வெந்நீரிலும் இருக்கிறது பயன்கள்
தண்ணீர் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவுகிறது என்று நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் சுடு தண்ணீரிலும் பயன்கள் இருப்பது உங்களுக்கு தெரியுமா?
யாருக்காவது சமையல் சுத்தமாக தெரியாவிட்டால், அவர்களை நாம் கேலி செய்திருப்போம். ‘‘அவளுக்கு நல்லா வெந்நீர் போட வரும்...’’ என்று. உண்மையில் நாம் வெந்நீரின் மகிமை தெரியாமல்தான் அப்படி கேலி செய்திருக்கிறோம். வெந்நீரால் எத்தனை பலன்கள் என்று இப்போது பார்க்கலாம்.... !
அளவுக்கு அதிகமான உணவோ அல்லது ஏதாவது எண்ணெய்ப் பலகாரம், சுவீட், அல்லது பூரி சாப்பிட்ட பிறகு நெஞ்சு கரித்துக் கொண்டிருந்தால் ஒரு டம்ளர் வெந்நீரை எடுத்து பருகுங்கள். கொஞ்ச நேரத்தில் நெஞ்சு எரிச்சல் போய்விடும், உணவும் செரித்துவிடும். காலையில் சரியாக மலம் கழிக்க முடியவில்லை என்று ஃபீல் பண்ணுகிறவர்கள் ஒரு தம்ளர் வெந்நீரை உடனே குடியுங்கள். மலப்பிரச்சனைக்கு முற்றுபுள்ளி வையுங்கள்.
வெந்நீர் குடித்தால் உங்கள் உடலில் போடும் அதிகப்படி சதை குறையவும் வாய்ப்பிருக்கிறது. சாப்பிட்டு முடித்ததும் சுடுதண்ணீர் பருகினால் இதயத்திற்கு மிகவும் நல்லது. ஏனெனில் கொழுப்புகளை சேரவிடாமல் கரைத்துவிடும் சக்தி வெந்நீருக்கு உள்ளது. வீட்டில் தாங்களே பாத்திரம் தேய்த்து, துணி துவைக்கும் பெண்கள், வாரத்திற்கு ஒரு முறையேனும் உங்கள் கைகளை வெந்நீரில் கொஞ்ச நேரம் வைத்திருங்கள். இதன் மூலம் நக இடுக்கில் இருக்கும் அழுக்குகள் நீங்கி, உங்கள் கைகள் சுத்தமானதாக, ஆரோக்கியமாக இருக்கும்.
உடம்பு வலிக்கிற மாதிரி இருந்தால் நன்றாக வெந்நீரில் குளித்துவிட்டு, வெந்நீரில் கொஞ்சம் சுக்குத்தூள், பனங்கற்கண்டு போட்டு சூடாக அருந்துங்கள் நன்றாகத் தூக்கம் வருவதோடு, வலியும் பறந்துவிடும்.. மேலும் சுக்கு வெந்நீரையும் குடித்துவிட்டுப் படுத்தால், பித்தத்தினால் வரும் வாய்க்கசப்பு மறைந்து விடும்.
வெளியில் சென்று அலைந்துவிட்டு வந்தால் கால் பாதங்கல் வலிக்கும். அவ்வாறு வலிக்கும் போது பெரிய பிளாஸ்டிக் டப்பில் கால் சூடு பொறுக்குமளவுக்கு வெந்நீர் ஊற்றி அதில் உப்புக்கல்லைப் போட்டு, அதில் கொஞ்ச நேரம் பாதத்தை வைத்து எடுங்கள் கால் வலி குறையும்.. காலில் அழுக்கு இருப்பது போல் தோன்றினால், வெந்நீரில் கொஞ்சம் டெட்டால் ஊற்றி அதில் பாதத்தை வைத்தால், பாதமும் சுத்தமாகிவிடும்.
மூக்கு அடைப்புக்கு சிறந்த மருத்துவர் வெந்நீர்தான். வெந்நீரில் விக்ஸ் அல்லது அமிர்தாஞ்சனம் போட்டு அதில் முகத்தைக் காண்பித்தால், மூக்கடைப்பு குணமாகும். வெயிலில் அலைந்து விட்டு வந்து உடனே சில்லென்று ஐஸ்வாட்டர் அருந்துவதைவிட, சற்றே வெதுவெதுப்பான வெந்நீர் அருந்துவது, தாகம் தீர்க்கும் நல்ல வழி.
ஈஸினோபீலியா, ஆஸ்துமா போன்ற உபாதைகள் இருப்போர், உங்களுக்கு தாகம் எடுக்கும் போதெல்லாம் கண்டிப்பாக வெதுவெதுப்பான வெந்நீர் குடியுங்கள். அதுபோலவே, ஜலதோஷம் பிடித்தவர்களும் வெந்நீர் குடித்தால், அது அந்த நேரத்துக்கு நல்ல இதமாக இருப்பதோடு விரைவில் குணமாகும்..
-அஷ்ரப்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home