29 May 2013

சிறுபான்மையினருக்கு கல்வி உதவித்தொகை - தமிழக அரசு அறிவிப்பு!



சிறுபான்மையினருக்கு கல்வி உதவித்தொகை - தமிழக அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையின (இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் ,புத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்சிகள்) மாணவ மாணவிகளுக்கு 2013-2014 ஆண்டுக்கான கல்வி உதவித் தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது. 2013-14ம் கல்வியாண்டிற்கு, புதிதாகஉதவித்தொகை பெறவும் மற்றும் முந்தைய வருடம் பெற்று கொண்டிருக்கும் உதவித்தொகையை புதுப்பிக்கவும் விண்ணப்பங்கள் வரவேற்க்கபடுகின்றன.

விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் :

1) 1
முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு

2)
பெற்றோரின் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்

3)
இறுதித் தேர்வில் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்

4)
ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக 2 நபர்களுக்கு மட்டும்வழங்கப்படும்

5)
மாணவிகளுக்கு 30 சதவிகிதம் சிறப்பு ஒதுக்கீடு அளிக்கப்படும்.


விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரிக்கு சென்று பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

http://www.tn.gov.in/bcmbcmw/welfschemes_minorities.htm

பூர்த்தி செய்யப்பட விண்ணப்பங்களை தேவையான ஆவணங்களுடன் குறிப்பிட்ட தேதிக்குள் தங்களுடைய கல்வி நிறுவனங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.

இணைக்க வேண்டிய ஆவணங்கள் :

1.
பிறப்பு சான்றிதழ்

2.
வருமான சான்றிதழ்

3.
சாதி சான்றிதழ்

4.
முகவரி சான்றிதழ்

5.
மாணவர்களின் வங்கி கணக்கு எண்

மேற்கண்ட ஆவணங்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தங்களுடைய பிள்ளைகள் பயிலும் பள்ளிகளில் ஜூலை மாதம் இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

ஆண்டிற்கு கல்வி உதவியாக சுமார் 6500 வரை வழங்கப்படும். எனவே பெற்றோர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி: "கல்வி வழிகாட்டி"

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home