9 May 2013

"பலஸ்தீனை தனி நாடாக அங்கீகரித்த கூகுள்


ஜெருசலேம் : இது வரை இஸ்ரேலின் ஆதிக்கத்தில் உள்ள பகுதி என பொருள் கொள்ளத்தக்க வகையில் பலஸ்தீனத்தை பலஸ்தீன பகுதிகள் என்றே தன் இணையத்தில் வெளியிட்டு வந்த கூகுள் முதல் முறையாக பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளது.

இஸ்ரேல் ஆதிக்கத்திலுள்ள பலஸ்தீனை எப்படி குறிப்பிடுவது என்பதில் சர்வதேச ஊடகங்கள் மத்தியில் கருத்து வேறுபாடு நிலவுகிறது. கூகுள் உள்ளிட்ட பெரும்பாலான ஊடகங்கள் இஸ்ரேல் ஆதிக்கத்தில் உள்ள பகுதியாகவே இது வரை பலஸ்தீனத்தை சித்தரித்த நிலையில் முதல் முறையாக பலஸ்தீனை தனி நாடாக கூகுள் அங்கீகரித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் எதிர்ப்பை மீறி கடந்த ஆண்டு பலஸ்தீனத்திற்கு ஐ.நாவில் பார்வையாளர் அந்தஸ்துள்ள நாடு எனும் ஸ்தானம் கொடுக்கப்பட்டதே கூகுளின் இம்முடிவுக்கு காரணமென அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

ஒரு தொழில்நுட்ப நிறுவனம் என்பதை தாண்டி கூகுள் பல விஷயங்களில் கருத்தாக்கம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. சீனாவின் அரசு கட்டுப்பாட்டை விமர்சிப்பது, எகிப்தில் நடந்த மக்கள் புரட்சிக்கு உதவியது, கடும் எதிர்ப்புகள் எழுந்த போதும் யூடியூப்பில் முஸ்லீம்களின் தூதரான முஹம்மதை இழிவுபடுத்திய படத்தை பதிவிறக்கம் செய்ய மறுத்தது போன்றவற்றை உதாரணமாக சொல்லலாம்.


அஷ்ரஃப் 



0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home