16 October 2013

இந்த புனித தியாகத் திருநாளை நினைவு கூறுவோம் !!


அஸ்ஸலாமு அழைக்கும்
அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் இதயம் நிறைந்த தியாக திருநாள் (ஹஜ்ஜி பெருநாள்) நல்வாழ்த்துக்கள்- அஷ்ரப்

*******************************************




இந்த புனித தியாகத் திருநாளை நினைவு கூறுவோம் !!

ஒருநாள் நள்ளிரவு நேரத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த இப்ராஹீமுக்கு கனவொன்று வந்தது. தன்னுடைய மகனை, தானே இறைவனுக்கு பலி கொடுப்பது போன்ற கனவைக் கண்ட நபி, கவலையில் ஆழ்ந்தார். தன்னை முழுவதுமாய் இறைவனுக்கு அர்பணித்த இப்ராஹீம் நபி தாம் கண்ட கனவை அன்பு மகனிடம் கூறினார்.

தியாகத் திருவிளக்குக்குக்குப் பிறந்தது, தியாக தீபமே என நிரூபிக்கும்வண்ணம், இறைக் கட்டளையை உடனே நிறைவேற்றும்படி தன்னுடைய தந்தையிடம் பணித்தார், நபி இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம். அவ்வாறு பணித்ததோடு மட்டுமின்றி, 'பெற்ற பாசத்தினால் எங்கே தந்தையின் மனம் மாறிவிடுமோ?' என அஞ்சிய பாச மகன், தந்தையின் கண்களைத் துணிகளால் கட்டி, கையிலே கட்டாரியையும் கொடுத்தார். தந்தையும் துணிந்தார்...

ஆனால், அந்த நரபலியைத் தடுத்து, அவர்களின் தியாகத்தைப் புகழ்ந்து, இந்த நிகழ்வின் நினைவாக ஓர் ஆட்டினை பலியிட்டு, அனைவரையும் புசிக்குமாறு கூறினான் இறைவன்! குழந்தைச் செல்வங்கள் மலிந்திருப்போரும், தனது ஒரு குழந்தையை இழக்க சம்மதிக்காத இவ்வுலகில், ஒரே மகனையும் பலியிடத் துணிவதென்றால், நபி இப்ராஹீமின் தியாகத்தை போற்றாமல் இருப்பது முறையா?.

இப்புனிதம் மிகுந்த தியாகத் பெருநாளில், இப்ராஹீம் நபியின் தியாகத்தை நினைவுகூர்ந்து, உற்ற நண்பர்களுடன் உறவாடி, நல்வழிகாட்டிய நபிமார்களின் வழியில் இறையருளுடனும், தியாகத்தின் உன்னதத்தை உணர்ந்தும் நல்வாழ்க்கை வாழ்வோம் ! அனைவருக்கு தியாகத்திருநாள் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்****************
********************************************************************************************





இந்த ஈதுல் அழ்ஹா பெருநாளில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய எட்டு விஷயங்கள் உள்ளன.

1
குளித்து சுத்தமாகிக் கொள்ளல்.
2
அழகிய புத்தாடை அல்லது சுத்தமான ஆடை அணிதல்.
3
தக்பீர் சொல்லல்.
4
பெருநாள் இரவில் சுன்னத்தான தொழுகைகளை தொழல்,
குர்ஆன் ஓதுதல், துஆ கேட்டல், திக்ர் செய்தல்,ஸலவாத்
ஓதல்.
5
பெருநாள் தொழுகையிலும் குத்பாவிலும் கலந்துகொள்ளல்.
6
ஆண்கள் மணம் பூசிக் கொள்ளல், வெளியில் செல்லாத
பெண்களும் மணம் பூசிக் கொள்ளலாம்.
7
இயன்றவரை அதிகமாக தானதர்மம் செய்தல்.

ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையைத் தொழுவதற்கு முன் உண்ண மாட்டார்கள் என புரைதா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம்: திர்மிதீ

திடலில் பெருநாள் தொழுகை

பெரும்பாலும் நபி(ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகைகளை திறந்த பொது மைதானத்தில்தொழுதுள்ளார்கள். மழை காலத்தில் பெருநாள் தொழுகையை பள்ளியில் நடத்தினார்கள். அறிவிப்பாளர்:அபூஹுரைரா(ரலி) அபூதாவூத், இப்னுமாஜ்ஜா

நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளியில் தொழாமல்)திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர். ..........என உம்மு அதிய்யா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

பெருநாளில் நாங்கள் (தொழும் திடலுக்கு) புறப்பட வேண்டுமெனவும் கூடாரத்திலுள்ள கன்னிப்பெண்களையும் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டும் எனவும்கட்டளையிடப்பட்டிருந்தோம். பெண்கள் ஆண்களுக்குப் பின்னால் இருப்பார்கள். ஆண்களின் தக்பீருடன்அவர்களும் தக்பீர் கூறுவார்கள். ஆண்களின் துஆவுடன் அவர்களும் துஆச் செய்வார்கள். அந்த நாளின்பரக்கத்தையும் புனிதத்தையும் அவர்கள் எதிர்பார்ப்பார்கள். அறிவிப்பவர்: உம்மு அத்திய்யா (ரலி)நூல்கள்: புகாரீ, முஸ்லிம்

இந்த நன்னாளில் வறியவர்களுக்கு உதவி செய்வது துன்பங்களில் உழல்பவர்களுக்கு கருணை காட்டுவது. நோயுற்றவர்களை சென்று பார்த்து அவர்களுக்கு ஆறுதல் கூறவது, தங்களைப் பிரிந்துவெளியூர்களுக்குச் சென்றுள்ள நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் தமது மகிழ்ச்சிகளை பரிமாறிகொள்வது இப்படி எல்லோரையும் எண்ணிப் பார்க்கின்ற ஒருநாளாக ஈதுப் பெருநாள் விளங்குவதுமிகவும் மகிழ்ச்சிகரமானது

பெருநாள் அன்று ஈத் முபாரக் சொல்லலாமா ?...

இந்த நன்னாட்களில் தமது மகிழ்ச்சியை தெரிவிப்பதற்கு நமக்கு விருப்பமான சொற்களைப் பயன்படுத்தி குர்ஆன் மற்றும் ஹதீஸுக்கு முரணில்லாத வகையில் வாழ்த்து தெரிவிக்கும்வகையில் " ஈத் முபாரக் " என்ற சொல்லை பயன்படுத்துவதில் எந்த தவறுமில்லை ஆனால் பெருநாள் அன்று இப்படித்தான் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்ளவேண்டும் என்று மார்க்க அடிப்படையில் நினைத்து வாழ்த்து சொல்வதுதான் தவறு

உலக முஸ்லிம்கள் யாவரும் கொண்டாடும் இந்த நன்னாளை நம்மிடையே சாந்தியும், சமாதானமும் வேரூன்றி, தளைத்து, வளர அல்லாஹ்விடம் பிரார்த்தித்தவர்களாக மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்... இன்ஷா அல்லாஹ்

அல்லாஹு அக்பர்...
அல்லாஹு அக்பர்...
அல்லாஹு அக்பர்...
வலில்லாஹில் ஹம்து.

எல்லாம் வல்ல ரஹ்மான் அல்லாஹ் நம் அனைவரின் நல்அமல்களை அவனுக்கு உகப்பானதாக ஆக்கி வைப்பானாக! நபி (ஸல்) அவர்கள் காட்டிய வழியில் செயல்பட தவ்பீக் தந்தருள்வானாக! ஆமீன்.. ஆமீன்... யாரப்பில் ஆலமீன்

அன்புடன்
தக்கலை கவுஸ் முஹம்மத்
பஹ்ரைன்

  •  



0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home