22 October 2013

தங்கம் பயிர் செய்யத் தெரிந்தவன்!



முன்பொரு காலத்தில் பகாரா நகரில் ஒரு திருடனைத் தேடிக் கொண்டிருந்தனர். கடைசியாக ஒரு அப்பாவி மனிதனைப் பிடித்து அரசனிடம் அழைத்து வந்தனர். உடனே அரசன் அவனைத் தூக்கிலிட உத்தரவிட்டார்.

"
ஒன்றுமே செய்ய முடியவில்லையே என்பதை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது" என்றான் அந்த மனிதன்.

"
என்ன செய்ய முடியவில்லை?"என்றனர் அருகிலிருந்தோர்.

"
எனக்கோர் விஷயம் தெரியும். அது இவ்வுலகில் வேறு எவருக்கும் தெரியாது" என்றான் அவன்.

"
அது என்ன?" என்றார்கள்.

"
எனக்கு தங்கம் விளைவிக்கத் தெரியும். அது இந்த உல்கில் வேறு எவருக்கும் தெரியாது." என்றான்

இதைக் கேட்டதும் தூக்குத் தண்டனை நிறுத்தப்பட்டது. காவலர்கள் அரசனிடம் சென்று இவிஷ்யத்தைக் கூறினார்கள். உட்னே அரச்ன் அம்மனிதனை அழைத்தான்.

உனக்குத் தங்கம் விளைவிக்கத் தெரிந்தால் எனக்குக் கொஞ்சம் பயிராக்கிக் கொடு. அப்புறம் உன்னை விடுதலை செய்து விடுகிறேன்" என்றான் அரசன்.

குற்றவாளியான அம்மனிதன் இதற்குச் சம்மதித்து நிலத்தை உழுது விதைப்பதற்குத் தங்கமும் கொண்டு வரச் செய்தான்.

பின்பு,"அரசே! விதைப்பதற்கு எல்லாம் தயாராகி விட்டது. இப்பொழுது கூறுங்கள் யார் தங்கத்தை விதைக்கப் போவது? உண்மையும், நேர்மையும் உள்ள வாழ்க்கையில் ஒருமுறை கூட திருடாத ஒருவர்தான் தங்கத்தை விதைக்க வேண்டும். நான் என் வாழ்க்கையில் திருடியதே கிடையாது. ஆனால் என்னைத் திருடன் என்று கூறிவிட்டனர். எனவே நான் விதைக்க முடியாது. ஆகவே யார் விதைக்கப் போகிறார்கள்?" என்றான் அவன்.

"
அப்படியானால் நம் முதலமைச்சர் விதைக்கட்டும்" என்றான் அரசன்.

"
இல்லையில்லை... நான் விதைக்க முடியாத நிலையில் இருக்கிறேன்." என்றார் முதலமைச்சர்.

அப்படியானால் நம்து பெருமதிப்பிற்குரிய நீதிபதி அவர்கள் விதைக்கட்டும் என்றான் அரசன்.

"
நானா?... நான் பொருத்தமானவன் என்று சொல்வதற்கில்லை..." என்றார் அந்த நீதிபதி.

அரண்மனியிலிருந்த அத்தனை பேரையும் ஒருவர் பின் ஒருவராக அரசன் அழைத்ததும் யாரும் அதற்கு முன்வரவில்லை.

அப்பொழுது ஒரு குரல் வந்தது. "அரசர் பெருமானே! தாங்கள்தான் தங்கத்தை விதைக்க வேண்டும்."

"
என்னால் இக்காரியம் கெட்டுவிடுமோ என்று அச்சமாக இருக்கிறது." என்றான் அரசன்.

"
அரசே! உங்கள் அரண்மனையில் ஒருவர் கூட நேர்மையானவர் இல்லையா? அப்படியிருக்க என் வாழ்வில் திருட்டைப் பற்றியே அறியாத எனக்குத் தூக்குத் தண்டனை விதிப்பது எவ்வகையில் நியாயம்?" என்றான் குற்றவாளி.

அரசனுக்கு அப்போதுதான் தனது தவறு தெரிந்தது. அவனை விசாரிக்காமலேயே தூக்குத் தண்டனை கொடுத்த தனக்கு சரியான பாடம் புகட்டிய அவனது புத்திக்கூர்மைக்குப் பல பரிசுகளை அளித்து அவனை விடுதலை செய்தான்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home