31 December 2013

ஒரு கண்ணில் வெண்ணை! மறு கண்ணில் சுண்ணாம்பு !!



நேற்று இரவு வழக்கமாக வாழைப்பழம் வாங்கும் பெட்டிக் கடையில்
தொங்கவிடப்பட்டிருந்த பத்திரிகை பேனரை பார்த்துக் கொண்டிருந்தேன்.

" நாகர் : தாயைக் கொன்று சாக்கில் கட்டிய வாலிபர் "

என்ற தலைப்பைப் பார்த்து திடுக்கிட்டேன். பக்கத்தில் இரு பெரியவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களும் இதைப்பற்றியே பேசினார்கள்.

" ஆராம்பள்ளியிலே நடந்தது பாத்துக்கோ ...
வயக்காட்டிலே வச்சு போட்டு தள்ளிட்டா ன் "
" எதுக்கா வேண்டியாம் ?"
" எல்லாம் சொத்து தகராறுதான் "

" பால் கொடுத்து வளர்த்தத் தாயை கொல்ல எப்படிங்க மனசு
வந்துது ?" ன்னு நான் கேட்டேன்.
" அட போங்க பாய்...பெத்தவளுக்கு சொத்து இருந்து ரெண்டு பிள்ளைகளும் இருந்தா
அதை ரெண்டு பேருக்கும் சமமா பங்கு வச்சுக் கொடுக்கணுமா வேண்டாமா ? ஒருத்தனுக்குக் கொடுத்து இன்னொருத்தனுக்குக் கொடுக்காட்டா அவன்
என்ன பண்ணுவான் ... கொலைதான் பண்ணுவான் " அப்படின்னாரு ஒருத்தரு .

" ஒரு கண்ணுல வெண்ணையும் மறு கண்ணுல சுண்ணாம்பும் வச்சா
இதுதான் கதி " ன்னு இன்னொரு பெரியவர் நியாயம் சொன்னாரு.

" ஆனாலும் இப்படியா ? ன்னு நான் லேசாக முணுமுணுத்தேன்.

அந்த பெரிய ஆளுக்கு கொஞ்சம் கோபம் வந்து விட்டது. ( அவரும் பாதிக்கப்பட்டிருப்பார்போல ..)
" ரெண்டு பிள்ளைல ஒருத்தன் பணக்காரனா இருப்பான். இன்னொருத்தன் பாவமா இருப்பான்.. அது என்னங்க நியாயம் ? ஒரு நல்ல தாயிக்காரி
இப்படி செய்வாளா " னு கேட்டாரு.
எனக்கு பதில் சொல்லத் தெரியல...
நமக்கெதுக்கு வம்புன்னு வந்துட்டேன்.

" உங்கள் குடும்பத்தாரிடம் மனைவி மக்களிடம் நீதமாக
நடந்து கொள்ளுங்கள். அவர்களிடையே அநீதம் இழைக்காதீர்கள் "
என்ற நபிகளாரின் அறிவுரைதான் நினைவுக்கு வந்தது.
-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home