குழந்தைகள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகாமல் இருக்க..!!பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்
சிறார்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்களைப்
பற்றிய செய்திகள் நாம் தினமும் பார்க்கின்ற ஒன்றாகிவிட்டது. அதைப் படிக்கும்போது ‘யாருக்கோ நடந்த சம்பவம் தானே’ என்று பெற்றோர்களாகிய நாம் கவலைப்படுவதில்லை.
யாருக்கும் எப்போது
வேண்டுமானாலும் நடக்க கூடிய விதத்தில் இப்போது இச்சம்பவங்கள் அதிகமாக நம் சமூகத்தில்
நடந்து கொண்டிருகின்றது. அவற்றைத் தடுப்பதற்காக நாமே சில முன்னெச்சரிகை
நடவடிக்கைகளை எடுத்துக்கொள்வது அவசியமே.நம் சமூகத்தில் சிறுமிகள்தான் பாலியல் கொடுமைக்கு மிகுதியாக ஆளாகின்றனர். அதேபோல், சிறுவர்களுக்கும் பாதிப்புகள் ஏற்படாமால் இல்லை.
பாலியல் பற்றிய அடிப்படைக் கல்வியை தங்களது குழந்தைகளுக்கு அளிக்க வேண்டியது ஒவ்வொரு தாய்மார்களின் கடமை. ஏனென்றால், வெளியாட்கள் குழந்தைகளுடைய அறியாமையை பயன்படுத்தி கொள்கிறார்கள். உதாரணமாக, வீட்டிலுள்ள டிரைவர், வீட்டு வேலைக்காரர்கள், வெளியிலுள்ள தெரிந்தவர்கள், வீட்டுக்கு வருகின்ற சொந்தக்காரர்கள் போன்றவர்களிடமிருந்து தான் குழந்தைகளுக்கு செக்ஸ் தொல்லைகள் ஏற்படுகின்றது.
அதனால் குழந்தைகளைக் கவனமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தவறான காரியம் செய்பவர்களிடம் இருந்து எவ்வாறு சிக்காமல் இருப்பது என்று குழந்தைகளுக்குப் புரிய வைக்க வேண்டியது பெற்றோர்கள்தான்.
குழந்தைகள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகாமல் இருக்க, குழந்தைகளுடைய சந்தேகங்களை பெற்றோர்களே அவர்களுக்கு முன்கூட்டியே புரிய வைப்பதே நல்லது.
அதைப் பற்றிய தேவையான விவரங்களை குழந்தைகளுக்கு தெரியபடுத்திக் கொள்வதில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும்.
பெற்றோர்கள் குழந்தைகளுடைய சந்தேகங்களை அலட்சியப்படுத்தி ஒதுங்குவது நல்லதல்ல. அவர்களுடைய வயதுக்கேற்ற சந்தேகங்களுக்கு பதில் அளிக்கலாம்.
அம்மாவை அப்பா தொடுவது சகஜம். ஆனால், வேரு யாருக்கும் அதற்கான உரிமை கொடுக்கப்படவில்லை என்று சொல்லும்போது, குழந்தைகளுடைய மனதில் பாலியல் ரீதியான முதல் கேள்வி பதிகின்றது.
யாரையும் உடம்பில் தொடக்கூடாத இடங்களில் ஸ்பரிசிப்பதற்கு அனுமதிக்கக் கூடாது என்று குழந்தைகளுக்கு முன்கூட்டியே புரிய வைக்க வேண்டும்.
வேகமாக வசீகரிக்க முடிகின்றவர்கள்தான் குழந்தைகள். போலியான அன்பை யார் காட்டினாலும், அதை ஒதிக்கிகொள்வதற்கு குழந்தைகளை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.
தங்களது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக, நமக்குப் பிடித்த உணவு, மொபைல் போன் போன்ற பொருட்களை பழக்கமில்லாதவர்கள் பரிசாக தருவார்கள் என்று குழந்தைகள் புரிந்து வைத்திருக்க வேண்டும்.
குழந்தையின் கையில் வீட்டுக்கு தெரியாத எந்த ஒரு பொருளைப் பார்த்தாலும், அது எங்கிருந்து கிடைத்தது என்று பெற்றோர்கள் கேட்க வேண்டும்.
தங்களது குழந்தையின் நண்பர்கள் யாரெல்லாம் என்று பெற்றோர்கள் அறிந்திருக்க வேண்டும்.
பள்ளிக்கூடத்தில் போகமாட்டேன் என்று குழந்தை சொல்லும் போது, அதன் காரணம் என்னவென்று பெற்றோர்கள் கண்டிப்பாக கேட்டு தெரிந்திருக்க வேண்டும். படிப்பதற்கு விருப்பமில்லாமல், அல்லது பள்ளியும் ஆசிரியரும் பிடிக்காமல் இருக்கலாம் என்று நாமே யோசித்து முடிவெடுப்பது பல நேரங்களில் சரியாக இருக்க வாய்ப்பில்லை.
ஒருவர் தன்னிடம் மோசமாக நடந்துகொண்டால், அதைக் நேராக நம்மிடம் சொல்ல குழந்தைகள் தயங்குவார்கள். இதனால், குழந்தைகளுக்கு பல மாற்றங்கள் மனதளவிலும் உடலளவிலும் உண்டாகின்றன. அதை அவர்கள் தங்களது வழக்கத்துக்கு மாறான செய்கைகளால்தான் வெளிப்படுத்துகிறார்கள்.
அந்த நேரங்களில் குழந்தைகள் பேசுவதை குறைத்துக் கொள்வார்கள்; சுறுசுறுப்பில்லாமல் இருப்பார்கள்; காரணமில்லாமல் அதிர்ச்சி அடைவது, சாப்பிடுவதில் வெறுப்பு… இப்படி குழந்தைகளுடைய நடவடிக்கைகள் வித்தியாசமாக இருந்தால், அதற்கான காரணம் என்னவென்று தெளிவாக அறிந்திருக்க வேண்டும்.
வீட்டில் பெற்றோர்களுடனோ, பெரியவர்களுடனோ தங்களுடைய எல்லா விஷயங்களும் பகிர்ந்து கொள்வதற்கான சுதந்திரம் குழந்தைகளுக்கு கொடுத்திருக்க வேண்டும்.
பாலியல் கொடுமைக்கு ஆளான விவரத்தை வெளியில் சொல்லக்கூடாது என்று எவரேனும் பயப்படுத்தி வைத்திருந்தாலும், அதை பெற்றோர்களிடம் தைரியமாக சொல்வதற்கான சுதந்திரம் குழந்தைக்கு இருக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு நல்ல முறையில் ஆடை அணிவிப்பதில் பெற்றோர்கள் கவனமாக இருக்கவேண்டும். குழந்தைகளுக்கு ஸ்லீவ்லெஸ் அழகாக இருக்கலாம், ஆனால், குழந்தைகளுடைய மார்பு முழுவதும் தெரிகின்ற விதத்தில் ஆடைகள் அணிவிப்பதை தவிர்க்க வேண்டும். உடல் மறைத்துகொள்கின்ற மாதிரியான ஆடைகளை குழந்தைகளுக்கு அணிவிக்கவும்.
சொந்தக்காரராக இருந்தாலும், பக்கத்து வீட்டுக்காரராக இருந்தாலும் குழந்தைகளை தூக்கிக்கொண்டு போவதற்கு நீங்கள் அனுமதிக்கக் கூடாது. சொந்தக்காரராக இருந்தாலும் குழந்தைகளை அவர்களுடன் படுக்க அனுமதிக்க கூடாது.
குழந்தைகளோடு திறந்த மனதோடு பழகுவதே, அவர்களுக்கு ஏற்ப்படுகின்ற பிரச்சனைக்கு மிகவும் பயனான சிகிச்சை என்று உளவியல் மருத்துவர்கள் கருதுகிறார்கள்.
செக்ஸ் முதல் எவ்விதமான விஷயங்களைப் பற்றி குழந்தைகள் கேட்டாலும், அதற்கு மனம் திறந்து இலகுவான விளக்கங்கள் அளித்தாலே பிரச்சனைகள் தீர்க்க முடியும். சிறார்களுக்கு அவர்களது வீடுதான் கவுன்சிலிங் சென்டர். அப்படியில்லாமல், சந்தேகம் கேட்கும் குழந்தைகளைத் திட்டுவது பாதக நிலைக்குத் தள்ளிவிடும்.
குடும்ப பொறுப்புகளை சுமந்து ஓடி உழைக்கின்ற பெற்றோர்களுக்கிடையே சொந்த வீட்டிலேயே குழந்தைகள் அனாதையாகின்றனர். இது, அவர்களது மனதை மிகவும் பாதிக்கிறது. குழந்தைகளுக்குள்ளும் பிரச்சனைகள் புதைந்து கிடக்கின்றது என்ற யதார்த்தத்தை புரிந்து குழந்தைகளோடு நண்பர்களைப்போல் பழகுவதற்கும், அதோடு அவர்களுடைய நம்பிக்கைக்கு ஆளாகவும் பெற்றோர்களை முடியாமல் போகின்றது. இதன் விளைவாக குழந்தைகள் தவறான வழிகள் தேடி போகின்றார்கள்.
குழந்தைகள் மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்வதென்றும், எப்படி பேசுவதென்றும் பெற்றோர்கள் அவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். ஒருவர் தேவையில்லாமல் தவறான எண்ணத்துடன் உடம்பில் தொட்டால், அதை குழந்தையால் புரிந்து கொள்ள முடிய வேண்டும். அவர்களிடம் பார்வையாலும், தேவைப்பட்டால் எச்சரிகையாவும் பேச குழந்தைக்கு துணிச்சல் தர வேண்டும்.
குழந்தைகளை கொஞ்சுவதற்கும், அவர்களுடன் பேசுவதற்கும் பெற்றோர்கள் நேரம் காணவேண்டும். குழந்தைகளை கட்டித் தழுவ வேண்டும், அவர்களுக்கு முத்தம் கொடுக்க வேண்டும்.
பெற்றோர்களிலிடமிருந்து பராமரிப்பு கிடைக்கின்ற குழந்தைகளுக்கு இப்படிப்பட்ட பாலியல் கொடுமைகள் நேர வாய்ப்புகள் இல்லை. தங்களை தேவையில்லாமல் தொட யாரையும் அவர்கள் அனுமதிப்பதில்லை!
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home