17 April 2013

நோய்களை விரட்டும் தண்ணீர்..!



நோய்களை விரட்டும் தண்ணீர்..!



மனித உடலில் மூன்றில் இரண்டு பங்கு தண்ணீரால் ஆனது என்பது நாம் அறிந்ததே. இத் தண்ணீர் மனித உடலில் உள்ள செல்களுக்கு 'உயிரேற்றம்'(Oxidant) செய்யும் காரணியாகச் செயல்படுகிறது. நுரையீரலுக்குச் சுத்தமான காற்றை அனுப்ப உதவுகிறது. உடல் வெப்ப நிலையை சீராக வைக்க உதவுகிறது. மூட்டுக்களின் வழவழப்புத் தன்மையைப் பாதுகாக்கிறது. தலைமுதல் கால்வரை உள்ள உடலின் சகல செல்களும் தண்ணீரின் தேவையை உணர்ந்துள்ளன.

மனித மூளையின் செயற்பாட்டிற்கு 90 சதவிகிதம் தண்ணீர் தேவையாகவுள்ளது. எனவே உடலில் நீர்ச் சத்துக் குறைவடையும்போது மூளையின் செயல்பாடும் குறைய ஆரம்பிக்கும். இதனையடுத்துத் தலைவலி உள்ளிட்ட நோய்கள் ஒவ்வொன்றாக வர ஆரம்பிக்கின்றது.எனவே நாம் தண்ணீரை நோய் தீர்க்கும் மருந்தாகப் பயன்படுத்துவதற்குப் போதுமான அளவு தண்ணீரைப் பருக வேண்டும்.

காலையில் கண் விழித்ததும், பல் துலக்காமலே 4 டம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும். பின்னர் பல் துலக்கி வாய் சுத்தம் செய்த பின்னர் 45 நிமிடங்களுக்கு உணவோ நீராகாரமோ எதுவும் உட்கொள்ளக் கூடாது. 45 நிமிடங்களுக்குப் பிறகு வழக்கமான உணவை உட்கொள்ளலாம்.

அஷ்ரஃப் 


0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home