ஆன்லைனில் பள்ளிப் படிப்பு! NIOS அறிமுகம்..
நீங்கள் பள்ளிப்படிப்பை சரியாகப் படிக்க முடியாமல் விட்டு விட்டோமே எனக்
கவலைப் படவேண்டாம். பத்தாம் வகுப்பு, மேல்நிலை வகுப்புப் படிப்புகளை
ஆன்லைன்மூலமாகவும், வீட்டில் இருந்தபடியே தொலைநிலைக் கல்வியின்
மூலமாகவும்படிப்பதற்கான வாய்ப்பினை வழங்குகிறது, நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப்
ஓபன்ஸ்கூலிங். மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின்கீழ் இயங்கி
வரும்அமைப்பு இது. பள்ளிப் படிப்பை இடையிலேயே விட்டு விட்டவர்கள்
இந்தஇன்ஸ்டிட்யூட் மூலம் படித்துத் தேர்வு
எழுதி, சான்றிதழ்களைப் பெறலாம்.கல்லூரிகளில் உயர் படிப்புகளுக்குச்
செல்லும்போதும், வேலை வாய்ப்பைப்பெறுவதற்கும் குறிப்பிட்ட பாடங்களைப்
படித்திருக்க வேண்டும் என்றுவிதிமுறைகள் இருக்கலாம். அதுபோன்ற சமயங்களில்,
அந்தப் பாடங்களை மட்டும்இந்த நிறுவனம் மூலம் படித்து, அவற்றில் தேர்ச்சி
பெற முடியும். ஏற்கெனவேநீங்கள் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி படிப்பு மற்றும்
கல்லூரியில்பட்டப்படிப்பு படித்தவராக இருந்தாலும் பள்ளி நிலையில் மேலும்
நான்குபாடங்கள் வரை படித்துத் தேர்ச்சி பெற்று, திறனை
மேம்படுத்திக்கொள்ளவும்வாய்ப்பு அளிக்கப்படுகிறது. குறிப்பிட்ட மையங்களில்
தொழிற்பயிற்சிப்படிப்புகளையும் படிக்கலாம்.
உயர்நிலைப் பள்ளிப் படிப்பைப் படிக்க 15 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். மேல்நிலைப் பள்ளிப் படிப்பைப் படிக்க 16 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிபடிப்புகளுக்கான புத்தகங்கள் இலவசம். பதிவுக் கட்டணம் ரூ. 250. ஒவ்வொருபாடத்திற்கும் தேர்வுக் கட்டணம் ரூ.250. சான்றிதழ்களைப் பெற கட்டணம்ரூ.100. தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இதன் படிப்பு மையம் உள்ளது.
விவரங்களுக்கு: http://nios.ac.in/
நன்றி: புதியதலைமுறைக்கல்வி
-அஷ்ரப்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home