2 December 2013

18 வயதானதும் செய்ய வேண்டிய விஷயங்கள்!



18 வயதை தொடுவது ஒரு மைல் கல்லை தொடுவது போன்றதாகும். நீங்கள் அதிகாரப்பூர்வமாகவும் சட்டப்பூர்வமாகவும் வயது வந்த இளைஞர் என்பதை இது உறுதி செய்யும். 18 வயதிற்கு முன் நீங்கள் பல தடைகளை சந்தித்திருப்பீர்கள். ஆனால் 18 வயது நிரம்பும் போது உங்களது டீன்-ஏஜ் பருவம் முடியும் தருவாயில் இருப்பீர்கள். வெகு சீக்கிரம் முதிர்ச்சி பெற்ற மனிதராகவும் விளங்குவீர்கள். ஆகையால் 20-ம் வயது வேகமாக உங்களிடம் வரும் முன்னர் நீங்கள் செய்யப் பழக வேண்டிய விஷயங்கள் பல உண்டு.
18 வயதை அடைந்த பிறகு நீங்கள் பல காரியங்களை செய்யலாம். ஆனால் பல்வேறு செயல்களைச் செய்ய சுதந்திரம் பெறும் அதே நேரத்தில், 18 வயது நிரம்பிய நீங்கள் அவற்றிற்கான பொறுப்புகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். 18 வயது நிரம்பிய இந்திய குடிமகனாக நீங்கள் செய்யும் எந்த காரியத்திற்கும் எடுக்கும் நடவடிக்கையும் பொறுப்புள்ளதாக இருத்தல் வேண்டும். எங்கு சென்றாலும் முதிர்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று மற்றவர்கள் எதிர்பார்ப்பார்கள். ஆனால் இவை எல்லாம் நீங்கள் புதிதாக அடைந்த இளம் வயதின் மகிழ்ச்சிகளை பாழாக்கி விடாது.
18 வயது நிரம்பிய நீங்கள் சரியான நிலையில்என்னென்ன செய்ய வேண்டும்என்ற பட்டியலிட்டு செயல்பட வேண்டும். நீங்கள் செய்யும் காரியங்கள் பொறுப்பு மற்றும் மேம்பட்ட இன்பம் இரண்டும் கலந்ததாக இருத்தல் வேண்டும். அவற்றுள் சிலவற்றை நாம் கீழ்வரும் பகுதியில் காணலாம்:
வாக்களித்தல்
18 வயது நிரம்பிய நீங்கள் வாக்குரிமம் பெற்றவர்கள். நீங்கள் பொறுப்புள்ள மற்றும் நல்ல குடிமகனாவும் விளங்குவீர்கள். சட்டப்பூர்வமாக வயது வந்த குடிமகனா நீங்கள் இருக்கையில் உங்களது நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் உங்களுக்கும் பங்குண்டு. ஆதலால் ஓட்டுரிமையை பயன்படுத்துங்கள். ஒவ்வொரு நாடும் தம் நாட்டு இளைஞர்கள் தேசத்தின் வளர்ச்சியில் பங்கு பெற வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. நேர்மையான வேட்பாளரை தேர்ந்தெடுத்து வாக்களிப்பது நாட்டின் வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல் உங்களது வளர்ச்சிக்கும் உதவும். ஆகவே எப்போதும் வாக்களிப்பீர்
இரவு நேர கேளிக்கைகள்
இரவு நேர கேளிக்கைகள், டிஸ்கோதே அல்லது கிளப்பிற்கு சென்று உல்லாசமாக இருக்க வேண்டும் என்பது ஒவ்வொரு இளைஞர்களின் மிகப்பெரிய ஈர்ப்பும் கனவுமாகும். இசை, நடனம், கவர்ச்சி பெண்கள், ஆண் அழகர்கள் மற்றும் முற்றிலும் சுதந்திரமான உணர்வு என்ற பற்பல விஷயங்களை இளைஞர்கள் வாழ்வில் ஒரு முறையாவது அனுவவிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். இந்த இரவு கிளப் விதிப்படி 18 வயதிற்கும் குறைவானவர்கள் அங்கு செல்ல அனுமதி இல்லை. ஆகையால் 18 வயது நிரம்பியதும் நல்ல இரவு நேர கேளிக்கை கிளப் அல்லது லாஞ்சிற்கு சென்று உங்களது வாழ்வின் இனிய இரவுகளை கொண்டாடுங்கள்.
இரத்த தானம் செய்தல்
ஒவ்வொரு இளம் குடிமகனும், குடிமகளும் நிச்சயம் 3 மாததிற்கு ஒரு முறை இரத்த தானம் செய்ய முற்பட வேண்டும். 18 வயதிற்கு பிறகு தான் இந்த தானத்தை செய்ய முடியும் என்பதால் இதையும் உங்கள் பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள். நோயாளிகளுக்கும், உதவி தேவைப்படுபவர்களுக்கு சிறிளவு அக்கறை மற்றும் உதவிகளை செய்வதன் வழியாக உங்களுடைய சமூகத்தின் மீதான அக்கறையை அல்லது அன்பை வெளிபடுத்தலாம். எல்லா பொறுப்புள்ள மனிதர்களும் சற்றேனும் மனிதத்தன்மை உடையவராக இருக்க வேண்டும். இத்தகைய எண்ணங்களை வளர்த்துக் கொள்வதன் மூலம் நீங்கள் இந்த உலகத்தை மேன்மைப்படுத்துகிறீர்கள். 18 வயது நிறைந்த பின் நீங்கள் செய்யும் மிக சிறந்த காரியமாக இந்த இரத்த தானம் விளங்கும்.
பச்சை குத்துதல்
பச்சை குத்துதல் இந்த காலக்கட்டத்தில் இளைஞர்கள் விரும்பும் இனிமையான செயலாகும். இவ்வாறு செய்வதை நீங்கள் பெருமையாக சொல்லிக் கொள்ளலாம். துரதிர்ஷ்டவசமாக மை நிரம்பிய ஊசியை குத்திக்கொள்ள 18 வயது நிரம்பிய வாலிபராக இருக்க வேண்டும். இந்த வயது வந்த பின்பு பட்டாம் பூச்சி, நட்சத்திரம், உங்கள் துணைவரின் பெயர் என்று எதுவாகினும் உங்கள் உடம்பில் எங்கு வேண்டுமானலும் குத்திக் கொள்ளலாம். இதற்கான சுதந்திரம் உங்களுக்கு உண்டு.
ஓட்டுனர் உரிமம்
18 வயது நிரம்பும் முன்பே நிறைய குழந்தைகளுக்கும் வாகனம் ஓட்ட தெரிகின்றது. ஆனால் 18 வயதிற்கு பிறகு தான் சட்டப்பூர்வமான ஓட்டுனர் உரிமம் பெற முடியும். இது தான் பாதுகாப்பையும், நீங்கள் இந்த நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுனர் என்பதையும் பிரதிபலிக்கும். ஓட்டுனர் உரிமம் இல்லாமல்; வாகனத்தை இயக்குவது மிக பெரிய தவறாகும்.

-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home