விண்டோஸ் 7 பைல் மேனேஜிங் டிப்ஸ்...!
தற்போது
விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இயக்கப்படும் அனைத்து அப்ளிகேஷன்
புரோகிராம்களிலும், விண்டோஸ் எக்ஸ்ப்ளோரர் வசதியினைப்
பயன்படுத்தலாம்.
பலரும்
அறியாத ஒரு வசதியை, இங்கு நாம் பார்க்கலாம் நண்பரே இது பெரும்பாலும்
பலர் அறிந்திருக்க வாய்பில்லை.
பைல்
ஒன்றைத் திறக்கும் போதும், சேவ் செய்திடும்போதும், சிஸ்டமானது,
சிறிய அளவில் விண்டோஸ் எக்ஸ்ப்ளோரர் டூலைப் பயன்படுத்துகிறது.
இதனால்
என்ன என்கிறீர்களா? இதனால் தான் நமக்குக் கூடுதல் வசதிகள் கிடைக்கின்றன.
பைல் ஒன்றை ""சேவ்'' அல்லது save as கொடுக்கையில், கிடைக்கும் டயலாக் பாக்ஸில் உள்ள
காலியான இடத்தில், ரைட் கிளிக் செய்திடவும்.
இங்கு
அப்போது காட்டப்படும் போல்டரில் உள்ள பைல்களை எப்படிப் பார்க்க வேண்டும், எப்படி பிரிக்கப்பட வேண்டும், அல்லது குழுவாக அமைக்க
வேண்டும் என்பதனைத் தீர்மானித்து மேற்கொள்ளலாம்.
இந்த
டயலாக் பாக்ஸில் New என்பதனைக் கூடத் தேர்ந்தெடுத்து, புதிய பைல் ஒன்றைத் திறக்கலாம்.
அதே
போல, பைல் ஒன்றை சேவ் செய்கையில், திருத்தங்களுக்கு
முந்தைய பதிப்பினையும், திருத்தங்களுடன் கூடிய பதிப்பினையும்
தனித்தனியே சேவ் செய்திட விரும்பலாம். இதனை ஒரே முயற்சியில் அமைக்கலாம்.
சேவ்
டயலாக் பாக்ஸில் இருக்கையிலேயே, பார்க்க விரும்பும் பைலில்
ரைட் கிளிக் செய்து, "Open" தேர்ந்தெடுக்க
வேண்டும். அந்த பைல் புதிய விண்டோவில் திறக்கப்படும்.
இப்போது
எந்த பைலையும் பிரிண்ட் செய்திடலாம், வேறு பெயர்
கொடுத்து சேவ் செய்திடலாம், நீக்கலாம் மற்றும் வேறு
போல்டர்களுக்கு எடுத்துச் செல்லலாம். இவை அனைத்தையும் அதே "Save"
டயலாக் பாக்ஸில் இருந்தபடி மேற்கொள்ளலாம்.
-அஷ்ரப்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home