20 April 2013

ஆன்லைனில் பொருட்கள் வாங்குகிறீர்களா...? உஷார்...!


"விழிப்புணர்வு"

ஆன்லைனில் பொருட்கள் வாங்குகிறீர்களா...? உஷார்...!

இந்த வார ஜூனியர் விகடனில் வந்திருக்கும் அதிர்ச்சி செய்தி இது.


மதுரை ஜி.ஆர்.டி.யில் போலி கடன் அட்டையில் பொருட்கள் வாங்கப்பட்டதை துப்பு துலக்கி குற்றவாளிகளைப் பிடித்து விசாரிக்கையில் இதில் பிரபல தனியார் வங்கியில் வேலை செய்பவரின் பங்கு தெரியவந்துள்ளது. ஆன்லைனில் பொருட்கள் வாங்கும்போது நாம் கொடுக்கும் கடன் அட்டை விவரங்களை சேகரித்து போலி அட்டைகள் தயாரித்து மோசடி செய்துள்ளனர். அதிலும் வெளிநாட்டு கடன் அட்டைகளே குறி வைக்கப்பட்டுள்ளன. காரணம், வெளி நாட்டில் இருப்பவர்கள் பத்தாயிரம் என்றாலும் சில நூறு டாலர்கள் என்பதால் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்களாம்.

அடப்பாவிகளா, நாங்களும் கஷ்டப்பட்டு உழைச்சுதாண்டா சம்பாதிக்கிறோம்.... செய்தியின் சில பகுதிகள் கீழே...

"...
இன்டர்நெட் மூலம் பொருட்கள் வாங்குபவர்களிடம் இருந்து, அவர்களின் கிரெடிட் கார்டு விவரங்களைத் திருடுவதற்கு ஒரு டீம் இருக்கிறது. அவர்கள் திருடிய விவரங்களை என்னைப் போன்றவர்களுக்கு விற்பார்கள். ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுத்து, நாங்கள் அந்த விவரங்களை வாங்குவோம். அந்த டேட்டாக்களை எந்தத் தகவலும் பிரின்ட் செய்யப்படாத கிரெடிட் கார்டுகளில் பதிவுசெய்வோம். கார்டின் மேல் உள்ளூர் நபர் ஒருவரின் பெயர் உள்ளிட்ட தகவல்களைப் பிரின்ட் செய்வோம். அட்டையின் மேல் இருக்கும் நபர் மதுரைக்காரராக இருப்பார். ஆனால், கணக்கு எண் சீனாக்காரனுடையதாக இருக்கும். நம்ம ஊர்க்காரர்களின் கணக்கில் பத்து ரூபாய் குறைந்தாலும், அதைப் பெரிய பிரச்னையாக்கிவிடுவார்கள். அதனால்தான் வெளிநாட்டுக்காரர்கள் கணக்கில் கை வைப்போம். 10 ஆயிரம் ரூபாய்க்கு பொருள் வாங்கினாலும், அவர்களுக்கு சில டாலர்களே குறையும். அதை அவர்களும் பெரிதாகக் கண்டுகொள்ள மாட்டார்கள்' என்பதே அவர்கள் வாக்குமூலம்..." செய்தி 

அஷ்ரஃப் 




நன்றி: ஜூனியர்விகடன். 

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home