9 May 2013

எச்சரிக்கை KFC உணவில் நச்சுத்தன்மை

எச்சரிக்கை KFC உணவில் நச்சுத்தன்மை
உணவில் நச்சுத்தன்மை:83லட்சம் டாலர் இழப்பீடு வழங்க KFC-க்கு நீதிமன்றம் உத்தரவு!

கான்பெர்ரா:ஆஸ்திரேலியா குடும்பத்தினருக்கு 83 லட்சம் அமெரிக்க டாலர் இழப்பீடு வழங்க ஃபாஸ்ட்புட் உலகின் புகழ்பெற்ற கெண்டகி ஃப்ரைட் சிக்கனுக்கு(K F C) நியூ சவுத் வேல்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கெண்டகி ஃப்ரைட் சிக்கனின் டிவிஸ்டர் வ்ராப்பர் என உணவை சாப்பிட்டதால் மூளையில் பாதிப்பு ஏற்பட்ட ஆஸ்திரேலிய சிறுமை மோனிகா ஸமானின் குடும்பத்தினருக்கு இத்தொகையை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2005-
ஆம் ஆண்டு சிட்னியில் KFC.சியின் ரெஸ்ட்ராண்டில் ட்விஸ்டர் வ்ராப்பரை சாப்பிட்ட சிறுமிக்கு நச்சுத்தன்மை ஏற்பட்ட மூளை பாதிப்படைந்தது.பேசும் சக்தியையும், நடக்கும் சக்தியையும் இழந்த அச்சிறுமி வீல்சேரில் நடமாடுகிறார்.

நீதிமன்ற தீர்ப்பில் நிராசை அடைந்துள்ளதாகவும்,
மேல்முறையீடு செய்யப் போவதாகவும் கே.எஃப்.சி அறிவித்துள்ளது.உணவின் தரம் குறித்து உறுதிச்செய்வதில் கே.எஃப்.சி நிறுவனம் தோல்வியை தழுவியதாக நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்தார்.


அஷ்ரஃப் 


 கே யப் ஸீ இது முதல் ஹலாலே இல்லை ... பொய்யான ஹாலால் சான்றிதலை பதித்ிருக்கிறார்கள்..


0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home