1 February 2014

இந்தியக் கார்களின் தரம்....!

உலகில் அதிகம் விற்பனையாகும் கார்களின் பாதுகாப்பு குறித்த சோதனை ஜெர்மனியில் நடத்தப்பட்டது. லண்டனைச் சேர்ந்த கார் மதிப்பீட்டு நிறுவனம் நடத்திய இந்தச் சோதனைக்கு, இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் டாடா நானோ, மாருதி ஸூசுகி ஆல்டோ 800, ஹூண்டாய் ஐ10, ஃபோர்டு பிகோ மற்றும் வோல்க்ஸ்வேகன் போலோ ஆகிய 5 இந்திய பிராண்டட் சிறிய ரக கார்கள் தோ்வு செய்யப்பட்டன.
ஒவ்வொரு பிராண்டிலும் தலா இரண்டு கார்களை கப்பல் மூலம் ஜொ்மனிக்கு அனுப்பினார்கள். இந்தக் கார்களை வேகமாக ஓட்டிச் சென்று மோத விட்டு சோதனை நடத்தப்பட்டது. ஒரு சோதனை 56 கி.மீ வேகத்திலும் மற்றொரு சோதனை 64 கி.மீ வேகத்திலும் நடத்தப்பட்டது. 5 கட்டங்களாக நடந்த இந்த சோதனையில் அனைத்து கார்களும் தோல்வியை தழுவின.

குறிப்பாக உலக அளவில் பாதுகாப்பு சோதனையில் இன்றியமையாததாக கருதப்படும் ஏர்பேக்குகள் எனப்படும் காற்றுப் பைகள் மேற்கண்ட எந்த காரிலும் இல்லை. ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் நடக்கும் ஐந்து லட்சம் சாலை விபத்துக்களில் சுமார் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் பேர் உயிரிழக்கின்றனர். கார்களின் பாதுகாப்பு குறித்த எந்தச் சோதனையும் இந்தியாவில் நடத்தப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி :- அமராவதிபுதூர் பிரேம்நாத்-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home