மதுவை ஒழிக்க வழி என்ன? - இஸ்லாம் கூறும் தீர்வு!
மதுவை ஒழிக்க வழி என்ன? - இஸ்லாம் கூறும் தீர்வு!
மதுவை முற்றிலுமாக ஒழித்துக்கட்டுங்கள்; அதனால்தான்
நாட்டில் பல துன்பங்களும், துயரங்களும் நிகழ்கின்றன என்று ஆட்சியாளர்களிடத்தில் கோரிக்கை
வைத்தால், அவர்கள் கூறும்
பதில், “டாஸ்மாக் கடைகளை
இழுத்துப்பூட்டினால், கள்ளச்சாராயக்கடைகளை திறந்துவிடுவார்கள். அதனால்தான் நாங்களே
சாராயக்கடைகளை திறந்து வியாபாரம் பார்க்கின்றோம்” என்பதாக உள்ளது.
உண்மையிலேயே இந்த மதுவை ஒழிக்க
வழியில்லையா? என்ற ஏக்கம் பலரது உள்ளத்திலும் நீண்ட நெடுங்கனவாக உள்ளது.
அதற்கு இஸ்லாம் அழகான தீர்வை வழங்குகின்றது.
மது அருந்துவது ஒரு
கேவலமான செயல் என்று பார்க்கும் நிலைமாறி, அது ஒரு பாராட்டத்தக்க, போற்றத்தக்க ஒரு சாதனை என்பது போல
நிலைமையை மாற்றி வைத்துள்ளனர் ஆட்சியாளர்கள்.
ஆம்! தொலைக்காட்சி
சேனல்களில் குடிமகன்கள் பேட்டி கொடுக்கின்றனர்.
மூன்று நாட்கள் தொடர்ந்து
கடைகளைப் பூட்டினால் நாங்கள் எங்குபோய் மதுக்குடிப்பது? என்று கேள்வியெழுப்புகின்றனர்.
நாங்களெல்லாம்
அன்றாடங்காட்சிகள்; மூன்று நாட்கள் கடைகளுக்கு விடுமுறைவிட்டால் மொத்தமாக மூன்று
நாட்களுக்கு தேவையான சரக்குகளை நாங்கள் முன்கூட்டியே எப்படி ஸ்டாக் வாங்கி வைக்க
முடியும் என்று ஆதங்கத்துடன் கேள்வியெழுப்புகின்றனர்.
நெடுஞ்சாலைகளில்
உள்ள மதுக்கடைகளை அரசாங்கம் பூட்டிவிட்டால் நாங்கள் குடிப்பதை நிறுத்திவிடுவோமா? எங்களுக்கு தெருக்களில் உள்ள கடைகளில்
வாங்கிக் குடிக்கத்தெரியாதா என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்தக் காட்சிகள்
தொலைக்காட்சி செய்திச் சேனல்களில் ஒளிபரப்புச் செய்யப்பட்ட கேவலமான நிலைதான் நம்
நாட்டில் நிலவி வருகின்றது.
இத்தகைய தவறுகளைச்
செய்யக்கூடிய மிருக ஜென்மங்களை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனிக்காததுதான் இவர்கள்
இப்படி பேசுவதற்கும், கள்ளச்சாரயம் காய்ச்சுவதற்கும் காரணமாகும்.
தவறு
செய்பவர்களுக்கு அந்த தவறுக்காக வழங்கப்படும் தண்டனைகள் கடுமையானதாக
இருக்குமேயானால் அதைக் கண்டு அஞ்சி நடுங்கி அந்தத் தவறை செய்யாமல் அந்தக்
குற்றவாளிகள் திருந்துவதற்கு அது வழிவகுக்கும்.
மது
அருந்தியவனுக்கு இஸ்லாம் சொல்லக்கூடிய தண்டனைகளை கேட்பவருக்கு, மது அருந்தும் எண்ணம் அறவே ஓடிவிடும்
என்று சொல்லக்கூடிய அளவிற்கு இஸ்லாம் தண்டனைகளை வழங்கச் சொல்லி உள்ளது.
*இஸ்லாம் சொல்லும் தீர்வு *
நுஐமான் என்பவர்
மது குடித்த நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வீடுகளில் இருந்தவர்களுக்கு
(அவரைஅடிக்குமாறு) கட்டளையிட்டார்கள். மக்கள் அவரைக் கைகளாலும் பேரித்த மர
மட்டையாலும், செருப்புகளாலும் அடித்தார்கள். அவரை அடித்தவர்களில் நானும்
ஒருவன்.
அறிவிப்பவர்:
உக்பது பின் அல்ஹாரிஸ் (ரலி)
நூல்: அஹ்மத் 18610
மது அருந்தியவர்களை
அடிக்க வேண்டும் என்ற சட்டம் மக்களிடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது
என்பதற்கு கீழ்க்காணும் செய்தி தக்க சான்றாகும்.
மது அருந்தும்
கணவரை அடிக்கும் மனைவிக்கு அதிர்ஷ்டம்!
ஒரு அடிக்கு ரூ. 1000 வீதம் பரிசு!!
"மது குடிக்கும் பழக்கம் உள்ள கணவரை பொதுக் கூட்டங்களுக்கு
அழைத்து வந்து அவரை அடிக்கும் பெண்களுக்கு ஒரு அடிக்கு ஆயிரம் ரூபாய் வீதம், 10 ஆயிரம் ரூபாய் வரை ரொக்கப் பரிசு
வழங்கப்படும்" என ஆந்திர நீர்ப்பாசனத்துறை அமைச்சர் டி. ஜி. வெங்கடேஷ்
தெரிவித்தார்.
ஆந்திரா கர்னூல் நகரில்
நடந்த விவசாயப் பெண்கள் கருத்தரங்கில், கலந்துகொண்டு பேசிய அவர் கூறியதாவது:- பெண்கள் கஷ்டப்பட்டு
சம்பாதிக்கிற பணத்தை, மது குடிக்கும் பழக்கமுள்ள, அவர்களின் கணவன்மார் வீணாகச்
செலவிடுகின்றனர். கணவர்கள் மது அருந்துவதால் பெண்களின் வருமானம் எல்லாம் சாராயத்திற்குச்
சென்று விடுகிறது.
குடிப்பழக்கத்திற்கு
அடிமையான கணவர்களை அவர்களது மனைவியர், இதுபோன்ற பொதுக் கூட்டங்களுக்கு அழைத்து வந்து மக்கள் மத்தியில்
நிற்க வைத்து, அடிக்க வேண்டும்.
கணவரை
அவமானப்படுத்தும் விதத்தில் இப்படி அடிக்கும் பெண் களுக்கு ஒரு அடிக்கு 1000 ரூபாய்க்கு குறையாமல், 10 அடி அடித்தால் 10 ஆயிரம் ரூபாயை ரொக்கப் பரிசாக அந்த
இடத்தில் வழங்கப்படும். கணவரை 10 அடி அடிக்கும் பெண்கள் 10 ஆயிரம் ரூபாயை பரிசாக பெற்றுக் கொள்ளலாம்
என்று அவர் அறிவித்தது பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
மதுஅருந்துபவர்களுக்கு
அடி கொடுக்க வேண்டும் என்ற சட்டமும் இன்றைய ஆட்சியாளர்கள் வாயிலிருந்து தானாகவே
வந்துவிட்டது. அது பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பையும் பெற்றுள்ளது.
இஸ்லாம்
சொல்லக்கூடிய தண்டனையை மது அருந்திய குடிகாரன் ஒருவனுக்கு வழங்கி, அந்த வீடியோப் பதிவைத் தொலைக்காட்சி
சேனல்களில் ஒரே ஒருநாள் ஒளிபரப்பிக்காட்டட்டும்.
இஸ்லாம்
சொல்லக்கூடிய இந்த தண்டனை முறைகளை அமுல்படுத்திவிட்டால், அதன் பிறகு குடிகாரர்களது வாயில் கொண்டு
போய் மதுவை ஊற்றினால்கூட அதை அவர்கள் துப்பிவிட்டு ஓடும் நிலை ஏற்படும்.
டாஸ்மாக் கடைகளை
இழுத்துப் பூட்டிவிட்டு இஸ்லாம் சொல்லக்கூடிய இத்தகைய சட்டதிட்டங்களை
ஆட்சியாளர்கள் அமுல்படுத்துவார்களேயானால் நாட்டில் யாராவது மது அருந்துவார்களா?
இத்தகைய
சட்டதிட்டங்களின் மூலம் மது அருந்துவதைக் குறித்து நினைத்துப்பார்க்கவே
அச்சப்படும் நிலை உருவாகுமா, இல்லையா?
அதைவிட்டுவிட்டு
இவர்களே மதுவை ஊற்றிக்கொடுத்து, மக்களை மாக்களாக ஆக்குகின்றார்கள் என்றால், இவர்களை என்னவென்பது?
அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் கூறினார்கள்: மது பானத்தையும், அதைப் பருகுபவரையும், பிறருக்கு பருகக் கொடுப்பவரையும், அதை விற்பவரையும், அதை வாங்குபவரையும், அதை (பிறருக்கு) தயார் செய்து
கொடுப்பவரையும், (தானே) தயார் செய்து கொள்பவரையும், அதைச் சுமந்து செல்பவரையும், யாருக்காக அது சுமந்து செல்லப்படுகிறதோ
அவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்கூறினார்கள்.அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: இப்னு மாஜா 3371
உணர்வு ஆன்லைன்
எடிஷன்: 17-28 மார் 08 – மார் 14 Unarvu Tamil weekly
உண்மையிலேயே இந்த மதுவை ஒழிக்க வழியில்லையா? என்ற ஏக்கம் பலரது உள்ளத்திலும் நீண்ட நெடுங்கனவாக உள்ளது. அதற்கு இஸ்லாம் அழகான தீர்வை வழங்குகின்றது.
மது அருந்துவது ஒரு கேவலமான செயல் என்று பார்க்கும் நிலைமாறி, அது ஒரு பாராட்டத்தக்க, போற்றத்தக்க ஒரு சாதனை என்பது போல நிலைமையை மாற்றி வைத்துள்ளனர் ஆட்சியாளர்கள்.
ஆம்! தொலைக்காட்சி சேனல்களில் குடிமகன்கள் பேட்டி கொடுக்கின்றனர்.
மூன்று நாட்கள் தொடர்ந்து கடைகளைப் பூட்டினால் நாங்கள் எங்குபோய் மதுக்குடிப்பது? என்று கேள்வியெழுப்புகின்றனர்.
நாங்களெல்லாம் அன்றாடங்காட்சிகள்; மூன்று நாட்கள் கடைகளுக்கு விடுமுறைவிட்டால் மொத்தமாக மூன்று நாட்களுக்கு தேவையான சரக்குகளை நாங்கள் முன்கூட்டியே எப்படி ஸ்டாக் வாங்கி வைக்க முடியும் என்று ஆதங்கத்துடன் கேள்வியெழுப்புகின்றனர்.
நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அரசாங்கம் பூட்டிவிட்டால் நாங்கள் குடிப்பதை நிறுத்திவிடுவோமா? எங்களுக்கு தெருக்களில் உள்ள கடைகளில் வாங்கிக் குடிக்கத்தெரியாதா என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்தக் காட்சிகள் தொலைக்காட்சி செய்திச் சேனல்களில் ஒளிபரப்புச் செய்யப்பட்ட கேவலமான நிலைதான் நம் நாட்டில் நிலவி வருகின்றது.
இத்தகைய தவறுகளைச் செய்யக்கூடிய மிருக ஜென்மங்களை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனிக்காததுதான் இவர்கள் இப்படி பேசுவதற்கும், கள்ளச்சாரயம் காய்ச்சுவதற்கும் காரணமாகும்.
தவறு செய்பவர்களுக்கு அந்த தவறுக்காக வழங்கப்படும் தண்டனைகள் கடுமையானதாக இருக்குமேயானால் அதைக் கண்டு அஞ்சி நடுங்கி அந்தத் தவறை செய்யாமல் அந்தக் குற்றவாளிகள் திருந்துவதற்கு அது வழிவகுக்கும்.
மது அருந்தியவனுக்கு இஸ்லாம் சொல்லக்கூடிய தண்டனைகளை கேட்பவருக்கு, மது அருந்தும் எண்ணம் அறவே ஓடிவிடும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு இஸ்லாம் தண்டனைகளை வழங்கச் சொல்லி உள்ளது.
*இஸ்லாம் சொல்லும் தீர்வு *
நுஐமான் என்பவர் மது குடித்த நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வீடுகளில் இருந்தவர்களுக்கு (அவரைஅடிக்குமாறு) கட்டளையிட்டார்கள். மக்கள் அவரைக் கைகளாலும் பேரித்த மர மட்டையாலும், செருப்புகளாலும் அடித்தார்கள். அவரை அடித்தவர்களில் நானும் ஒருவன்.
அறிவிப்பவர்: உக்பது பின் அல்ஹாரிஸ் (ரலி)
நூல்: அஹ்மத் 18610
மது அருந்தியவர்களை அடிக்க வேண்டும் என்ற சட்டம் மக்களிடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது என்பதற்கு கீழ்க்காணும் செய்தி தக்க சான்றாகும்.
மது அருந்தும் கணவரை அடிக்கும் மனைவிக்கு அதிர்ஷ்டம்!
ஒரு அடிக்கு ரூ. 1000 வீதம் பரிசு!!
"மது குடிக்கும் பழக்கம் உள்ள கணவரை பொதுக் கூட்டங்களுக்கு அழைத்து வந்து அவரை அடிக்கும் பெண்களுக்கு ஒரு அடிக்கு ஆயிரம் ரூபாய் வீதம், 10 ஆயிரம் ரூபாய் வரை ரொக்கப் பரிசு வழங்கப்படும்" என ஆந்திர நீர்ப்பாசனத்துறை அமைச்சர் டி. ஜி. வெங்கடேஷ் தெரிவித்தார்.
ஆந்திரா கர்னூல் நகரில் நடந்த விவசாயப் பெண்கள் கருத்தரங்கில், கலந்துகொண்டு பேசிய அவர் கூறியதாவது:- பெண்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற பணத்தை, மது குடிக்கும் பழக்கமுள்ள, அவர்களின் கணவன்மார் வீணாகச் செலவிடுகின்றனர். கணவர்கள் மது அருந்துவதால் பெண்களின் வருமானம் எல்லாம் சாராயத்திற்குச் சென்று விடுகிறது.
குடிப்பழக்கத்திற்கு அடிமையான கணவர்களை அவர்களது மனைவியர், இதுபோன்ற பொதுக் கூட்டங்களுக்கு அழைத்து வந்து மக்கள் மத்தியில் நிற்க வைத்து, அடிக்க வேண்டும்.
கணவரை அவமானப்படுத்தும் விதத்தில் இப்படி அடிக்கும் பெண் களுக்கு ஒரு அடிக்கு 1000 ரூபாய்க்கு குறையாமல், 10 அடி அடித்தால் 10 ஆயிரம் ரூபாயை ரொக்கப் பரிசாக அந்த இடத்தில் வழங்கப்படும். கணவரை 10 அடி அடிக்கும் பெண்கள் 10 ஆயிரம் ரூபாயை பரிசாக பெற்றுக் கொள்ளலாம் என்று அவர் அறிவித்தது பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
மதுஅருந்துபவர்களுக்கு அடி கொடுக்க வேண்டும் என்ற சட்டமும் இன்றைய ஆட்சியாளர்கள் வாயிலிருந்து தானாகவே வந்துவிட்டது. அது பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பையும் பெற்றுள்ளது.
இஸ்லாம் சொல்லக்கூடிய தண்டனையை மது அருந்திய குடிகாரன் ஒருவனுக்கு வழங்கி, அந்த வீடியோப் பதிவைத் தொலைக்காட்சி சேனல்களில் ஒரே ஒருநாள் ஒளிபரப்பிக்காட்டட்டும்.
இஸ்லாம் சொல்லக்கூடிய இந்த தண்டனை முறைகளை அமுல்படுத்திவிட்டால், அதன் பிறகு குடிகாரர்களது வாயில் கொண்டு போய் மதுவை ஊற்றினால்கூட அதை அவர்கள் துப்பிவிட்டு ஓடும் நிலை ஏற்படும்.
டாஸ்மாக் கடைகளை இழுத்துப் பூட்டிவிட்டு இஸ்லாம் சொல்லக்கூடிய இத்தகைய சட்டதிட்டங்களை ஆட்சியாளர்கள் அமுல்படுத்துவார்களேயானால் நாட்டில் யாராவது மது அருந்துவார்களா?
இத்தகைய சட்டதிட்டங்களின் மூலம் மது அருந்துவதைக் குறித்து நினைத்துப்பார்க்கவே அச்சப்படும் நிலை உருவாகுமா, இல்லையா?
அதைவிட்டுவிட்டு இவர்களே மதுவை ஊற்றிக்கொடுத்து, மக்களை மாக்களாக ஆக்குகின்றார்கள் என்றால், இவர்களை என்னவென்பது?
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மது பானத்தையும், அதைப் பருகுபவரையும், பிறருக்கு பருகக் கொடுப்பவரையும், அதை விற்பவரையும், அதை வாங்குபவரையும், அதை (பிறருக்கு) தயார் செய்து கொடுப்பவரையும், (தானே) தயார் செய்து கொள்பவரையும், அதைச் சுமந்து செல்பவரையும், யாருக்காக அது சுமந்து செல்லப்படுகிறதோ அவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்கூறினார்கள்.அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: இப்னு மாஜா 3371
உணர்வு ஆன்லைன் எடிஷன்: 17-28 மார் 08 – மார் 14 Unarvu Tamil weekly
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home