31 December 2013

முஸ்லிம்கள் திவரவாதி அல்ல.



சில தினங்களுக்கு முன்பு பேருந்து பயணத்தின் போது ஒரு படம்(பெயர் தெரியவில்லை) காண நிகழ்ந்தது படத்தினுடைய ஒளி ஒலி பதிவின் தண்மை போன்றவற்றை காணும்பொழுது அது திரையுலக வல்லுனர்கள் அல்லாது சாதரன மனிதர்களாள் எடுக்கப்பட்ட குறும்படம் போன்று காட்சியளித்தது படத்தினுடைய கதைச் சுருக்கம்: ஆழ்கடல் வழியே தப்பித்து வரும் நான்கு தீவிரவாதிகள் மீனவர் ஒருவரிடம் தஞ்சம் கேட்கின்றனர். சந்தேகித்த மீனவரை சுட்டுக் கொன்றுவிட்டு நீலாங்கரை கடற்கரை பகுதியில் உள்ள ஆளில்லா வீடொன்றில் பதுங்கிக்கொள்கின்றனர். வீட்டுக்குள் நுழைந்ததும் அவர்கள் முஸ்லீம்கள் என்பதை காண்பிக்கும் வண்ணம் தங்களுடைய தொழுகையை நிறைவு செய்கிறார்கள். வீட்டில் பல்வேறு திட்டங்களை தீட்டும் தீவிரவாதிகளுக்கு இடையூரு செய்யும் விதமாக வீட்டின் உரிமையாளரும் அவரது இரு தோழிகளுமாக மூன்று இளம் பெண்கள் வீட்டிற்க்குள் நுழைகிறார்கள். ஒரு கட்டத்திற்க்கு மேல் தீவிரவாதிகளிடம் அகப்பட்டுக்கொள்ளும் பெண்கள் அவர்களுடன் வாக்குவாதம் செய்கின்றனர் அதன் போது உரிமையாளரின் பெயரை கேட்டு சாஹிரா பானு என்று சொன்னதும். தங்களை நியாயப்படுத்தி தாங்கள் தீவிரவாதிகளாக உருவான கதையை சொல்கிறார்கள் கதை கேட்ட மற்ற இரு பெண்கள் தவிர சாஹிர பானு என்னும் முஸ்லிம் பெண் மட்டும் அவர்களுடைய கருத்தை ஆதரித்து அவர்களுடைய இயக்கத்தில் இணைந்து கொள்கிறார் மகிழ்ச்சி தாளாத தலைவன் உன் மேல் நம்பிக்கை வரவேண்டும் என்றால் உன் தோழியை சுட்டுக் கொல் என்னும் கட்டளை காதில் எட்டும் முன் தோழியின் பிணம் தரை தொடுகிறது. எஞ்சிய ஒருத்தி மட்டும் தப்பிக்க முயற்ச்சி செய்து பின்பு மாட்டிக் கொள்கிறாள். திட்டம் தீட்டிய தலைவன் நம்மில் யார் மனித வெடிகுண்டாக மாறுகின்றீர்கள் என்று கேட்டதும் சாஹிரவிற்க்கு அந்த நற்பாக்கியம் கிடைத்ததாக புகழாரம் சூடுகின்றனர். சந்தோசத்தின் உச்சத்தை அடைந்த சாஹிராவின் உடலில் டைம் பாம் பொறுத்தப்பட்டு அப்பெண்ணுக்கு இஸ்லாமியர்களின் புர்கா அணிவிக்கப்படுகிறது... இதுவரை படம் ஓட விட்டு கதை வழியே அவர்கள் சொல்ல வரும் கருத்து என்ன என்பதை அவதானித்துக் கொண்டிருந்த நான் புர்கா கட்டத்திற்க்கு மேல் அமைதி கொள்ள முடியாமல் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரிடம் சென்று வாதிட்டேன் நீண்ட வாதத்திற்க்கு பிறகு திரைப்படம் நிறுத்தப்பட்டது. இது போன்ற நச்சுக்கருத்துக்கள் மூலம் நாட்டின் பல்வேறு மதக்கலவரங்ககள் அரங்கேற்றப்படுகிறது. தீவிரவாதம் என்றால் தொப்பியும் தாடியும் ஜுப்பாவும் தான் ஒரு சாமானிய மனிதனின் சிந்தனைக்கு கூட எட்டுகிறது இது போன்ற சிந்தனைகள் எல்லாம் இம்மாதிரியான சினிமாக்களின் கருத்தை மக்கள் உள்வாங்கிக் கொண்டதே முழுக்காரணம். தற்ப்பொழுது புர்க்கா அணியும் பெண்களை கண்டால் இவர்கள் ஆடைக்குள் டைம் பாம் தான் வைத்திருப்பார்கள் எந்த ஒரு சாதரண மனிதனையும் கூட தங்களின் வசீகரப் பேச்சாள் மூலைச்சலவை செய்து தோழர்களை கூட கொண்று தன்னையும் மனித வெடிகுண்டாக மாத்திக் கொள்வார்கள் போன்ற மிகவும் விஷமான பொய்யான கருத்தை மக்களின் மத்தியில் இந்துவாக்கள் கொண்டு செல்கிறார்கள். இவர்களுடைய நோக்கம் தான் என்ன வேற்றுமையிலும் ஒற்றுமை என்னும் கருத்தை உள்வாங்கிய இந்தியர்களாய் வாழும் நம்மிடையே பகைமையை உண்டுபன்னுவது தானா? உன் வீட்டு தீபவளிக்கு செய்த பலகாரம் என் வீட்டுக்கு வருவதும் என் வீட்டு ரம்ஜானுக்கு செய்த பிரியானி உன் வீட்டுக்கு வருவதுமாக இருந்து மாமன் மச்சானாய் வாழும் நம்மிடையே குரோதத்தை உண்டு செய்யும் இது போன்ற உண்மை தீவிரவாதிகளை நாம் இனம் காண வேண்டும். எச்சரித்து சொல்கிறோம் உன் போன்ற முட்டாள்கள் ஓரணி திரண்டு படை எடுத்தாலும் எங்கள் தொப்புள் கொடி உரவை உண்ணால் ஒரு போதும் அருக்க முடியாது என்பதை உணர்ந்துகொள். இவர்களுடைய கையில் நாட்டின் அதிகாரம் சென்றால் நாட்டின் நிலை என்னவாகும் என்பதை சிந்தித்து வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் இது போன்ற கேடி களை நாம் இந்துக்களாகவும் முஸ்லிம்களாக கிருத்துவராகவும் ஏனைய அனைத்து சாரர்களாகவும் ஒரணி திரண்டு மனிதநேயத்தை காத்து இது போன்ற விஷமிகளை புறக்கணிக்க வேண்டும். -ஜாவித் மியாண்டட்-
-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home