20 April 2013

சாலை விபத்து...

இன்று உலகிலேயே மிக அதிகமான உயிர் இழப்பை உண்டாக்குகின்ற முக்கிய காரணம்,
சாலை விபத்து...

1.2 மில்லியன் மக்கள் ஆண்டுதோறும் சாலை விபத்தால் உயிர் இழக்கின்றார்கள்...

இதனால் தனி மனித இழப்பு, அவரைச் சார்ந்த குடும்பத்தினருக்கு பேரிழப்பு, பொருளாதார இழப்பு போன்றவைகள் மட்டுமின்றி பல்லாயிரக்கணக்கானோர் உடல் ஊனமுற்றவராகின்றார்கள்...

இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று...

நாம் ஒவ்வொருவரும் அக்கரை எடுத்து செயல்பட்டால் இதை மாற்றியமைக்க முடியும்...

* மிக அதிக வேகம்.....

* தலைக்கவசம் அணியாமல் செல்வது....

* மது அருந்தி விட்டு வாகனங்களை ஓட்டுதல்...

* செல் போனில் பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டுவது...

* சரியான ஓய்வின்றி, உறக்கமின்றி வாகனத்தை ஓட்டுவது...

* போக்குவரத்து வாகன விதிமுறைகளை மதிக்காமல் வாகனத்தை ஓட்டுவது...

இவைகள் தான், பெரும்பாலான விபத்துகளுக்கு முக்கிய காரணமாகின்றது...

இரத்த தானம் செய்யுங்கள்...! சாலைகளில் சிந்தாதீர்கள்...!

உங்கள் உயிரும், உங்களது இரத்தமும், உங்களது உடற்பாகங்களும் விலைமதிப்பற்றது என்பதை உணருங்கள்...

* பசித்தவனுக்கு தான் தெரியும் பசியின் கொடுமை...

* விழுந்தவனுக்குத்தான் தெரியும் வலியின் வேதனை...

* இழந்தவனுக்குத்தான் தெரியும் உறவின் பெருமை...!

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home