10 April 2013

இஸ்லாமிய கோட்பாடுகள் சரியா தவறா ?




இஸ்லாம் மிகவும் கோட்பாடுகள் விதிப்பதாகவும், இந்து மதம் சுதந்திரம் அளிப்பதாகவும் சகோதரர் தமிழன் தமிழன் ஒரு பதிவு ஒன்றை போட்டிருந்தார்.

அவருக்கு நான் அங்கு அளித்த பதிலை நம் தளத்தில் நம்மோடு ஒரு தாய் வயிற்று மக்களாக வாழ்ந்து வரும் நம் தொப்புள் கொடி உறவுகளான மாற்று மத சகோதரர்களுக்கு வழங்குகிறேன்....

மனித வாழ்வை பொறுத்தவரை ஒவ்வொரு மனிதனுக்கு என்று தனி கோட்பாடுகள் இருக்க வேண்டும்.

இப்படி தான் வாழ வேண்டும் என்ற சித்தாந்தம் இருக்க வேண்டும். இப்படி தான் வாழ வேண்டும் என்ற சித்தாந்தம் இருந்தால் தான் ஒரே இலக்கை நோக்கி மனிதன் பயணிக்க முடியும்.

எப்படியும் வாழலாம் என்ற கோட்பாடு இருக்குமேயானால் வாழ்வு நெறி தவறி போகும் சூழ்நிலையே ஏற்படும்.

ஒவ்வொரு நாட்டிற்கும் எப்படி சட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதோ அதேபோல் தான் ஒவ்வொரு மனிதனுக்கும் சட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.

எடுத்துகாட்டிற்கு சொல்வதென்றால்....

மாநில அளவில் நடக்கும் அழகி போட்டிக்கு மாநில அழகி போட்டி என்று பெயரிடப்பட்டுள்ளது. அதேபோல் தேசிய அழகி போட்டி, உலக அழகி போட்டி என்று நாடு முழுவதும், உலகம் முழுவதும் நடைபெற்று கொண்டிருப்பதை நாம் காண்கிறோம்.

ஆனால் இந்த அழகி போட்டிகள் கலாச்சார சீர்கேடுகள், ஆபாசத்தின் சமுத்திரங்கள் என தெரிந்தும் எந்த நாடுகளாவது, எந்த அரசாங்கமாவது எதிர்ப்பு தெரிவித்து இந்த கேடு கெட்ட நிகழ்ச்சியை ரத்து செய்கிறதா ?

அதற்கு மாறாக ஊக்கமளிக்கிறது, மேலும் அந்த கேடு கெட்ட நிகழ்ச்சிக்கு ரசிகர்களும், விளம்பரங்களும் இணைந்து கோடான கோடி ரூபாய் கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது.

இவ்வாறு மில்லியன் கணக்கில் கோடான கோடி ரூபாய்கள் கொட்டுவதால் எந்த அரசாங்கமும் இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க மறுக்கிறது.

ஆனால் உலகிலுள்ள 57 முஸ்லிம் நாடுகளில் 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் அழகி போட்டிகள் நடைபெறுவதில்லை.

மில்லியன் கணக்கிலும், பில்லியன் கணக்கிலும் பணம் கொட்டும் நிலையிலும் அந்த பணத்தை பொருட்படுத்தாமல் இந்நிகழ்ச்சிகளுக்கு தடை விதிப்பதின் நோக்கம் என்னவென்று கருதுகிறீர்கள் ?

பணத்தை விட வாழ்க்கை நெறிமுறைகள் தான் முக்கியம் என இந்நாடுகள் நினைக்கின்றன.

இந்த முஸ்லிம் நாடுகள் வாழ்க்கை நெறிமுறைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்...

இஸ்லாமிய மதத்தின் கோட்பாடுகள் தான் ஒரே காரணம். 

இப்பொழுது சொல்லுங்கள் இஸ்லாமிய கோட்பாடுகள் சரியா தவறா ?

அஷ்ரஃப் 




Salahudeen Sala இப்படி தான் வாழ வேண்டும் என்ற சித்தாந்தம் இருக்க வேண்டும். இப்படி தான் வாழ வேண்டும் என்ற சித்தாந்தம் இருந்தால் தான் ஒரே இலக்கை நோக்கி மனிதன் பயணிக்க முடியும்.
எப்படியும் வாழலாம் என்ற கோட்பாடு இருக்குமேயானால் ­ வாழ்வு நெறி தவறி போகும் சூழ்நிலையே ஏற்படும்.


0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home