29 November 2013

மத்திய கிழக்கு ஆசியாவில் அமைதி ஏற்பட இஸ்ரேலிடமுள்ள அணு குண்டுகளை அழிக்க வேண்டும் - இங்கிலாந்து எம்.பி



மத்திய கிழக்கு ஆசியாவில் நிரந்தர அமைதி ஏற்பட இஸ்ரேலிடமுள்ள அணுகுண்டுகள் அழிக்கப்பட வேண்டும் என்று இங்கிலாந்து எம்.பி. ஜார்ஜ் கல்லோவே கருத்து தெரிவித்தார்.ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து கடந்த 24-ம் தேதி ஈரானுக்கும், 6 நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தம் உலக நாடுகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.இதே நேரத்தில் ஈரானை தொடர்ந்து எதிர்த்து வரும் இஸ்ரேலிடம் பல அணுகுண்டுகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த 1980-ம் ஆண்டு சன்டே டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட ஒரு கட்டுரையில் இஸ்ரேல் 200அணுகுண்டுகளை தயாரித்து வைத்து இருப்பதாக தெரிவித்தது.இந்த தகவலை இஸ்ரேலின் திமோனா அணுசக்தி நிலையத்தில் வேலை பார்த்த ஒருவர் தெரிவித்ததாக கூறப்பட்டது. இப்போது மேலும் பல அணுகுண்டுகளை இஸ்ரேல் தயாரித்து வைத்து இருக்கலாம் என்று தெரிகிறது.இது பற்றி இங்கிலாந்து எம்.பி. ஜார்ஜ் கல்லோவே பிரஸ் டி.வி.க்கு புதன்கிழமை பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இஸ்ரேல் பல அணுகுண்டுகள் தயாரித்து வைத்திருப்பதாக கடந்த 30 ஆண்டுகளாக நாங்கள்கூறி வருகிறோம். இந்த அணுகுண்டுகள் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பாலஸ்தீன பகுதியில் உள்ள திமோனா அணு நிலையத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அணுகுண்டு வைத்திருப்பதை கூட இஸ்ரேல் இதுவரை தெரிவிக்கவில்லை.மத்திய கிழக்கு ஆசியாவில் நிரந்தர அமைதி ஏற்பட வேண்டுமெனில் இஸ்ரேலிடமுள்ள அணுகுண்டுகள் அழிக்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home