12 June 2013

நீங்கள் புதிதாக வீடு கட்டுகிறீர்களா..?? உங்கள் வீடு எழ எத்தனை மரங்கள்-வனங்கள், இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டன என தெரியுமா..?

சிமண்ட் உற்பத்திக்கு-அலுமினியம் (மலைதொடர்கள் அழிப்பு), சாம்பல் (நிலக்கரி எடுக்க வனம் அழிப்பு), இரும்பு கம்பிக்கு மலைகள் உடைப்பு, உங்கள் வீட்டு பர்னிச்சர் செய்ய எவ்வளவு மரங்கள், எலக்டிரிக்கள் சாமான்கள் தாமிரம் போன்றவற்றிற்கு மலைகள் உடைப்பு, செங்கல் செய்ய விவசாய பூமிகள் அழிப்பு (உணவு தட்டுபாடு), மணல் (நீர் தட்டுப்பாடு), பெயின்ட் (காற்று, நீர் மாசு-வன அழிப்பு).....

செங்கல, சிமண்ட் இரும்பு போன்றவற்றை உருக்கி சுத்திகரிப்பு செய்ய மின்சாரம்-பெட்ரோலியம்- அவை தயாரிக்க மீண்டும் நிலக்கரி, காற்று மாசு..?

அழிக்கப்பட்ட வனங்களால் உயிரையும், வசிப்பிடத்தையும் இழந்த
மிருகங்கள்-வனவாசி-ஆதிவாசி-மலைவாழ் மக்கள்...???

எனவே, நீங்கள் ஒரு வீடு கட்டுகிறீர்கள் என்றால் அந்த பாவத்தை சரிகட்ட குறைந்தபட்சம் நூறு மரங்களேனும் நட வேண்டும்..! 

இல்லையேல் உங்கள் உள்ளூரிலேயே கிடைக்கும் பனை/தென்னை ஓலை (கூரைக்கு மாற்று), மாடிவீடு எனில் மர சட்டங்கள் , கல், சுண்ணம் (சிமண்டுக்கு மாற்று) கொண்டு கட்டப்படும் இயற்கையை பாதிக்காத வீடுகளை காட்டுங்கள். உங்கள் ஆரோக்கியத்துக்கும் மிக நல்லது, உலகுக்கும் நல்லது


!

அஷ்ரஃப் 



0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home