4 September 2013

இஸ்லாத்தையும் "பார்ப்பனீய"மாக்க முயற்சிக்கும் முட்டாள்களை சமூகத்திலிருந்து நிராகரிக்கப்பட வேண்டும்.



பேராசிரியர் அப்துல்லா (பெரியார்தாசன்) அவர்களின் இறுதித் தொழுகையில் முஸ்லிம் அல்லாத தலைவர்களை அனுமதித்தது தவறு என்று, புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.

காயிதே மில்லத் அவர்களின் இறுதித் தொழுகையில் அன்றைய முதல்வர் கலைஞர், எம்.ஜி.ஆர், மதியழகன், .அன்பழகன், .ராசாராம், என ஏராளமான தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். அந்தத் தொழுகையை வழிநடத்தியவர் அன்றைய முஸ்லிம் லீக் தலைவர் அப்துர் ரஹ்மான் பாஃபக்கி தங்கள் அவர்கள்.

பொதுவாகவே முஸ்லிம்களின் வழிபாடு சார்ந்த அம்சங்களில் முஸ்லிம் அல்லாதவர்களை அனுமதிப்பது குறித்து இத்தகைய சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. நோன்பு துறக்கும் இஃப்தார் நிகழ்வில் நோன்பே வைக்காதவர்கள் பங்கேற்கலாமா? திருமறை குர்ஆனை முஸ்லிம் அல்லாதவர்கள் தொடலாமா? பள்ளிவாசலுக்குள் அவர்களை அனுமதிக்கலாமா? என்றெல்லாம் கேள்விகளின் பட்டியல் நீண்டு செல்கின்றது.

ஒரு பன்மைச் சமூக அமைப்பில் முஸ்லிம்கள் வாழும்போது அரசியல் அரங்கைத் தாண்டி பண்பாட்டுத் தளத்திலும், ஏன் வழிபாடுகளிலும் கூட ஒத்த உணர்வுடன் முஸ்லிம் அல்லாதவர்கள் பங்கேற்பதைத் தடுக்கவோ, தவிர்க்கவோ இயலாது. அழைப்பியல் அடிப்படையில் பார்த்தால் கூட, அவ்வாறு அவர்கள் பங்கேற்பது வரவேற்கப் பட வேண்டிய ஒன்றே.

இஸ்லாம் முஸ்லிம்களுக்கு மட்டும் உரித்தானதல்ல, ஒட்டுமொத்த மனிதகுலத்துக்குமானது எனும்போது, இதுபோன்ற விசயங்களை சர்ச்சையாக்குவது சரியல்ல.

கோவிலுக்குள் நுழையாதே என்று இந்துத்துவம் தடுக்கிறபோது, பள்ளிவாசலுக்குள் நீ நுழையலாம் என அனுமதிப்பதில் தானே இஸ்லாத்தின் தனிச்சிறப்பு உள்ளது.


ஆளூர்.ஷாநவாஸ்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home