தனியார் வங்கிகளும் அவற்றின் கொள்ளைகளும்... பகிருங்கள் நண்பர்களே...
தனியார் வங்கிகளும் அவற்றின் கொள்ளைகளும்...
Lic இன் மீசுவல் பண்ட் பங்கு சந்தையில் 20,000 ரூபாய் முதலீடு செய்து விட்டு 4 வருடம் கழித்து 15,000 ரூபாய் பெற்று வந்த மடத்தனத்தை செய்த
அனுபவத்தின் முறையிலும், கடந்த சில வருடங்களாக BJP யும், காங்கிரசும் மாறி, மாறி வங்கி தனியார் மயத்தை பேசி
கொண்டிருப்பதை கவனித்து கொண்டிருப்பவன் என்ற முறையில் இந்த செய்தியை ஒவ்வொரு
இந்தியனுக்கு சென்று சேர்க்க வேண்டிய அவசியம் எனக்கு இருக்கிறது.
குறிப்பு
இக்கட்டுரை
அமெரிக்க வங்கியின் நிலவரம் பற்றி பேசுவதனால், நமக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என
நினைக்க வேண்டாம். State Bank of India, விவசாய கூட்டுறவு வங்கிகள் போன்ற அரசாங்க
வங்கிகள் இந்தியாவில் ஒழிக்கப்பட்டு HDFC, ICICI போன்ற தனியார் வங்கிகள் மட்டும்
இந்தியாவில் இருந்தால் விவசாயிகள், சிறு வியாபாரிகள் என்ன ஆவார்கள் என்பதை மட்டும் மனக்கண்ணில் ஓட
விட்டு கொண்டு கட்டுரையை படிக்கவும். :(
கட்டுரை
வட டகோடா என்பது
ஐக்கிய அமெரிக்காவில், கனடாவை ஒட்டியுள்ள மாகாணம். இங்கு பழமை வாதிகளாலும் (மத வாத), டெமாக்ரடிக் (ஜார்ஜ் புஷ் புகழ்) கட்சியை
கூட பெருமளவு ஆதரிக்க கூடியவர்களாலும் நிரம்பிய அமெரிக்க மாகாணம். ஆனாலும்
அரசாங்கத்தால் நடத்தப்படும் Bank of North Dakota (BND) எனும் வங்கியை கொண்ட ஒரே அமெரிக்க மாகாணம்
எனும் ஒரு தனிசிறப்பு இதற்கு உள்ளது.
அதாவது உலகெங்கும்
அணைத்து நிறுவனங்களும் (வங்கிகள் உட்பட) தனியார் மயமாக்கபட வேண்டும் என முழங்கி
வரும் முதலாளித்துவ கருத்து கொண்ட அமெரிக்காவில், சோசலிசத்தின் அடிப்படையில் ஒன்றான அரசாங்க
வங்கி என்பதை கொண்ட மாநிலம் என்பதே முக்கியத்துவம் வாய்ந்தது.
பிற்போக்கு தன்மை
கொண்ட மாகாணத்தில் சோசலிசத்தின் அடிப்படை கொண்ட அரசாங்க வங்கி செயல்முறை படுத்த
படுவதற்கு ஒரே காரணம் அது சிறப்பாக செயல்படுகிறது என்பது மட்டுமே.
வங்கியின்
செயல்முறை
வங்கிகளின் தலையாய
பணி என்பது அதற்கு உள் வரும் சேமிப்பையும், முதலீட்டையும், கடன்களாக நல்ல வர்த்தக நிறுவனங்களிலும், பயனாளிகளுக்கும் முதலீடு செய்யும்
இடைநிலையாளராகவே இருக்க இயலும். இவை மட்டுமே மக்களுக்கு வேலை வாய்ப்புகளை
உருவாக்கும்.
வட டகோடாவில்
அணைத்து அரசாங்க பணமும் அரசாங்க வங்கியிலேயே கணக்கு வைக்க படுகின்றன. அரசாங்க
வங்கி சிறு சமூக வங்கிகளுக்கு பணத்தை பட்டுவாடா செய்கிறது. இச்சிறு வங்கிகள் சிறு
வணிகர்கள், விவசாயிகள் மற்றும் அரசாங்க பொது கட்டுமான பணிகளுக்கு முதலீடு
செய்கின்றன.
இதற்கு மேலும், அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க, BND வங்கி 1 இலட்சம் டாலர் கடனுக்கு குறைந்த பட்சம்
ஒரு பணியை உருவாக்கும் நிறுவனத்திற்கு மிகக்குறைந்த வட்டியில் பணம் அளிப்பதன்
மூலம் வேலை வாய்ப்புகளை அதிகம் உருவாக்குகிறது.
ஆனால் வட டகோடா
தவிர, மற்ற மாநிலங்களில் வசிப்பவர்களுடைய/அரசுடைய வரிகள்
வால்ஸ்டிரீட்டில் இருக்கும் ”மிகப்பெரிய, நிலை தடுமாறாத” தனியார் வங்கிகளில் மட்டுமே கணக்கு வைக்க படுகின்றன. ஏனெனில்
மிகப்பெரிய தொகைகளை [குறைந்த பட்சம் 1 டிரில்லியன் டாலர் =$ 1,000,000,000,000 இலட்சம் கோடி டாலர்] கையாள ”மிகப்பெரிய நிலை தடுமாறாத” வங்கிகளால் மட்டுமே முடியும் என காரணம் சொல்லபடுகிறது.
தனியார் வங்கிகளின்
கொள்ளைகள்
1. இந்த தனியார் வங்கிகளால் இப்போது தேவையான வேலை வாய்ப்புகளை
உருவாக்க இயலவில்லை. இதே 1 டிரில்லியன் டாலரை BND போன்ற அரசாங்க வங்கியில் முதலீடு செய்திருந்தால், வருடத்திற்கு 1 கோடி வேலைகளை அமெரிக்காவில் உருவாக்கி இருக்க
முடியும். எனவே இப்போது அமெரிக்கரகள் வேலை தட்டுபாடு நிலவுவதற்கு இதுவும் ஒரு
காரணம் என கொள்ளலாம்.
2. வட டகோடா தவிர மீதமுள்ள 49 மாநிலங்களில் அரசாங்க பள்ளிகளையும், சாலை முதலான பொது சொத்துகளை பராமரிக்கவும்
தனியார் வங்கிகளை விட்டால் நிதி ஆதாரங்களுக்கு வேறு நாதியே கிடையாது. எனவே
அசலுக்கு 10 மடங்கு தொகை திரும்ப கிடைக்கும் வகையில் சமூக அமைப்புகளுக்கு
இவ்வங்கிகளால் கடன் ஒப்பத்தங்கள் பெறப்படுகின்றன. ஆலோசணை தரகர்களும் இது போன்ற
மோசமான திட்டங்களில் மிகச்சிறந்ததை பரிந்துரைப்பதற்கு மட்டுமே மிகப்பெரும் தொகையை
தரகாக பெறுகின்றனர்.
3. வால்ஸ்டிரீட் தனியார் வங்கிகள் தங்களின் மிகப்பெரும் அரசாங்க
முதலீட்டை, பங்கு சந்தையில் முதலீடு செய்வதன் மூலம், வங்கி செயல்பாடுகளை மிகப்பெரும் சூதாட்டம்
ஆக்கி இருக்கின்றன. இந்த சூதாட்டத்தின் மூலம் நிலை தடுமாறி அதல பாதாளத்திலும்
வீழ்கின்றன. இவற்றை காப்பாற்ற அரசாங்கமும் Bailouts எனும் முறையில் மிகப்பெரும் தொகையை
முதலீட்டாளர்களுக்கு திருப்பி தர வேண்டி உள்ளது.
4. இந்த சூதாட்டத்தை ஆடுவதற்கு அதன் “திறன் மிக்க” தலைவர்களுக்கு கோடிக்கணக்கான டாலர்கள்
சம்பளம் தரப்படுகின்றன. ஆனால் BND வங்கிக்கு இம்மாதிரி சூதாட்டமும் தேவைப்படவில்லை. அதற்காக “திறன் மிக்க” தலைவர்களும் தேவைப்படவில்லை. BND வங்கி தலைவர் சம்பளம் Eric
Hardmeyer, President and CEO: $232,500 மட்டுமே. இது வால்ஸ்டிரீட் வங்கிகளில்
வேலை செய்யும் சிறு பணியாளர்களின் சம்பளத்தை விடவும் குறைவானது ஆகும். எனவே சிறந்த
வங்கிகளை நிர்வகிக்க “திறன் மிக்க” தலைவர்களுக்கு கொட்டி கொடுக்க வேண்டும் என்ற வாதம் பொய்யானது.
BND ஐ ஒழிக்க வால்ஸ்டிரீட்டின் போர்
இவ்வுண்மைகள் வெளி
உலகத்திற்கு பரவும் இவ்வேளையில், அமெரிக்காவின் மற்ற மாநிலங்களும் இம்முறையை நடைமுறையில் கொண்டு
வருவதை தடுக்க Trans-Pacific Partnership (TPP) எனும் கார்பரேட் நிறுவனங்களுக்கிடையேயான
ஒப்பந்தத்தை செயலாக்க வால்ஸ்டிரீட் முயன்று வருகிறது.
புருனே, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளின் வங்கிகள்
அமெரிக்காவில் செயல்படுவதற்கு ஆதரவு தெரிவிப்பது போல காட்டி அமெரிக்காவிற்கு
கொண்டு வருவது, பிறகு அரசாங்க வங்கிகள் நேர்மையற்ற முறையில் சிறு வங்கிகளுடன்
போட்டி போடுவதாக காட்டும் சட்டங்களை இயற்றுவது. அவற்றை வைத்து, BND வங்கியின் செயல்பாடுகளை முடக்குவதற்கும்
திட்டமிட்டுள்ளது.
பொதுதுறை
வங்கிகளுக்கான போராட்டம் The Public Bank Movement
மக்களிடையே
விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக Public Bank Institute எனும் பொருளாதார நிபுணர்களை கொண்ட அமைப்பு
ஏற்படுத்த பட்டிருக்கிறது. இது மாநாடுகள் நடத்தி பிரச்சிணைகளை அலசுகிறது.
முடிவு
தனியார் வங்கிகள்
பூகம்பம், வறட்சி போன்ற தேசிய இடர்பாட்டு நேரங்களில் கூட தங்களது வணிக
நலன் சார்ந்து மட்டுமே சிந்திக்க இயலும். அரசாங்க வங்கிகள் அப்படி அல்ல.
வங்கி ஊழியர்கள்
மட்டுமல்லாது, எதாவது வங்கியில் பணம்/கடன் வைத்திருக்கும் ஒவ்வொரு இந்தியனும்
தங்களுடைய தேவையை முடிவு செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது.
References
http://www.alternet.org/corporate-accountability-and-workplace/why-socialism-doing-so-darn-well-deep-red-north-dakota
http://en.wikipedia.org/wiki/Bank_of_North_Dakota
http://en.wikipedia.org/wiki/North_Dakota
-Article by Sabarinathan Arthanari.
குறிப்பு
இக்கட்டுரை அமெரிக்க வங்கியின் நிலவரம் பற்றி பேசுவதனால், நமக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என நினைக்க வேண்டாம். State Bank of India, விவசாய கூட்டுறவு வங்கிகள் போன்ற அரசாங்க வங்கிகள் இந்தியாவில் ஒழிக்கப்பட்டு HDFC, ICICI போன்ற தனியார் வங்கிகள் மட்டும் இந்தியாவில் இருந்தால் விவசாயிகள், சிறு வியாபாரிகள் என்ன ஆவார்கள் என்பதை மட்டும் மனக்கண்ணில் ஓட விட்டு கொண்டு கட்டுரையை படிக்கவும். :(
கட்டுரை
வட டகோடா என்பது ஐக்கிய அமெரிக்காவில், கனடாவை ஒட்டியுள்ள மாகாணம். இங்கு பழமை வாதிகளாலும் (மத வாத), டெமாக்ரடிக் (ஜார்ஜ் புஷ் புகழ்) கட்சியை கூட பெருமளவு ஆதரிக்க கூடியவர்களாலும் நிரம்பிய அமெரிக்க மாகாணம். ஆனாலும் அரசாங்கத்தால் நடத்தப்படும் Bank of North Dakota (BND) எனும் வங்கியை கொண்ட ஒரே அமெரிக்க மாகாணம் எனும் ஒரு தனிசிறப்பு இதற்கு உள்ளது.
அதாவது உலகெங்கும் அணைத்து நிறுவனங்களும் (வங்கிகள் உட்பட) தனியார் மயமாக்கபட வேண்டும் என முழங்கி வரும் முதலாளித்துவ கருத்து கொண்ட அமெரிக்காவில், சோசலிசத்தின் அடிப்படையில் ஒன்றான அரசாங்க வங்கி என்பதை கொண்ட மாநிலம் என்பதே முக்கியத்துவம் வாய்ந்தது.
பிற்போக்கு தன்மை கொண்ட மாகாணத்தில் சோசலிசத்தின் அடிப்படை கொண்ட அரசாங்க வங்கி செயல்முறை படுத்த படுவதற்கு ஒரே காரணம் அது சிறப்பாக செயல்படுகிறது என்பது மட்டுமே.
வங்கியின் செயல்முறை
வங்கிகளின் தலையாய பணி என்பது அதற்கு உள் வரும் சேமிப்பையும், முதலீட்டையும், கடன்களாக நல்ல வர்த்தக நிறுவனங்களிலும், பயனாளிகளுக்கும் முதலீடு செய்யும் இடைநிலையாளராகவே இருக்க இயலும். இவை மட்டுமே மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.
வட டகோடாவில் அணைத்து அரசாங்க பணமும் அரசாங்க வங்கியிலேயே கணக்கு வைக்க படுகின்றன. அரசாங்க வங்கி சிறு சமூக வங்கிகளுக்கு பணத்தை பட்டுவாடா செய்கிறது. இச்சிறு வங்கிகள் சிறு வணிகர்கள், விவசாயிகள் மற்றும் அரசாங்க பொது கட்டுமான பணிகளுக்கு முதலீடு செய்கின்றன.
இதற்கு மேலும், அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க, BND வங்கி 1 இலட்சம் டாலர் கடனுக்கு குறைந்த பட்சம் ஒரு பணியை உருவாக்கும் நிறுவனத்திற்கு மிகக்குறைந்த வட்டியில் பணம் அளிப்பதன் மூலம் வேலை வாய்ப்புகளை அதிகம் உருவாக்குகிறது.
ஆனால் வட டகோடா தவிர, மற்ற மாநிலங்களில் வசிப்பவர்களுடைய/அரசுடைய வரிகள் வால்ஸ்டிரீட்டில் இருக்கும் ”மிகப்பெரிய, நிலை தடுமாறாத” தனியார் வங்கிகளில் மட்டுமே கணக்கு வைக்க படுகின்றன. ஏனெனில் மிகப்பெரிய தொகைகளை [குறைந்த பட்சம் 1 டிரில்லியன் டாலர் =$ 1,000,000,000,000 இலட்சம் கோடி டாலர்] கையாள ”மிகப்பெரிய நிலை தடுமாறாத” வங்கிகளால் மட்டுமே முடியும் என காரணம் சொல்லபடுகிறது.
தனியார் வங்கிகளின் கொள்ளைகள்
1. இந்த தனியார் வங்கிகளால் இப்போது தேவையான வேலை வாய்ப்புகளை உருவாக்க இயலவில்லை. இதே 1 டிரில்லியன் டாலரை BND போன்ற அரசாங்க வங்கியில் முதலீடு செய்திருந்தால், வருடத்திற்கு 1 கோடி வேலைகளை அமெரிக்காவில் உருவாக்கி இருக்க முடியும். எனவே இப்போது அமெரிக்கரகள் வேலை தட்டுபாடு நிலவுவதற்கு இதுவும் ஒரு காரணம் என கொள்ளலாம்.
2. வட டகோடா தவிர மீதமுள்ள 49 மாநிலங்களில் அரசாங்க பள்ளிகளையும், சாலை முதலான பொது சொத்துகளை பராமரிக்கவும் தனியார் வங்கிகளை விட்டால் நிதி ஆதாரங்களுக்கு வேறு நாதியே கிடையாது. எனவே அசலுக்கு 10 மடங்கு தொகை திரும்ப கிடைக்கும் வகையில் சமூக அமைப்புகளுக்கு இவ்வங்கிகளால் கடன் ஒப்பத்தங்கள் பெறப்படுகின்றன. ஆலோசணை தரகர்களும் இது போன்ற மோசமான திட்டங்களில் மிகச்சிறந்ததை பரிந்துரைப்பதற்கு மட்டுமே மிகப்பெரும் தொகையை தரகாக பெறுகின்றனர்.
3. வால்ஸ்டிரீட் தனியார் வங்கிகள் தங்களின் மிகப்பெரும் அரசாங்க முதலீட்டை, பங்கு சந்தையில் முதலீடு செய்வதன் மூலம், வங்கி செயல்பாடுகளை மிகப்பெரும் சூதாட்டம் ஆக்கி இருக்கின்றன. இந்த சூதாட்டத்தின் மூலம் நிலை தடுமாறி அதல பாதாளத்திலும் வீழ்கின்றன. இவற்றை காப்பாற்ற அரசாங்கமும் Bailouts எனும் முறையில் மிகப்பெரும் தொகையை முதலீட்டாளர்களுக்கு திருப்பி தர வேண்டி உள்ளது.
4. இந்த சூதாட்டத்தை ஆடுவதற்கு அதன் “திறன் மிக்க” தலைவர்களுக்கு கோடிக்கணக்கான டாலர்கள் சம்பளம் தரப்படுகின்றன. ஆனால் BND வங்கிக்கு இம்மாதிரி சூதாட்டமும் தேவைப்படவில்லை. அதற்காக “திறன் மிக்க” தலைவர்களும் தேவைப்படவில்லை. BND வங்கி தலைவர் சம்பளம் Eric Hardmeyer, President and CEO: $232,500 மட்டுமே. இது வால்ஸ்டிரீட் வங்கிகளில் வேலை செய்யும் சிறு பணியாளர்களின் சம்பளத்தை விடவும் குறைவானது ஆகும். எனவே சிறந்த வங்கிகளை நிர்வகிக்க “திறன் மிக்க” தலைவர்களுக்கு கொட்டி கொடுக்க வேண்டும் என்ற வாதம் பொய்யானது.
BND ஐ ஒழிக்க வால்ஸ்டிரீட்டின் போர்
இவ்வுண்மைகள் வெளி உலகத்திற்கு பரவும் இவ்வேளையில், அமெரிக்காவின் மற்ற மாநிலங்களும் இம்முறையை நடைமுறையில் கொண்டு வருவதை தடுக்க Trans-Pacific Partnership (TPP) எனும் கார்பரேட் நிறுவனங்களுக்கிடையேயான ஒப்பந்தத்தை செயலாக்க வால்ஸ்டிரீட் முயன்று வருகிறது.
புருனே, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளின் வங்கிகள் அமெரிக்காவில் செயல்படுவதற்கு ஆதரவு தெரிவிப்பது போல காட்டி அமெரிக்காவிற்கு கொண்டு வருவது, பிறகு அரசாங்க வங்கிகள் நேர்மையற்ற முறையில் சிறு வங்கிகளுடன் போட்டி போடுவதாக காட்டும் சட்டங்களை இயற்றுவது. அவற்றை வைத்து, BND வங்கியின் செயல்பாடுகளை முடக்குவதற்கும் திட்டமிட்டுள்ளது.
பொதுதுறை வங்கிகளுக்கான போராட்டம் The Public Bank Movement
மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக Public Bank Institute எனும் பொருளாதார நிபுணர்களை கொண்ட அமைப்பு ஏற்படுத்த பட்டிருக்கிறது. இது மாநாடுகள் நடத்தி பிரச்சிணைகளை அலசுகிறது.
முடிவு
தனியார் வங்கிகள் பூகம்பம், வறட்சி போன்ற தேசிய இடர்பாட்டு நேரங்களில் கூட தங்களது வணிக நலன் சார்ந்து மட்டுமே சிந்திக்க இயலும். அரசாங்க வங்கிகள் அப்படி அல்ல.
வங்கி ஊழியர்கள் மட்டுமல்லாது, எதாவது வங்கியில் பணம்/கடன் வைத்திருக்கும் ஒவ்வொரு இந்தியனும் தங்களுடைய தேவையை முடிவு செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது.
References
http://www.alternet.org/corporate-accountability-and-workplace/why-socialism-doing-so-darn-well-deep-red-north-dakota
http://en.wikipedia.org/wiki/Bank_of_North_Dakota
http://en.wikipedia.org/wiki/North_Dakota
-Article by Sabarinathan Arthanari.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home