27 April 2013

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம்


முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் 
அரேபியாவில் உள்ள மக்காவில் கி.பி. 571 ல் ஆமினா, அப்துல்லாஹ் அவர்களுக்கும் மகனாய் பிறந்து, பெற்றோரை இழந்து பாட்டனார் அப்துல் முத்தலிபு ஆதரவில் வளர்ந்து தீய செயல்கள் அனைத்திலிருந்தும் சிறு வயதிலேயே விலகியும் அல்அமீன் என்ற சிறப்பு பெயர் பெற்றவர்தான் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள். 

அவர் நாற்பது வயதை அடைந்ததும் மக்காவிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஜபலுன்நூர் என்ற இந்த மலையின் உச்சியிலுள்ள ஹிரா குகைக்கு சென்று தனிமையில் இருப்பது வழக்கம். சிலை வணக்கம், விபச்சாரம், மது அருந்துதல், பெண் குழந்தைகளை உயிருடன் புதைத்தல், கோத்திரங்களுக்கிடையே இருந்த பகைமை போன்ற தமது மக்களின் தீயச் செயல்கள் நிறைந்த வாழ்க்கை முறைகள் அவரை பெரிதும் கவலைப்படச்செய்தன. ஹிரா குகையில் பல நாட்கள் தொடர்ந்து தியானம் செய்வது அவரது வழக்கம். ஒரு நாள் அவர் ஹிரா குகையில் இருந்த போது அல்லாஹ்வின் கட்டளைப்படி வானத்திலிருந்து இந்த மலைக்கு இறங்கி வந்த ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் என்ற வானவர் அவரிடம் ஓதுவீராக என்றார். அதனைக்கேட்டு பயந்து நடுங்கி முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் எனக்கு ஓத தெரியாது என்று கூறினார். வானவர் அவரை இறுக அணைத்து மீண்டும் ஓதுவீராக என்றார். அதற்க்கும் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் நான் அறியேன் என்றார். மூன்றாவது முறையும் இவ்வாறே நடந்தது. பிறகு பின்வரும் திருக்குர்ஆன் வசனங்களை வானவர் ஓதிக் காட்டினார்.
(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திரு நாமத்தைக் கொண்டு ஓதுவீராக. 
அலக்என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான். 

ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி. 

அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான். 

மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான். அல்குர்அன் 96:1-5 

இதற்க்கு பின் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சென்றுவிட்டார். இந்த வான்மறை, அந்தந்தக் காலத்தின் நிலைமைக்கும் அவசியத்திற்கும் தக்கவாறு, - பெருமானார் வாழ்ந்த பிந்திய 23-
வருடங்களில்- கொஞ்சங் கொஞ்சமாக அருளப்பெற்று பூர்த்தி பெற்றது.

அஷ்ரஃப் 





0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home