22 October 2013

ஊனத்தை ஊனப்படுத்தியவர் எடிசன்.



டங்ஸ்டன் இழை கொண்ட மின் விளக்குகள் முதல் தாமஸ் ஆல்வா எடிசனின் கண்டுபிடிப்புகள் ஏராளம் ஏராளம்.

அவற்றின் முன்னேறிய தொழில்நுட்பங்கள்தான் நாம் இன்று பயன்படுத்தும் பெரும்பாலானவைகள் என்றால் அது மிகையில்லை.

அப்படிப்பட்ட அந்த விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசனுக்கு ஒரு குறை இருந்தது.

அவருக்கு லேசாக காது கேட்காது. ஆனால் அந்த ஊனத்தையே ஊனமாக்கியவர் தாமஸ் ஆல்வா எடிசன்.

ஒரு முறை அவரிடம், உங்கள் வெற்றிக்குக் காரணம் என்ன? என்று கேட்டதற்கு அவர் அளித்த பதில் வியப்பில் ஆழ்த்தியது.

அதாவது, எனக்கு காது சரியாக கேட்காது. எனவே அடுத்தவர் திட்டினாலும், புகழ்ந்தாலும் எனக்கு கேட்காது. அதனால் நான் எப்போதும் என்னுடைய வேலையை பார்க்க முடிந்தது. அதனால் தான் நான் இவ்வளவு கண்டுபிடிப்புகளை கண்டறிய முடிந்தது என்று கூறினார்.

ஊனத்தையே ஊனமாக்கும் வித்தை ஒரு சிலருக்கு தெரிந்திருக்கிறது. அதனை எல்லோரும் கற்றறிவோம்.

அமெரிக்க ஒளி விளக்கு அணைந்தது !

ஆக்க மேதை எடிசன் தன் 84 ஆம் வயதில், 1931 அக்டோபர் 18 ஆம் தேதி நியூ ஜெர்சி வெஸ்ட் ஆரஞ்ச் நகரில் காலமானார். அமெரிக்க ஜனாதிபதி ஹெர்பர்ட் ஹூவர் எடிசன் உடல் அடக்கத்தின் போது அமெரிக்கா வெங்கும் தேவையான விளக்குகளைத் தவிர, மற்ற மின்விளக்குகளை, ஒரு நிமிடம் அணைக்கும்படி ஆணையிட்டிருந்தார். அக்டோபர் 21 ஆம் தேதி மாலை 9:59 [EST] மணிக்கு அவரது புகழுடல் அடக்க மானது.

நியூ யார்க்கில் மாலை 9:59 [EST] மணிக்கு விடுதலை விக்கிரகத்தின் ‘ [Statue of Liberty] கையில் இருந்த தீப்பந்தம் ஒளி இழந்தது! பிராட்வே விளக்குகள் ஒளி மங்கின! வீதியில் பயணப் போக்கு [Traffic Signals] விளக்குகளைத் தவிர மற்ற எல்லா விளக்குகளும் கண்ணை மூடின! சிகாகோவில் சரியாக 8:59 மணிக்கு வீதியில் மின்சார வண்டிகள் [Street Cars] ஒரு நிமிடம் நின்றன! மின்விளக்குகள் அணைந்தன! டென்வரில் 7:59 P.M மலை நேரத்தில் விளக்குகள் ஒரு நிமிடம் கண்ணை மூடி அஞ்சலி செய்தன! கிழக்கே எடிசன் உடல் அடக்கமான சமயத்தில், மேற்கே காலிஃபோர்னியாவில் பசிஃபிக் நேரம் 6:59 P.M. மணிக்கு, சூரியனும் செவ்வானில் தன் ஒளியைக் குறைத்து இருட்கடலில் மூழ்கியது! விளக்குகளும் ஒரு நிமிடம் இமை மூடின! ஆனால் எடிசன் ஆத்மா வாகிய மின்விளக்கு இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் சுடர் விட்டு, அகில உலகுக்கும் ஒளி பாய்ச்சிக் கொண்டே இருக்கும்!

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home