ஒரு முஸ்லிமின் பண்புகள்
1. ஒரு முஸ்லிம் தனது வாழ்வை முழுமையாக இறைவனுக்காக
அர்ப்பணித்து, தனது அனைத்து காரியங்களையும் இறை பொருத்தத்தை
நாடியே செயலாற்ற வேண்டும்.
2. அவன் தன்னைப் படைத்த இறைவனையன்றி வேறு யாரையும் வணங்கக் கூடாது. தன் பெற்றோருக்கு நன்மை செய்ய வேண்டும். மேலும் உறவுகளைப் பேணி நடப்பதோடு பக்கத்து வீட்டார் மற்றும் விருந்தாளிகளுக்கு உரிய மதிப்பை வழங்கி வாழும் அதே வேலை பிறருக்கும் முடிந்தளவு உபகாரம் புரிய வேண்டும்.
3. ஒரு முஸ்லிம் இறைவன் தடை செய்துள்ள கொலை, களவு, விபச்சாரம், இலஞ்சம், சூது, வட்டி, மது அருந்துதல், போதை வஸ்து பாவித்தல், ஊழல், மோசடி, போன்ற கொடிய பாவங்களில் ஒரு போதும் ஈடுபட கூடாது.
4. ஒருமுஸ்லிம் எப்போதும் பொய் பேசாது உண்மையே பேச வேண்டும்.
5. ஒரு முஸ்லிம் வாக்களித்தால் மாறு செய்யக்கூடாது. அவன் நம்பிக்கை நாணயத்துடன் நடக்க வேண்டும்.
6. ஒரு முஸ்லிம் மற்றவர்களைப் பற்றி புறம் பேசவோ, மற்றவர்களின் குறைகளைத் துருவித் துருவி ஆராயவோ, பிறரை மானப்பங்கப் படுத்தவோ கூடாது.
7. ஒரு முஸ்லிம் தைரியமுள்ளவனாக இருக்க வேண்டும், கோழையாக இருக்கக் கூடாது.
8. ஒரு முஸ்லிம் உண்மையை ஆதரிக்கும் விடயத்தில் நிலையானவனாகவும், உண்மையை எடுத்துக் கூறுவதில் தைரியமுள்ளவனாகவும் இருப்பான்.
9. அடுத்தவர் தன்னை எதிர்த்த போதும் ஒரு முஸ்லிம் நீதமாக நடந்துக் கொள்ள வேண்டும். அடுத்தவரின் உரிமையை சட்ட விரோதமாக மீறவும் கூடாது. அடுத்தவர் மூலம் அநீதம் செய்யப் படுவதை அனுமதிக்கவும் கூடாது. அவன் வலிமை உள்ளவனாகவும் தன்மானத்தை எவரிடமும் இழக்காதவனாகவும் இருக்க வேண்டும்.
10. ஒரு முஸ்லிம் சமாதானத்தையும், ஐக்கியத்தையும் விரும்ப வேண்டும். வதந்திகளைப் பரப்பி விடுபவனாகவோ, வன்முறைகள், குழப்பங்களைத் தூண்டுபவனாகவோ இருக்கக் கூடாது.
11. ஒரு முஸ்லிம் தன் செயற்பாடுகளை இயன்றவரை நேர்த்தியாக செய்ய வேண்டும்.
12. ஒரு முஸ்லிம் கர்வமற்றவனாகவும், நற்குணமுள்ளவனாகவும் இருக்க வேண்டும்.
13. ஒரு முஸ்லிம் சிறியோருக்கு இறக்கம் காட்டுபவனாகவும், முதியோருக்கு மதிப்பளித்து நடப்பதோடு இறைவனின் அனைத்துப் படைப்பினங்களோடும் ஜீவகாருண்யம் பேணி நடந்து கொள்வதும் அவசியமாகும்.
14. அவன் நன்மை புரிவதோடு அடுத்தவரையும் நன்மை புரியத்தூண்ட வேண்டும். அவன் தீமை புரிவதை தவிர்த்துக் கொள்வதோடு அடுத்தவரை யும் அதிலிருந்து தடுக்க வேண்டும்.
15. ஒரு முஸ்லிம் அல்லாஹ்வின் மார்க்கம் நிலைத்திருக்கவும், உலகம் முழுவதும் பரவுவதற்கு முயற்சிக்கவும் போராடவும் வேண்டும். இஸ்லாத்தின் வரையறையை மீறாதவனாக அனைத்து காரியங்களையும் மேற்கொள்வான், இஸ்லாத்தின் வெற்றிக்கென சட்ட விரோத செயல்கள் எதனையும் மேற்கொள்ளக் கூடாது.

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home