8 February 2014

• ஆண் துணையின்றி ஹஜ்ஜுக்கு சென்ற 400 நைஜீரியா பெண்கள் சவூதியில் தடுத்துவைப்பு

·        
ஆண் துணையின்றி ஹஜ்ஜுக்கு சென்ற 400 நைஜீரியா பெண்கள் சவூதியில் தடுத்துவைப்பு ஹஜ் யாத்திரைக்கு சென்ற சுமார் 400 நைஜீரிய பெண்களை சவூதி நிர்வாகம் தடுத்து வைத்துள்ளது. கடந்த வருடம் ஜித்தா நகரை சென்றடைந்த ஹஜ் யாத்திரிகர்களே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். நெருங்கிய ஆண் துணை (மஹ்ரம்) இன்றி ஹஜ் கடமைக்கு வந்த 398 நைஜீரிய நாட்டு பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இவர்கள் மீண்டும் நைஜீரியாவுக்கு நாடு கடத்தப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு தடுத்து வைக்கப்படவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்குவதற்கு மாத்திரமே அனுமதிக்கப்படுவதாக நைஜீரிய வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இனி தமிழ் நாட்டில் (முக்கியாமாக TNTJ சான்றவர்) இருந்து யாரும் நெருங்கிய ஆண் துணை (மஹ்ரம்) இன்றி ஹஜ் அல்லது உம்ரா செய்ய முயற்ச்சிக்க வேண்டாம்.
-
Abdullah Tamilian

பெண்கள் ஒரு நாள் பயணம் செய்ய வேண்டாம் என்பதற்க்கும், இரண்டு நாட்கள் பயணம் செய்ய வேண்டாம் என்பதற்க்கும், மூன்று நாட்கள் பயணம் செய்ய வேண்டாம் என்பதற்க்கு போன்ற ஹதீசுகள் காணலாம். அவைகளை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் என்பது தான் முக்கிய அம்சம். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று முடிவு எடுக்க கூடாது 
இமாம் நவவி (ரஹ்) அவர்கள் ஒரு நாள்,இரண்டு நாட்கள், மூன்று நாட்கள் பயணம் செய்ய வேண்டாம் ஹதீஸ்களை வைத்து அழகான கருத்தை சொல்லு இருக்கிறார். இவ்விவரங்களை காணப்படும் வேறுபாடு, வெவ்வேறு கேள்வி மற்றும் அதற்கூடிய பதில்கள், அவர்களுக்கு வழங்கப்பட்டது. அனைத்தும் அவர்களுடைய இடங்களில் காரணமாக அமைத்து உள்ளது என்று குறிப்பிடுகிறார்கள்.

இமாம் நவவி (ரஹ்) அவர்கள் கூறிய கருத்து பிரகாரம் நாம் அந்த ஹதீஸ்களை அணுகினால், எந்த முரணும் இல்லாமல் அமையும்.

மஹ்ரம் ஆண் துணை இல்லாமல் பெண்கள் செல்ல கூடாது என்று தெளிவாக கீழ் காணும் ஹதீஸ் மூலம் புரிந்து கொள்ளலாம்.

ஒரு பெண்ணுடன் எந்த (அந்நிய) ஆடவனும் தனிமையில் இருக்க வேண்டாம். (மண முடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினருடன் அவள் இருக்கும் போதே தவிர. ஒரு பெண் மணமுடிக்கத் தகாத நெருங்கிய ஆணுடன் தவிர பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( முஸ்லிம் 2611 )

இந்த ஹதீஸில் தெளிவாக சொல்ல பட்டு உள்ளது ஒரு பெண் மணமுடிக்கத் தகாத நெருங்கிய ஆணுடன் தவிர பயணம் மேற்கொள்ள வேண்டாம் .. இது பொதுவான சட்டம் என்பதை புரிந்து கொள்ளலாம்.-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home