அசத்தும் ஒளியில் மாயை அதிசயம்!
அசத்தும் ஒளியில் மாயை அதிசயம்!
ஒரு நிமிடம் கண்களை நன்றாகத் துடைத்துக்கொள்ளுங்கள். இப்போது நீங்கள் பார்க்கப்போகும் படங்கள், உங்கள் கண்களுக்கு அதிக வேலை கொடுக்கப்போகின்றன.
இந்தப் படங்கள், 'நாம் பார்ப்பது நிஜம்தானா?’ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி, மீண்டும் மீண்டும் உற்றுப் பார்க்கவைக்கும். படுஜாலியாகவும் இருக்கும். அத்துடன், மூளைக்கும் வேலை கொடுத்து யோசிக்கவைக்கும். அறிவியலின் அடிப்படை விஷயங்களையும் கற்றுத்தரும்.
ஒரு நிமிடம் கண்களை நன்றாகத் துடைத்துக்கொள்ளுங்கள். இப்போது நீங்கள் பார்க்கப்போகும் படங்கள், உங்கள் கண்களுக்கு அதிக வேலை கொடுக்கப்போகின்றன.
இந்தப் படங்கள், 'நாம் பார்ப்பது நிஜம்தானா?’ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி, மீண்டும் மீண்டும் உற்றுப் பார்க்கவைக்கும். படுஜாலியாகவும் இருக்கும். அத்துடன், மூளைக்கும் வேலை கொடுத்து யோசிக்கவைக்கும். அறிவியலின் அடிப்படை விஷயங்களையும் கற்றுத்தரும்.
அப்படி என்ன படங்கள்? காட்சிகளை வைத்துக்கொண்டு கண்ணாமூச்சி காட்டும் விளையாட்டு. கண்ணால் காண்பதும் பொய் என்பார்களே, அதை 100 சதவிகிதம் உண்மை என நினைக்கவைப்பவை. மேலோட்டமாகப் பார்த்தால், ஒரு தோற்றத்தையும் அதையே உற்றுப் பார்த்தால் வேறொரு தோற்றத்தையும் தரக்கூடியவை. தொடர்ந்து உற்றுப் பார்த்தால், இரண்டில் எது நிஜம் என்று மலைக்கவைக்கும்.
அழகான ஓர் உதாரணம்... இந்தப் படத்துக்கு 'ஆறு பென்சில் ஏழு உருவம்' என்று பெயர் கொடுக்கலாம். காரணம், பென்சிலின் மேல் பகுதியைப் பார்த்தால், ஏழு கூர்முனைகளைப் பார்க்கலாம். கீழே பார்த்தால், ஆறுதான் இருக்கும். எத்தனை முறை எண்ணிப் பார்த்தாலும் இதேதான்.
அது எப்படி, ஒரே படத்தில் ஆறு பென்சில்கள் ஏழு பென்சில்களாகவும் தோன்ற முடியும்? இந்த அதிசயத்துக்கு 'ஓளியியல் மாயை’ என்று பெயர். ஆங்கிலத்தில், ஆப்டிக்கல் இல்யூஷன். (optical illusion). அதாவது, உண்மையாக இருப்பதற்கு மாறாக, காட்சிரீதியாக வேறொன்றாக உணரப்படும் தோற்றம்.
வேறுவிதமாகச் சொல்வதானால், கண்ணுக்கு ஒன்றாகவும் மூளைக்கு வேறொன்றாகவும் தோன்றும் காட்சிகள். கண்ணில் தோன்றும் உருவத்தில் உள்ள விவரங்களை, மூளை புரிந்துகொள்ளும் விதத்தில் அது வேறொன்றாகத் தோன்றுகிறது.
இதற்கு எண்ணற்ற சுவாரஸ்யமான உதாரணங்கள் இருக்கின்றன. அவற்றுள் சில, மிகவும் எளிமையானவை.
ஒரு படத்தில் வெறும் மரக்கிளைகளாகத் தோன்றும். கொஞ்சம் உற்றுப் பார்த்தால், அந்தக் கிளைகள் ஒவ்வொரு விலங்காகக் காட்சி அளிக்கும்.
இதேபோல் சிட்டுக்குருவிகள் பறப்பதுபோல் இருக்கும். உற்றுப் பார்த்தால், அதுவே இளம்பெண்ணாகத் தோன்றும். இதுபோன்ற படங்களை அவ்வப்போது பத்திரிகைகளில் பார்த்திருப்பீர்கள். இவற்றை இன்டர்நெட்டில் சலிக்காமல் பார்த்து வியக்கலாம். அதற்கெனச் சிறப்பு வலைதளங்கள் இருக்கின்றன.
ஆப்டிக்கல் இல்யூஷனிஸ்ட் (http://www.optical-illusionist.com/) என்ற வலைதளம் இத்தகைய தோற்றங்களை வரிசையாகப் பட்டியலிட்டுத் தருகின்றது. ஒவ்வொரு படத்துடனும் அதற்கான விளக்கமும் இருக்கின்றன.
- சைபர்சிம்மன்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home