்களில் சகித்துக் கொள்கிற இருபது பேர் இருந்தால் இரு நூறு பேரை அவர்கள் வெல்வார்கள். உங்களில் நூறு பேர் இருந்தால் (ஏக இறைவனை) மறுப்போரில் ஆயிரம் பேரை வெல்வார்கள். அவர்கள் புரிந்து கொள்ளாத கூட்டமாக இருப்பதே இதற்குக் காரணம். (திருக்குர்ஆன் 8:65)
பின்னர் மக்களிடம் காணப்பட்ட பலவீனத்தைக் கருத்தில் கொண்டு எதிரியின் படை பலத்தில் பாதி படை பலமாவது இருந்தால் தான் இஸ்லாமிய அரசின் மீது போர் கடமையாகும். அதைவிடக் குறைவாக இருந்தால் போர் செய்யாமல் அடங்கிப் போக வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இதுதான் குர்ஆனுடைய கட்டளை.
இப்போது அல்லாஹ் உங்களுக்கு எளிதாக்கி விட்டான். உங்களிடம் பலவீனம் இருப்பதை அவன் அறிவான். எனவே உங்களில் சகிப்புத் தன்மையுடைய நூறு பேர் இருந்தால் இருநூறு பேரை அவர்கள் வெல்வார்கள். உங்களில் ஆயிரம் பேர் இருந்தால் அல்லாஹ்வின் விருப்பப்படி இரண்டாயிரம் பேரை வெல்வார்கள். அல்லாஹ் சகிப்புத் தன்மையுடையோருடன் இருக்கிறான். (திருக்குர்ஆன் 8:66)
எதிரி நாட்டின் படை பலத்தில் பாதிக்கும் குறைவாக இருந்தால் இஸ்லாமிய அரசாங்கம் கூடபோரிடக் கூடாது என்றால் நாட்டில் சிறுபான்மையாக வாழும் மக்கள் மீது போர் எவ்வாறு கடமையாகும்?
இதனால் மிகப் பெரிய இழப்புகள் தான் சமுதாயத்திற்கு ஏற்படும் என்பதால் தான் போரைக் கடமையாக்காமல் பொறுமையை இறைவன் கடமையாக்கினான்.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home