20 October 2013

உலகத்தில் கோடி கொடுத்தும் வாங்கமுடியாதது..........



படிகள்.......படிப்பினைகள்!!!

உலகத்தில் கோடி கொடுத்தும் வாங்கமுடியாதது..........

ஒருவன் தன் சொத்துக்களை கணக்குப் பார்த்துவிட்டு ஏக்கத்தோடு எட்டுக் கோடி என பெருமூச்சு விட்டான்.

இந்த எட்டுக் கோடியை பத்துக் கோடியாக்குவது எப்படி என்று தீவிரமாக யோசித்தான்.

திடீரென, மூச்சு முட்டத் துவங்கியது. கூடவே,மார்பு வலிக்கத் துவங்கியது.

நெஞ்சைப் பிடித்தவாறு நிமிர்ந்துப் பார்த்தால், முறுவலுடன் எமதர்மன் அவ்வளவுதான்.....புறப்படுஎன்றான்.

இவன் திகிலுடன் எங்கே?” என்றான்.

உலகத்தில் நீ வாழ்ந்த தவணை முடிந்து விட்டது.என்ற எமன் தொடர்ந்துஉன் உயிர் பிரியும் நேரம் வந்து விட்டதுஎன்றான்.

இவன் பயத்தால் வெளிறிப் போனான்.

அவனது அன்பு குடும்பத்தவர்கள் பாசத்துடன் நினைவுக்கு வர அவன் நா வரண்டு திக்கித் திணறினான்.
இதோ.....என்னுடைய அனைத்து சொத்தையும் உனக்குத் தருகிறேன்.....என்னுடைய உயிரை மட்டும் எடுக்காதே?” என்று எமனின் கால்களில் விழுந்தான்.

என்ன?.....எனக்கு இலஞ்சம் தருகிறாயா?” என்று நகைத்த எமன் உனக்கு நான் இருபது வினாடிகள் தருகிறேன்.அதற்குள் என்னவாவது செய்துக் கொள்!என்று கூறி அவனுக்கு நேரம் குறித்தான்.

இருபது வினாடிகளா?’ என்ற மனிதன் விக்கித்துப் போனான்.

இந்த இருபது வினாடிகளில் என்ன செய்ய முடியும்?...இருக்கின்ற எட்டு கோடியை தொட்டுப் பார்க்கக் கூடஅந்த இருபது வினாடிகள் போதாதே?’’

அந்த மனிதன் சுற்றும் முற்றும் பார்த்தான்.
அருகில், அவன் கணக்குப் பார்த்த பேனாவும் பேப்பரும் கண்டான்.

உடனே அதில் அவன் இப்படி அவசர அவசரமாக எழுதினான்.

இதைபடிப்பவர்கள் உணர வேண்டியது என்னவென்றால் எட்டுக் கோடி இருந்தும் அதனைக் கொடுத்து உயிர் வாழ ஒரு நாளிகையாவது என்னால் வாங்க முடியவில்லை.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home