26 July 2013

போலி வக்கீல்களிடம் ஏமாறாமல் இருக்க ஒரு இணையதளம்


போலி வக்கீல்களிடம் ஏமாறாமல் இருக்க ஒரு இணையதளம்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில்,www.barcounciloftamilnadupuducherry.com என்ற புதிதாக ஒரு இணையதளத்தை தொடங்கியுள்ளது. இந்த இணையதளத்தை கடந்த 20–ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.சதாசிவம் தொடங்கி வைத்துள்ளார்.

வக்கீல்கள் பெயர், பிறந்த தேதி, வக்கீலாக பதிவு செய்த நாள், தற்போது எந்த கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றுகிறார் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இந்த இணையதளத்தில் பதிவு செய்யப்படுகிறது.

பொதுமக்கள் ஒரு வக்கீல் குறித்து விவரங்கள் அனைத்தும் இந்த இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் போலி வக்கீல்களிடம் வழக்கினை கொடுத்து பொதுமக்கள் ஏமாறாத நிலை உருவாகும்.


0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home