துப்பாக்கியாக மாறும் ஐ போன் உறைகள்!!
வைரஸ்களிலிருந்து பாதுகாக்க ஐ போன்களில் பல பாதுகாப்பு வழிகள் உள்ளன. இந்நிலையில் ஐ போன்கள் பிரச்சினைகளின் போது துப்பாக்கியாக மாறினால் எப்படி இருக்கும்? இந்த சிந்தனையை ஜெலோ ஜக்கெட் (Yellow Jacket) எனும் நிறுவனம் நிஜமாக்கியுள்ளது. ஜெலோ ஜக்கட் எனப் பெயரிடப்பட்டுள்ள ஐ போன் உறையில் (Iphone Case) 650 ஆயிரம் வோல்ட் மின்சாரத்தினை பிரயோகிக்கும் பிரம்மிப்பான துப்பாக்கியினை உருவாக்கியுள்ளது.
இத்திட்டத்தினை உருவாக்க காரணமாகவிருந்த முன்னாள் பொலிஸ் அதிகாரியான செத் ப்ரூம் (23 வயது) கூறுகையில், ஆயுதம் தாங்கிய கொள்ளையரால் வீட்டை உடைத்து கைத்தொலைபேசிகள், மடிக்கணினிகள் மற்றும் சில மின்சாதனங்கள் கொள்ளையிடப்பட்டன. இச்சம்பவத்தின் விளைவே இந்த துப்பாக்கி ஸ்மாட்போன் உறைகள் எனத் தெரிவித்துள்ளார். ஐ போன் 4 மற்றும் 4எஸ் மாதிரிகளுக்கே இந்த உறைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. தற்போது 5 வர்ணங்களில் உள்ள இவ்வுறைகள் 139.99 அமெரிக்க டொலர்களுக்கு (சுமார் 18500 ரூபா) விற்பனை செய்யப்படுகின்றன.
தனியான மின்கலத்துடன் காணப்படும் துப்பாக்கி உறையின் மூலம் 20 மணித்தியாலங்கள் ஐ போனையும் சார்ஜ் செய்யமுடியுமாம். இது பாதுகாப்பற்றது என விமர்சனம் வந்தபோதிலும் வயது வந்த ஆக்ரோஷமான ஆண்களுக்கு பொருத்தமாக வடிவமைக்கப்பட்டுள்ள இவ்வுறைகள் மூலம் போனையும் உங்களது வாழ்வையும் பாதுகாத்துக்கொள்ளுங்கள் என இணை நிறுவுநரான சீன் சைமோன் கூறியுள்ளார். ஏற்கெனவே சுய பாதுகாப்புக்காக மிளகு ஸ்ப்ரே உடைய ஐ போன் உறைகளை ஸ்மார்ட் கார்ட் நிறுவனமும் மடிக்கக்கூடிய கத்தியைக்கொண்ட உறையை அட்லன்டா என்ற நிறுவனமும் அறிமுகப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- See more at: http://www.metronews.lk/article.php?category=technology&news=2080#sthash.8p8O1btK.dpuf
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home