18 September 2013

உங்கள் ஆண்ட்ராய்ட் சாதனத்தை புதியதுபோல் பராமரிக்க........


உலகில் உள்ள தகவல் தொடர்பு சாதனங்களில் முக்கியத்துவம் வாய்ந்தது மொபைல்
போன். மொபைல் போன் வரிசையில் புதிய புரட்சி ஆண்ட்ராய்ட் மொபைல்போன்கள். உலகெங்கும் அனைவராலும் விரும்பப்படும் ஆண்ட்ராய்ட் போன்கள் பல்வேறு விலைகளில், பல்வேறு அளவுகளில், பல்வேறு வசதிகளுடன் கிடைக்கின்றன.

ஆண்ட்ராய்ட் போன்கள் இந்தளவிற்கு பிரபலமானதற்கு காரணம் user friendly கட்டமைப்புதான். இவ்வாறு அனைவரையும் கவரும் ஆண்ட்ராய்ட் போன்கள், நாளடைவில் கணினியைப் போன்று செயல்படும் திறனில் வேகம் குறைகின்றன. இதற்கு காரணம் பயன்படுத்தும் விதம் மற்றும் அதில் இடம்பெரும் அப்ளிகேஷன்களின் அளவு, இடம்பெற்றிருக்கும் கோப்புகளின் எண்ணிக்கை மற்றும் கோப்புகளின் அளவு போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

உங்களுடைய ஆண்ட்ராய்ட் சாதனத்தைப் புதிய போனைப் போன்று அதிக செயற்திறனுடன் செயல்பட வைக்க ஒரு புதிய மென்பொருள் பயன்படுகிறது.

மென்பொருளின் பெயர்: Advanced mobile care

இந்த மென்பொருள் மெதுவாக இயங்கும் ஆண்ட்ராய்ட் போனில் உள்ள தேவையற்ற கோப்புகளை நீக்குகிறது. மேலும் ஆண்ட்ராய்ட் போனில் உள்ள தேவையற்ற வைரஸ்களை நீக்கி பாதுகாக்கின்றனது.

Games Booster:

நீங்க் உங்களுடைய ஆண்ட்ராய்ட் சாதனத்தில் கேம்ஸ் விளையாடும்போது , கேம்ஸ் ஸ்பீடர் (Games speeder) எனும் டூல் மூலம் உங்களுடைய ஆண்ட்ராய்ட் போன் பேக்ரவுண்டில் இயங்கும் நிரலிகளை கட்டுப்படுத்தி, வேகமாக கேம் விளையாட உதவுகிறது.

Battery Saver:

இதிலுள்ள battery saver எனும் டூல் மூலம் வீணாகும் பேட்டரி சக்தியை முறையாக சேமித்து முடியும்.

Privacy Adviser:

இந்த டூல் மூலம் உங்களுடைய ஆண்ட்ராய்ட் சாதனத்தில் நிறுவப்படும் ஒவ்வொரு அப்ளிகேஷனும் மூலம் உங்களுடைய சாதனத்தில் இருக்கும் எப்படிப்பட்ட வசதிகளை இயக்க முடியும் என்பதை தனித்தனியாக காட்டுகிறது.

Application Manager:

இந்த டூல் மூலம் சாதனத்தில் நிறுவப்பட்டிருக்கும் அப்ளிகேஷன்களை நீக்கவும், movie apps என்பதன் மூல் SD card க்கு மூவ் செய்துகொள்ளவும் முடியும்.

Cloud Backup:

இந்த வசதியின் மூலம் உங்கள் தொடர்பில் இருக்கும் contact, call log போன்றவற்றை இணையத்தில் சேமித்துக்கொள்ள முடியும். இந்த வசதியின் மூலம் நீங்கள் புதிய சாதனத்திற்கு மாறும்பொழுது அனைத்து விபரங்களையும் புதிய சாதனத்திற்கு எளிதாக மாற்றிக்கொள்ள முடியும்.

Anti Theft:
இந்த Advance care மென்பொருள் நிறவப்பட்ட உங்களுடைய ஆண்ட்ராய்ட் சாதனம் தொலைந்துவிட்டால், மற்றொரு Advance care மென்பொருள் நிறவப்பட்ட சாதனத்தின் மூலம் தொலைந்து போன சாதனத்தை கட்டுப்படுத்த முடியும். குறிப்பாக தொலைந்து போன சாதனத்தில் GPS இயக்கப்படாது இருந்தாலும் சாதனம் இருக்கும் இடத்தை துல்லியமாக Google Map மூலம் கண்டுபிடிக்க முடியும்.

Privacy Locker:

இந்த வசதியின் மூலம் விடியோ கோப்புகள், ஆவணங்கள் மற்றும் ஆல்பம் போன்றவற்றினை பாஸ்வேர்ட் கொடுத்து பாதுக்க முடியும்.

இத்தனை வசதிகளும் கொண்ட இந்த மென்பொருள் முற்றிலும் இலவசம்.

மென்பொருளைத் தரவிறக்கம் செய்ய சுட்டி:

https://play.google.com/store/apps/details?id=com.iobit.mobilecare&hl=en




நன்றி நண்பர்களே..!

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home