முதலிடத்தை நோக்கி...!!
முதலிடத்தை நோக்கி...!!
தொடர்ந்து இந்தியா முதலிடத்தை நோக்கி...
ஊழலில்?
ஊழல் மலிந்துள்ளள
நாடுகள் குறித்த புதிய பட்டியலை 'டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்' என்ற நிறுவனம் அண்மையில் வெளியிட்டது.
இந்த பட்டியலில்
நாம் வாழும் இந்திய தேசம் 19 வது இடத்தில் உள்ளது என்ற செய்தி நம் எல்லோருக்கும் மகிழ்ச்சி
தரக்கூடியதாக உள்ளது.
இந்தப் பட்டியலில்
இந்தியா 19 வது இடத்தை பெற்றுள்ளது. அதன்படி 10 புள்ளிகளில் இந்தியா 6.8 புள்ளிகளுடன் 19 வது இடத்தில் உள்ளது.
உலக அளவில் உள்ள
எல்லா நாடுகளும் புதிய புதிய கண்டுபிடிப்புகளிலும்,புதிய புதிய முயற்சிகளை உருவாக்குவதிலும்
முன்னணியில் உள்ளது ஆனால் இந்தியா மட்டுமே ஏழைகள் அதிகமாக வாழும் நாடுகள், தீவிரவாத அச்சுறுத்தல் உள்ள நாடுகள் என்று
இது போன்ற அறிய வகை பட்டியலில் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.
இப்படி பல
பெருமைகளை கொண்ட இந்த தேசத்தில் பிறந்தமைக்காக நாம் பெருமை அல்லவா கொள்ள வேண்டும்,
நாட்டில் ஊழல்
அதிகரிக்க முக்கிய காரணம் அரசு அதிகாரிகள் தான் என்பது 100 சதவீதம் உண்மையானதாகும். எதற்கெடுத்தாலும்
லஞ்சம் எதிலும் லஞ்சம் என்று ஏழை மக்களை அரசு ஊழியர்கள் கொஞ்சம் கூட தயவு
தாட்சண்யம் பார்க்காமல் கசக்கி புழிவதை இந்த ஆளும் அரசுகளும், அதை நடத்தி கொண்டிருக்கும் கேடு கெட்ட
அரசியல்வாதிகளும் வேடிக்கை பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
காவல்துறை,விளையாட்டுத்துறை,அரசியல் என்று எங்கும் நீக்கமற லஞ்சம்
நிறைந்திருக்கும் இந்த நாட்டில்
மோசமான பொருளாதாரக்
கொள்கைகள்,மோசமான அரசியல் நடத்தும் கட்சிகள்,மோசமான வெளியுறவுக் கொள்கைகள், தூசி தட்டப்பட்டு கடுமையாக்கப்படாத சட்ட
திட்டங்கள் என்று இந்த தேசம் முழுவதும் தவறுகள் நிரம்பி கிடக்கின்றன.
இப்படி மொத்த
தேசமும் சாத்தான்களின் கைகளில் மாட்டி முழித்துக் கொண்டிருக்கிறது.
இப்படி பல
சிறப்பம்சங்கள் உள்ள நம் இந்திய தேசம் விரைவில் ஊழல் மிகுந்த நாடுகள் பட்டியலில்
கூடிய சீக்கிரம் முதலிடத்தை பெற வேண்டும் என்பதே நமது ஆசை.
ஏனென்றால் ஒவ்வொரு
தேசமும் ஏதாவது ஒரு துறையில் முதலிடத்தில் உள்ளது,அதை அந்தந்த தேசத்து மக்கள் பெருமையாக
சொல்லி மகிழ்கிறார்கள், அதே போல் நம் இந்திய தேசமும் ஏதாவது ஒரு துறையில் முதலிடத்தில்
இருக்க வேண்டும் அது ஊழலாக இருக்கட்டுமே..?
அஷ்ரஃப்
ஊழல் மலிந்துள்ளள நாடுகள் குறித்த புதிய பட்டியலை 'டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்' என்ற நிறுவனம் அண்மையில் வெளியிட்டது.
இந்த பட்டியலில் நாம் வாழும் இந்திய தேசம் 19 வது இடத்தில் உள்ளது என்ற செய்தி நம் எல்லோருக்கும் மகிழ்ச்சி தரக்கூடியதாக உள்ளது.
இந்தப் பட்டியலில் இந்தியா 19 வது இடத்தை பெற்றுள்ளது. அதன்படி 10 புள்ளிகளில் இந்தியா 6.8 புள்ளிகளுடன் 19 வது இடத்தில் உள்ளது.
உலக அளவில் உள்ள எல்லா நாடுகளும் புதிய புதிய கண்டுபிடிப்புகளிலும்,புதிய புதிய முயற்சிகளை உருவாக்குவதிலும் முன்னணியில் உள்ளது ஆனால் இந்தியா மட்டுமே ஏழைகள் அதிகமாக வாழும் நாடுகள், தீவிரவாத அச்சுறுத்தல் உள்ள நாடுகள் என்று இது போன்ற அறிய வகை பட்டியலில் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.
இப்படி பல பெருமைகளை கொண்ட இந்த தேசத்தில் பிறந்தமைக்காக நாம் பெருமை அல்லவா கொள்ள வேண்டும்,
நாட்டில் ஊழல் அதிகரிக்க முக்கிய காரணம் அரசு அதிகாரிகள் தான் என்பது 100 சதவீதம் உண்மையானதாகும். எதற்கெடுத்தாலும் லஞ்சம் எதிலும் லஞ்சம் என்று ஏழை மக்களை அரசு ஊழியர்கள் கொஞ்சம் கூட தயவு தாட்சண்யம் பார்க்காமல் கசக்கி புழிவதை இந்த ஆளும் அரசுகளும், அதை நடத்தி கொண்டிருக்கும் கேடு கெட்ட அரசியல்வாதிகளும் வேடிக்கை பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
காவல்துறை,விளையாட்டுத்துறை,அரசியல் என்று எங்கும் நீக்கமற லஞ்சம் நிறைந்திருக்கும் இந்த நாட்டில்
மோசமான பொருளாதாரக் கொள்கைகள்,மோசமான அரசியல் நடத்தும் கட்சிகள்,மோசமான வெளியுறவுக் கொள்கைகள், தூசி தட்டப்பட்டு கடுமையாக்கப்படாத சட்ட திட்டங்கள் என்று இந்த தேசம் முழுவதும் தவறுகள் நிரம்பி கிடக்கின்றன.
இப்படி மொத்த தேசமும் சாத்தான்களின் கைகளில் மாட்டி முழித்துக் கொண்டிருக்கிறது.
இப்படி பல சிறப்பம்சங்கள் உள்ள நம் இந்திய தேசம் விரைவில் ஊழல் மிகுந்த நாடுகள் பட்டியலில் கூடிய சீக்கிரம் முதலிடத்தை பெற வேண்டும் என்பதே நமது ஆசை.
ஏனென்றால் ஒவ்வொரு தேசமும் ஏதாவது ஒரு துறையில் முதலிடத்தில் உள்ளது,அதை அந்தந்த தேசத்து மக்கள் பெருமையாக சொல்லி மகிழ்கிறார்கள், அதே போல் நம் இந்திய தேசமும் ஏதாவது ஒரு துறையில் முதலிடத்தில் இருக்க வேண்டும் அது ஊழலாக இருக்கட்டுமே..?
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home