4 September 2013

பாலியல் உறவுக்கு மறுத்த கல்லூரி மாணவி மீது ஆசிட் வீச்சு !!



ஆசைக்கு இணைங்க மறுத்த கல்லூரி மாணவி மீது ஆசி வீசிய அண்ணன், தம்பிகள் கைது செய்யப்பட்டனர். ஆந்திர மாநிலத்தில்தான் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டம் முதுகுப்பா நகரைச் சேர்ந்த ராம கிருஷ்ணா என்பவரின் மகள் வாணி. இவர் தனது தாய்மாமா வீட்டில் தங்கி இருந்து கல்லூரியில் பி.காம் 3ஆம் ஆண்டு படித்து வருகிறார்.
தாய் மாமா வீட்டின் பக்கத்து வீட்டில் வசிக்கும் வாலிபர் ராகவேந்திரா அடிக்கடி மாணவி வாணியை சந்தித்து பேசியுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு தனது அக்காள் மகன் பிறந்த நாள் விழாவுக்கு வரும்படி வாணியை அழைத்துள்ளார் ராகவேந்திரா.
ராகவேந்திராவுடன் வாணி, அவனது அக்காள் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது, வீட்டில் உள்ள குளியல் அறையில் குளிக்க சென்றுள்ளார் வாணி. இதை, ராகவேந்திரா ரகசியமாக தனது கேமிராவில் படம் எடுத்துள்ளார்.
பின்னர், தனது ஆசைக்கு இணங்கும்படி வாணியை மிரட்டியுள்ளார் ராகவேந்திரா. இது குறித்து வாணி, போலீசில் புகார் செய்ததைத் தொடர்ந்து ராகவேந்திரனை பிடித்து விசாரித்தனர்.
ஆனால், செல்போனில் எந்த ஆபாச படமும் இல்லை என்று கூறி போலீஸ் பிடியில் இருந்து தப்பியுள்ளார் ராகவேந்திரா.
இந்நிலையில், போலீசில் மாட்டிவிட்ட கோபத்தில் வாணியை பழி தீர்க்க நினைத்துள்ளார் ராகவேந்திரா. சம்பவத்தன்று கல்லூரி முடிந்து வாணி வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, இரு சக்கர வாகனத்தில் தனது தம்பி ராமகிருஷ்ணாவுடன் வந்த ராகவேந்திரா, வாணி மீது ஆசிட் வீசி விட்டு தப்பினார்.
இதில், மார்பகம், வயிறு, வலது கை, கால்களில் ஆசிட் பட்டு வாணியின் உடல் வெந்து போனது. அவருக்கு அனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்த புகாரின் போரில் ராகவேந்திரா, அவரது தம்பி ராமகிருஷ்ணாவை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home