மனிதர்களின் சராசரி தூக்கம் அதிகபட்சம் 7 மணி நேரம்
மனிதர்களின் சராசரி தூக்கம் அதிகபட்சம் 7 மணி நேரம். கம்ப்யூட்டர், டி.வி. என எதன் முன்போ அல்லது சும்மாவோ ஒருவர் உட்கார்ந்த நிலையில் செலவிடும் நேரம் எவ்வளவு தெரியுமா? 9:30 மணி நேரம்! அதனால் என்ன என்கிறீர்களா?
ஒரு நாளைக்கு 6 மணி நேரத்துக்கு மேல் உட்கார்ந்தே இருப்பவர்களில் 40 சதவிகிதம் பேர்,3 மணி நேரத்தை விடக் குறைவாக உட்கார்ந் திருப்பவர்களை விட, சில வருடங்கள் முன்னதாகவே உயிரிழக்கிறார்களாம்.
ஐயையோ...! அது மட்டுமா?
பருமனாக இருப்பவர்களைக் கூர்ந்து கவனித்துப் பாருங்கள். ஒல்லியாக இருப்பவர்களைவிட , இவர்கள் இரண்டரை மணி நேரம் கூடுதலாக உட்கார்ந்திருப்பது தெரிய வரும். ஒரு சூயிங்கம் மென்றால்கூட உங்கள் உடலின் குறைந்த அளவு கலோரியாவது எரிக்கப்படுமாம் . ஆனால், உட்கார்ந்திருப் பதால், ஒரு பயனும் உண்டாவதில்லை!
உட்கார்ந்த உடனேயே உங்கள் கால் தசைகளின் இயக்கம் நின்று போகிறது. கலோரி எரிக்கப்படுவது வெகுவாகக் குறைகிறது. கொழுப்பை உடைத்துக் கரைக்கும் ஒருவித என்சைம் சுரப்பு, ‘மளமள’வென இறங்குகிறது. தொடர்ந்து 2 மணி நேரம் உட்கார்ந்திருக்கும் போது, நல்ல கொலஸ்ட்ராலின் அளவு குறையத் தொடங்குகிறது. உட்கார்ந்திருக்கிற நேரம் அதிகமாக, ஆக இன்சுலின் சுரப்பு பாதிக்கப்பட்டு, நீரிழிவை வரவேற்க ஆயத்தமாகிறது உங்கள் உடல்.
‘‘உடம்பை அசைக்கிற போதுதான், ரத்த ஓட்டம் சீராக இருக்கும். உணவு செரிக்கும். ஒரே இடத்துல ரொம்ப நேரம் உட்கார்ந்திருக் கிறவங்களுக்கு இந்த விஷயங்கள் சரியா நடக்காது. அது அடுக்கடுக்கான பிரச்னைகளைக் கொடுக்கும்...’’ எச்சரிக்கிற தொனியில் ஆரம்பிக்கிறார் எலும்பு, மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் விவேக்.
‘‘நம்ம உடம்புல நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்புன்னு ரெண்டு இருக்கு. கெட்ட கொழுப்புங்கிறது உணவின் மூலமும், நல்ல கொழுப்பு, உடற்பயிற்சிகள் மற்றும் உடல் இயக்கங்கள் மூலமும்தான் கிடைக்கும். 24 மணி நேரத்துல 10 முதல் 12 மணி நேரம் உட்கார்ந்தே இருக்கிறது மூலமா ஆரோக்கியத்துக்க ுத் தேவையான நல்ல கொழுப்பு அதிகரிக்காமப் போகிற அபாயம் உண்டு. நல்ல கொழுப்பு குறைஞ்சு, கெட்ட கொழுப்பு அதிகமாகிற போது, மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் தாக்கலாம்.
கழுத்து வலியும் முதுகு வலியும் தவிர்க்க முடியாமப் போகும். முழங்கால் வலி வரும். ஐடி கம்பெனி, பேங்க் மாதிரியான இடங்கள்ல உட்கார்ந்தே வேலை பார்க்க வேண்டிய நிர்ப்பந்தத்துல இருக்கிறவங்களுக ்கு இதெல்லாம் சகஜம். உட்காரும் போது, நம்மளோட இருக்கைக்கும், டேபிளுக்குமான இடைவெளியும், உயர வித்தியாசமும் சரியா இருக்க வேண்டியது அவசியம்.அதாவது டேபிளோட உயரம், முழங்கைகளைவிட ரொம்ப உயரமாகவும்இருக்கக் கூடாது. ரொம்ப தாழ்வாகவும் இருக்கக் கூடாது. நெஞ்சுப்பகுதிக் கு நேரா இருக்கிறதுதான் சரி.
அது மட்டுமில்லாம, முதுகுப் பகுதி வளையாம, நேரா இருக்கிற மாதிரியான இருக்கை அவசியம். முதுகுக்கு சப்போர்ட்டா ‘பேக் ரெஸ்ட்’ உள்ள குஷன் வச்சுக்கிறதும் நல்லது. உட்கார்ந்து வேலை பார்க்கிறதைத்தவிர்க்க முடியாதே... என்ன செய்யன்னு கேட்கறவங்க, ஒவ்வொரு மணி நேரத்துக்கு ஒரு முறையும் 3 முதல் 5 நிமிஷங்கள் எழுந்து நடந்துட்டு வரணும். ஒரு மணி நேரத்துக்கொரு முறை 5 நிமிஷங்களுக்கு கை, கால்களை நீட்டி, மடக்கலாம்.
இதனால முதுகுப் பக்க தசை கொஞ்சம்ரிலாக்ஸ் ஆகும். காலையில எழுந்ததும், உடம்பு இறுக்கமா இருக்கிற மாதிரி உணர்ந்தாலோ, அங்கங்கே சதை பிடிப்பு மாதிரி உணர்ந்தாலோ, அலட்சியப்படுத்த ாம, மருத்துவரைப் பார்த்து ஆலோசனை எடுத்துக்கிறது நல்லது’’ - அட்வைஸுடன் முடிக்கிறார் டாக்டர்.
இப்படியெல்லாம் பயமுறுத்தினா எப்படி? வேலையிடத்துல பல மணி நேரம் உட்கார்ந்துதானே ஆகணும்? என்கிறீர்களா?
உட்கார்ந்து வேலை பார்க்க வேண்டியவர்கள், வேலை நேரத்துக்கு இடையில் கிடைக்கிற நேரங்களில் படத்திலுள்ள பயிற்சிகளைச் செய்து வந்தாலே பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம். தவிர சாதாரணமாகவும், வேலை நேரத்தில் கம்ப்யூட்டர் முன்பும் உட்காரும் போது எது சரியான நிலை என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்...
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home