21 March 2013

எம்.எல்.ஏ-வின் மாதச் சம்பளம் 55,000 ரூபாய்.


எம்.எல்.ஏ-வின் மாதச் சம்பளம் 55,000 ரூபாய்.



சம்பள விபரம், படிகள், சிறப்புச் சலுகைகள் பற்றிய ஓர் அலசல்தான் இது.

அடிப்படைச் சம்பளம் 8,000 ரூபாய்.

திடீர் செலவுகளை ஈடுகட்டுவதற்காக ஈட்டுப்படி 7,000 ரூபாய்.
மக்களோடு தொடர்புகொள்ளவும் மக்கள் பிரச்னையை அரசு இலாக்காக்களுக்குத் தெரியப்படுத்தவும் தொலைபேசிப் படி 5,000 ரூபாய். 

தொகுப்புப் படி 2,500 ரூபாய். 
தொகுதிப் படி 10,000 ரூபாய்.
தபால் செலவுப் படி 2,500 ரூபாய். 
வாகனப் படி 20,000 ரூபாய்.
எல்லாம் சேர்த்தால் 55,000 ரூபாய். 

இவை தவிர, தொகுதியில் இருந்து சென்னை கோட்டைக்கு வர ரயில் டூ டயர் ஏ.சி கட்டணம்,

தமிழகம் முழுவதும் பஸ்ஸில் சென்று வர எம்.எல்.ஏ. மற்றும் அவரது உதவியாளர் ஒருவருக்கும் இலவச பஸ் பாஸ்.

சென்னையில் உள்ள எம்.எல்.ஏ. விடுதியில் உள்ள தொலைபேசி மற்றும் தொகுதியில் வீட்டில் உள்ள தொலைபேசிக்கான மாதாந்திர வாடகையை அரசே செலுத்துகிறது. 

சென்னையில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் மாதம் ரூ.250 வாடகையில் 1,000 சதுர அடியில் அடுக்குமாடிக் குடியிருப்பு வீடு. 

அரசு மருத்துவமனைகளில் இலவச மருத்துவச் சிகிச்சை. 

வெளியில் தனியார் மெடிக்கல்களில் வாங்கும் மருந்து, மாத்திரைக் கட்டணத்தை கிளெய்ம் செய்துகொள்ளலாம். 

முக்கிய அறுவைசிகிச்சை மேற்கொண்டால், அதற்கான கட்டணத்தை அரசே ஏற்றுக் கொள்ளும். 

பேப்பர்-பென்சில் முதலான எழுது பொருட்களைத் தேவைக்கு ஏற்ப வாங்கிக்கொள்ளவும் சலுகைகள் உண்டு. 

எம்.எல்.ஏ-க்களுக்கு என்றே பிரத்யேக நூலகம் கோட்டையில் உள்ளது. (அய்யோ... அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் அல்ல!)

பேரவைக் கூட்டங்கள், கமிட்டிக் கூட்டங்களில் கலந்துகொண்டால், ஒரு நாள் படி 500 ரூபாய்.

இது தவிர, குடும்பத்தோடு ரயிலில் பயணம் செய்ய ஆண்டுக்கு 20,000 ரூபாய் வழங்கப்படுகிறது. 

சட்டசபை வைர விழா ஆண்டு என்பதால் இந்த ஆண்டு எம்.எல்.ஏ-க்கள் சம்பளம் அதிகரிக்கவும் வாய்ப்பு உண்டு.

சம்பளம், படிகள் போக ஒவ்வொரு எம்.எல்.ஏ-வுக்கும் தொகுதி வளர்ச்சி நிதி இரண்டு கோடி ரூபாய் 

ஆண்டொன்றுக்கு ஒதுக்கப்படுகிறது. இதையும் அவர்கள் தொகுதி வளர்ச்சி விஷயத்துக்குப் பயன்படுத்தலாம். ஆனால் அதுக்குத்தான் பயன்படுத்துவாங்க என்று நினைத்தால் ... அப்பாவி பாஸ் நீங்க!

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home