16 December 2013

வட்டி



அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்; இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. அல் பகறா (2-276)

ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்; இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (இதைத் தவிர்த்துக் கொண்டால்) வெற்றியடைவீர்கள். ஆல இம்ரான் (3-130)

வட்டியின் கெடுதியில் இருந்து தவிர்ந்துகொள்ள தனிமனிதர்கள் முயற்சிக்கலாம்! ஆனால் சமூகத்தில் இருந்து அதனை இல்லாதொழிக்க முடியாது! காரணம் அதனை அமுல்படுத்துவது அரசு! அரசினது கொள்கையை மாற்றுவதற்கு தேவையான பலம் அதிகாரம் கொண்ட சக்தி அரசுக்கு வெளியே வேண்டும்.

இன்று இலங்கையில் மேற்கினது வட்டியை அடிப்படையாகக் கொண்ட பொருளியல் முறை பின்பற்ற படும்போது அது நேரடியாகவும் மறைமுகமாகவும் எமது அனைத்துக் காரியத்திலும் வட்டியின் ஆதிக்கத்தை கொண்டிருக்கும். அந்த ஆதிக்கம் இல்லாமல் மாற வேண்டுமாயின் அதற்கு மாற்றீடான ஒரு இஸ்லாமிய பொருளியல் ஒழுங்கு உலகில் ஒரு மொடலாக அமுல்படுத்தப்படவேண்டும். அத்தகைய இஸ்லாமிய அரசை கிலாபாவை, மீள நபிவழியில் உருவாக்குவோமாயின் அது துண்டாடப்பட்ட 57 தேசங்களையும் ஒன்றிணைத்து சக்திவாய்ந்த வல்லரசாக மாறும். அதன் மூலம் சிறுபான்மையாக வாழும் இலங்கை போன்ற நாடுகளில் அதன் தாக்கத்தைக நாம் உணரலாம். இஸ்லாமிய பொருளாதா ஒழுங்கினது சாத்தியத் தன்மைகளை உணரலாம். இதுவே யதார்த்தமான உண்மை. இது வெறும் கனவல்ல. 1300 ஆண்டுகாலமாக உலகில் மூன்றில் இரண்டுபங்கு மக்கள் இஸ்லாத்தின் ஆளுகைக்கு உட்படுத்தப்பட்டு உலகில் வாழ்ந்து காட்டி இறை வழிகாட்டல். அது இன்ஷா அல்லாஹ் விரைவில் மலரும்! அதற்காக எமது பங்குபற்றி சிந்தித்து உரிய தாவா பணியில் எம்மை ஈடுபடுத்துவோம்!

http://sindhanaiforum.blogspot.com/2013/11/blog-post_9306.html?view=timeslide
-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home