1 May 2013

"கோ" தான முறையில் பசு வளர்ப்பு!!


"கோ" தான முறையில் பசு வளர்ப்பு!!



முகநூல் ஒன்றில் படித்த செய்தி.. நமது பாரம்பரியத்தை காப்பதற்கும் அழிந்து வரும் நாட்டுமாடுகளை காப்பதற்கும் தக்க உறுதுணையாக இருக்கும் என்று நம்புகின்றேன்.

இன்று நகரங்களில்(நரகத்தில்) வாழும் பலரும் தங்களது அன்றாட தேவைக்கு தினசரி அரை லிட்டர் முதல் ஒரு லிட்டர் வரை பால் வாங்குகின்றனர். ஆனால் அந்தப் பாலானது பெரும்பாலும் கொழுப்பு நீக்கப்பட்ட சக்கைப் பாலாகவும், தண்ணீர் கலக்கப்பட்ட நீர்த்துப் போன பாலாகவும், A1 Milk எனப்படும் சீமைப் பசும் பாலாகவும்(சீமைப் பன்றிப் பால்) இருக்கின்றது. வேறு வழி இல்லாத காரணத்தால் இவர்கள் அனைவரும் கதியே என்று அதனையே தொடர்ந்து வாங்கின்றனர்..
பெரும் நிறுவனங்களில் வாங்கும் பாக்கெட் பாலில் என்னென்ன கலப்படம் செய்யப் படுகின்றது என்பது அவர்களுக்கே வெளிச்சம்.
(
சோடா உப்பு, சோப்பு பவுடர், உள்ளிட்ட பல ரசயான பொருட்கள் கலப்படம் செய்யப் படுகின்றன..)
(
இதற்க்கு சில நிறுவனங்கள என்னவோ நமது கிராமங்களில் இருந்து நேரடியாக பாலை கொள்முதல் செய்து அதனை அப்படியே பக்கெட் செய்து விற்பது போன்ற பசுமையான விளம்பரங்கள் வேறு..)

தினசரி ஒரு லிட்டர் பால் வாங்கும் ஒரு குடும்பத்திற்கு சராசரியாக வருடம் ஒன்றிக்கு(40*365) 15000 ரூபாய் செலவு ஆகின்றது. ஆனாலும் நல்ல பால் கிடைப்பதில்லை.

எனவே இவை அனைத்துக்கும் மாற்றாக ஒரு திட்டம்..

1.
நகரத்திலோ அல்லது உங்கள் கிராமத்திலோ நாட்டு மாடு வளர்க்க இட வசதியும் நேரமும் இல்லாதவர்கள் தாங்கள் ஒரு நாட்டு மாட்டினை தானமாக வாங்கி ஒரு விவசாயிக்கு கொடுக்க வேண்டும்.

2.
மாட்டுக்கான பராமரிப்பு செலவு முழுவதும் அந்த விவசாயி ஏற்றுக் கொள்ள வேண்டும். மாடு அவருடைய சொத்தாக கருதப் படும்.

3.
நாட்டு மாட்டினை வாங்கி தானமளித்தவருக்கு தினசரி அரை லிட்டர் முதல் ஒரு லிட்டர் வரை இலவசமாக கொடுக்க வேண்டும்.

4.
மாட்டிலிருந்து கிடைக்கும் மற்ற பாலையும் மற்ற அணைத்து பலனும் விவசாயி அனுபவித்துக் கொள்ளலாம்..

அவர்கள் ஒன்றரை வருடம் பால் வாங்க செலவு செய்ய்யும் தொகையை செலவு செய்து ஒரு மாடு வாங்கி விட்டால் என்றென்றும் இலவசமாக பால் பெற்றுக் கொள்ளலாம்.

இதன் மூலம் நுகர்வோருக்கும் A2 Milk எனப்படும் சத்துமிக்க, உடலுக்கு நன்மை செய்யும் நல்ல பால் கிடைக்கும், விவசாயிக்கும் வருமானம் கிடைக்கும், நாட்டு மாடுகளும் காப்பாற்றப்படும். 

இதனை செயல் படுத்த இரு தரப்பினருக்கும் இடையே நல்ல புரிதல் மட்டும் இருந்தாலே போதுமானது.. சிறப்பான முறையில் செயல் படுத்தினால் நமது கிராம பொருளாதாரமும் நல்ல முறையில் வளரும்.



அஷ்ரஃப் 



1 Comments:

At 2 March 2019 at 21:35 , Blogger Unknown said...

அஸ்ஸலாமு அழைக்கும்
பூங்கனூர் குட்டை மாடு தேவை தெரிந்தால் பகிரவும்...

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home