27 April 2013

பெற்றோரை அலட்சியம் செய்யும் பெண்களுக்கு எச்சரிக்கை:

பெற்றோரை அலட்சியம் செய்யும் பெண்களுக்கு எச்சரிக்கை:



குடும்பங்களை சீரழிக்கும் தொலைக்காட்சி நிகழ்சிகள்!

பொதுவாக நகர வாழ்க்கைக்கும் நகரமல்லாத பகுதிகளில் வாழும் மக்களுக்கும் பல வித்தியாசங்களைக் காணலாம்.

உலக வாழ்க்கைக்கு அத்தியாவசியமாகக் கருதப்படும் பள்ளிப்படிப்பு முதல் கல்லூரி வாழ்க்கை வரை சாதி,மத, பேதமின்றி மக்கள் இணைந்தே வாழ்கின்றனர் அதே போல் ஆண், பெண் கலக்க நேரிடும் வேலை செய்யும் இடங்கள் நகர்ப்புற பகுதிகளில் அதிகம் உண்டு இந்த பழக்கங்களை தொடர்ந்து தங்களுடன் படிப்பவர்கள், பணி செய்பவர்கள் போன்றவர்களை சாதி,மதம் பாராமல் தங்கள் இல்லங்களுக்கு அழைப்பது வழக்கமாக இருக்கும்.

இஸ்லாமிய மார்க்கத்தைப் பின் பற்றும் முஸ்லிம்களைப் பொறுத்தவரை முஸ்லிமல்லாதவர்கள் தங்கள் கடவுள் என்று எண்ணிக் கொண்டு படைக்கும் உணவுகள் முஸ்லிம்களுக்கு ஆகுமானதல்ல என்ற அடிப்படை விஷயம் கூட அறியாத முஸ்லிம்களை நகர்ப்புறங்களில் காணலாம்.இவர்களைப் பொறுத்தவரை நாம் முஸ்லிம்,அரபி கலந்த பெயர்களை சூட்டிக் கொண்டு இருப்போம் இவ்வளவு தான் இஸ்லாம்.

பெரும்பாலும் நகர்ப்புறமல்லாத பகுதிகளில் உலக வாழ்க்கைக்கு அத்தியாவசியமாகக் கருதப்படும் கல்வியைக் கற்க பள்ளிக்கூடம் போகும் முன்பு, உலகவாழ்க்கைக்கும் மறுமை வாழ்க்கையிலும் தேர்வு பெற மார்க்கக் கல்வியை கற்க சிறுவர் சிறுமியர் செல்வார்கள்.குழந்தைப் பருவம் முதல் மார்க்கக் கல்வியை கொடுப்பது பெற்றோர்களின் கடமை என்பதை மார்க்கக் கல்வி அருமை தெரிந்த பெற்றோர்கள் அறிவர் இதனால் முஸ்லிமல்லாத மக்களிடம் பழகும் வரைமுறை மார்க்கக் கல்வி பயின்ற மக்களுக்கு அத்துப்படி.

நகர்ப்புறங்களில் மார்க்க அடிப்படையை அறியாத பல இஸ்லாமிய ஆண் மற்றும் பெண்கள் நாம் யார்? நம்முடைய அடிப்படை என்ன? என்பதைக் கூட சிந்திக்க இயலாத அளவிற்கு வாழ்க்கையின் ஓட்டத்தை வேகமாக எண்ணுகிறார்கள்.பெற்றோர்கள்தான் நவீன காலத்தில் இருக்கும் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்திக் கூட மார்க்க அடிப்படை விஷயங்களை அறிந்து கொள்ள இவர்களுக்கு மனம் வருவதில்லை.

குடும்ப சீரழிவுகளை போட்டி போட்டு சீரழிக்கும் தொலைக் காட்சி சேனல்களில் ஒன்றான ஜீ சேனலில் குடும்பங்களை சீரழிக்கும் நிகழ்ச்சி ஒன்றை காண நேர்ந்தது விஷக் கொம்புக் கிடைத்தாலும் படருவதற்கு தயாராவதுதான் கொடிகளின் இயல்பு என்பது இயற்கையான நியதி என்றாலும் மனிதப் படைப்பில் நியாயமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது இஸ்லாம்.அத்தகைய மார்க்கத்தில் இருக்கும் பெண்ணின் நிலையை பாருங்கள் என்று எள்ளி நகையாடுவது போல் தான் இருந்தது அந்நிகழ்ச்சி.

இந்த பாதிப்பு முஸ்லிம் பெண்ணுக்கு மட்டும் தானா? அனைத்து மதப் பெண்களுக்கும் இது எச்சரிக்கையாகும். முஸ்லிம் பெண் என்பதால் அவளுக்கு மார்க்க அடிப்படை தெரியாமல் செய்து விட்டாள் என்று கூறி அமைதியடைந்து விடுகிறார்கள். இதுவே பெண் முஸ்லி மல்லாதவளாக இருந்து ஆண் முஸ்லிமாக இருந்திருந்தால் மத வெறியர்கள்,பயங்கரவாதிகள் மதக்கலவரத்தை உண்டு பண்ணி ரணகளப்படுத்தி இருப்பார்கள் மனம் ஒத்து திருமணம் செய்தவர்களையே உண்டு இல்லை எனச் செய்து ஒரு ஊரையே நெருப்பிற்கு தீநியாக்கிய சம்பவம் தமிழ்நாட்டை உலுக்கிப் போட்டது நினைவிருக்கலாம்.

பெற்றோர்களின் கட்டுப்பாட்டில் வளர்ந்தாலும் இப்படிப்பட்ட சூழ்நிலையை உலகமே கண்டு காறித் துப்பினாலும் சட்ட நடவடிக்கையை தமிழ்நாடு அரசு எடுத்ததா? குடும்பப் பிரச்சனை என்று ஒதுங்கிக் கொள்ளும்.நடிகை லட்சுமியின் மகள் மும்பை முஸ்லிமோடு திருமணம் செய்து கொண்டு சென்ற பிறகு லட்சுமி இது போன்ற நிகழ்சிகளை ஒதுக்கியது போல் ஜீ சேனலை நடத்துபவர்கள், இந்நிகழ்ச்சியை உருவாக்கியவர்கள்,சந்தோஷத்துடன் பேட்டி எடுப்பவர் அவர்கள் குடும்பத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்கும் வரை தொடர்வார்கள்.

முஸ்லிம்களுக்கு ஒரு எச்சரிக்கை: இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் போன்ற நிகழ்சிகளை சிரமப்பட்டு நடத்தி முஸ்லிமல்லாத மக்கள் இஸ்லாத்திற்கு வந்தவண்ணம் இருக்கையில் இப்படி ஒரு சம்பவமும் நடந்துள்ளது.தூய இஸ்லாத்தைக் கூறுபவர்களை ஊக்கப்படுத்துங்கள் காழ்ப்புணர்ச்சி,அரசியல் லாபம் இவைகளுக்காக எதிர்க்காதீர்கள்.



அஷ்ரஃப் 



 இதுபோல் கேடுகெட்ட சமாசாரம் நடப்பது அதிகமாக சென்னையில்தான் முஸ்லீம்பெயரை வைதுக்கொண்டு தன்வாள்கயை இப்படி சீரளிக்கிறார்கள் . அதிகமாக இந்த பாக்கிருசா கூட்டம் தான் இதுபோல் நடக்கிறது . அதிகமாக .பல்லாவரம் கொருக்குப்பேட்டை இந்த ஏரியாவில் வாளும் . பெயர்தாங்கி முஸ்லீம்கள் , அவர்களுக்கு போதிய மார்க்க அறிவு இல்லாததுதான் காரணம் . உள்ளதை இறை அட்சம் சிறிதளவேணும் இருந்தால் இப்படி நடக்காது . அவர்களிடம் அது கிடையாது . அந்த சீ .... தொல்லைக்காட்சியும் . எப்படி எடிட்டிங் செய்து நடத்துகிறான் என்று பார்த்தால் அதன் தன்மை புரியும் . நேற்றய சம்பவத்தை அந்த மாணம்கெட்ட பெண் கதறுவதை எவ்வளவு நேரம் ஒளிபரப்பினான் என்பதை பார்த்தாலே தெரியும் .

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home