15 June 2013

ஒவ்வரு வரும் படிக்க கூடியது


டாக்டர். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் (Doctor. Sarvepalli Radhakrishnan ) கூறுவது>

கட்டாய மதமாற்றத்தை முஹம்மது நபிகள் போன்ற சிந்தனையாளர்கள் ஊக்குவித்திருக்க முடியாது!

எல்லா மதங்களைப் போல் உண்மையும் ஒழுக்கத்தையும் வலியுறுத்தும் மார்க்கமாக இஸ்லாம் விளங்குகின்றது.

முஹம்மது நபிகளைப் பொருத்தவரையில், மதம் என்பது உண்மையை அறிந்து அதன் வழியில் வாழ்வது என்பதாகவே இருந்தது.

முன்னேறிச் செல்லும் மனித குலத்தின் மனசாட்சிக்கு
முஹம்மது நபி அவர்கள் கட்டுப்பாடுகள் எதனையும் விதிக்கவில்லை.

மனிதர்களின் சிந்தனை கண்மூடித்தனமாக,
அதிகாரத்திற்கு அடிபணிய வேண்டும் என்ற நிலையை
இறைத்தூதர் ஏற்படுத்தவில்லை.

உலகின் மனிதாபிமானமற்ற நடைமுறைகளைத்
நியாயப்படுத்தம் நிலையை, அறிவாற்றலின் அடிப்படையில்
பின்பற்றப்படும் இஸ்லாத்தில் இல்லை.

கட்டாய மதமாற்றத்தை முஹம்மது நபிகள்
போன்ற சிந்தனையாளர் ஊக்குவித்திருக்க முடியாது.

தனது நம்பிக்கைகளை மாற்றிக் கொள்ளும்படி
மனிதர்களை நாம் நிர்பந்திக்க முடியாது.

பின்வரும் திருக்குர்ஆன் வசனங்கள் இதற்கு ஆதாரமாக அமைகின்றது.

மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்பந்தமுமில்லை.
(திருக்குர்ஆன் 2-256)

உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்;
எனக்கு என்னுடைய மார்க்கம்.
(திருக்குர்ஆன் 109:6)

(டாக்டர். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் எழுதிய
The Heart of Hindustan என்ற நூலில் இருந்தது)

நபிகள் நாயகத்தின் தோழர் அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள் அஸ்மாவின் தாயார் இஸ்லாத்தை ஏற்காமல் இருந்த நிலையில் மக்காவிலிருந்து மதினாவிலிருக்கும் தனது மகள் அஸ்மா (ரலி) அவர்களைக் காண வருகை தந்தார். அப்பொழுது அஸ்மா (ரலி) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் எனது தாயார் என்னிடத்தில் ஏதேனும் எதிர்பார்த்தவராக என்னைக் காண வந்திருக்கிறார். அவர்களோடு அன்புடன் நடந்து கொள்ளட்டுமா? என்று விளக்கம் கேட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) ஆம்! அவரிடம் அன்புடன் நடந்து கொள்என்று பதிலளித்தார்கள்

அறிவிப்பாளர்: அஸ்மா (ரலி) ஆதார நூல்: புகாரி, முஸ்லிம்

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்

பாதுகாப்பிற்கு உத்தரவாதமளிக்கப்பட்ட முஸ்லிமல்லாத
ஒருவரை கொலை செய்பவர் சுவர்க்கத்தின்
வாடையைக் கூட அதன் வாடை நாற்பது ஆண்டு கால
தொலைவிற்கு பரவியிருப்பினும் நுகர முடியாது

அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி) ஆதார நூல்: புகாரி



-----------

அஷ்ரஃப் 


0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home